No menu items!

2022-ல் ஆச்சர்யமூட்டிய 3 படங்கள்

2022-ல் ஆச்சர்யமூட்டிய 3 படங்கள்

2022 ஏறக்குறைய தனது ஆட்டத்தை முடித்து கொள்ள தயாராகிவிட்டது.

உண்மையைச் சொல்லப்போனால் 2022 பாக்ஸ் ஆபிஸில் பின்னியெடுத்திருக்கிறது.

பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்கள் வசூலில் புகுந்து விளையாடி இருந்தாலும், மற்றொரு பக்கம் 15 -16 கோடிகளில் எடுக்கப்பட்ட மூன்றுப் படங்கள் 100 கோடிக்கும் மேல் கலெக்‌ஷன் செய்து எல்லோரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கின்றன.

முதலில் ‘காந்தாரா’. வெறும் 16 கோடியில் எடுக்கப்பட்ட கன்னடப் படம். இந்தியாவையே ’வராஹ ரூபம்’ பாடலின் இசையால் மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. இதனால் இப்படம் ஒட்டுமொத்தமாக 400 கோடி வசூலித்திருக்கிறது.

அடுத்து ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’. இந்தியில் வெளியான இப்படத்தின் இயக்குநர் மற்றூ தயாரிப்பாளர் விவேக் அக்னிஹோத்ரி சொல்லும் பட்ஜெட் 15 கோடி. இந்தியாவில் அதிர்வலைகளை உருவாக்கிய இப்படம் ஒட்டுமொத்தமாக 340 கோடி வசூல் செய்திருக்கிறது.

,மூன்றாவது படம். தெலுங்கில் வெளிவந்திருக்கும் ‘கார்த்திகேயா 2’. இப்படத்தின் நாயகனாக நிகில் சித்தார்த்தா, படத்தின் பட்ஜெட் 15 முதல் 16 கோடிதான் என்று வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். ‘கார்த்திகேயா 2’ பாக்ஸ் ஆபிஸில் 125 கோடி வசூலை அள்ளியிருக்கிறது.

குறைந்த பட்ஜெட் படங்களுக்கும் கூட பம்பர் ஹிட்டை கொடுத்து சினிமாவுக்கு உற்சாகமளித்திருக்கிறது 2022.


மனமுடைந்த நயன்தாரா. காரணம் இதுதான்!

நயன்தாரா நடிக்கும் படங்களில் முன்னணி கமர்ஷியல் ஹீரோவுக்கு ஜோடியாக நடித்தாலும், ஷூட்டிங் முடிந்ததும்… அந்தப் படத்திற்கான ப்ரமோஷன்கள் எதிலும் கலந்து கொள்வது இல்லை.

ஆனால் சமீபத்தில் அவரது காதல் கணவர் விக்னேஷ் சிவன் தயாரித்து வெளியிட்டு இருக்கும் ‘கனெக்ட்’ படத்தின் ப்ரமோஷனுக்கு மட்டும் பேட்டிகள் கொடுத்தார். போட்டோகளுக்கு போஸ் கொடுத்தார்.

இதுதான் இப்போது பெரும் சர்ச்சை ஆகியிருக்கிறது. நயன்தாரா மீது பல தயாரிப்பாளர்கள் கொஞ்சம் கடுப்பில் இருக்கிறார்கள்.

இந்நிலையில் ’நான் ஏன் பட ப்ரமோஷன்களில் கலந்து கொள்வது இல்லை’ என்பதற்கான விளக்கத்தை நயன்தாரா போட்டு உடைத்திருக்கிறார்.

சினிமாவில் நடிக்க ஆரம்பித்து ஏறக்குறைய இருபது ஆண்டுகளாகிவிட்ட நிலையில் இப்போது மனம் திறந்திருக்கிறார் நயன்தாரா.

ஹீரோயின்களுக்கு மட்டும் ஏன் முக்கியத்துவம் கொடுப்பது இல்லை என நான் பல முறை ஆச்சர்யப்பட்டிருக்கிறேன். ’பட விழாக்களிலோ அல்லது ஆடியோ வெளியீட்டு விழாவிலோ நடிகைகள் கலந்து கொண்டால், அவர்களை ஒரு ஓரமாக நிற்க வைத்துவிடுகிறார்கள். இதனால்தான் நான் பட விழாக்களில் கலந்து கொள்வதை நிறுத்தி கொண்டேன்’ என்று ஆதங்கப்பட்டிருக்கிறார்.

மேலும் அவர், ‘’நடிகர்களைப் போலவே நடிகைகளையும் சமமாக நடத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன். சமமாக இல்லையென்றாலும் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்’’ என்று இவ்வளவு நாட்களாக தனது மனதில் எரிமலை லாவா போல கொதித்து கொண்டிருந்த உணர்வுகளைக் கொட்டியிருக்கிறார்.


கமல் அதிரடி முடிவு.

இத்தனை ஆண்டுகாலம் சினிமாவில் சம்பாதித்து, அதையெல்லாம் சினிமாவிலேயே விட்ட கமலுக்கு, ’விக்ரம்’ படம் மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது.

நான்கு வருடங்களாக படங்கள் எதுவும் பண்ணாமல் இருந்த கமலுக்கு ஒரே ஆறுதல் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது அரசியல் கருத்துகளையும் அவ்வப்போது பகிர்ந்து கொள்ள அதை ஒரு தனக்கான தளமாக மாற்றிக்கொண்டார் கமல்.

ஆனாலும் அவரது அரசியல் ஆட்டம் சூடுப்பிடிக்கவே இல்லை.

இதனால் அரசியலிலிருந்து கவனத்தை திரைப்படங்கள் பக்கம் திருப்ப கமல் விரும்புகிறாராம். இப்பொழுது ’விக்ரம்’ மூலம் கிடைத்திருக்கும் கமர்ஷியல் ஹீரோவுக்கான மார்க்கெட்டை தக்க வைக்க நினைக்கிறாராம்.
தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தினால் மட்டுமே அது சாத்தியம் என்பதால். தற்போது சின்னதிரையில் கலந்து கொண்டு வரும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இருந்து விலகிக் கொள்ளலாமா என்று தீவிரமாக யோசித்து வருகிறாராம்.

’பிக் பாஸ்’ நிகழ்ச்சியிலிருந்து கமல் வெளியேறினார் என்று கூடிய சீக்கிரம் செய்திகள் வந்தாலும் வரலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...