No menu items!

ரஜினியின் மகளாகும் ஷ்ருதி ஹாசன்

ரஜினியின் மகளாகும் ஷ்ருதி ஹாசன்

லோகேஷ் கனகராஜூக்கும், கமலுக்கு இடையே இருக்கும் ஆண்டவர் – ஃபேன் பாய் உறவு நாளுக்கு நாள் நெருக்கமாகி கொண்டே போவதாக கூறுகிறார்கள்.

நான்கு வருடங்கள் சினிமா பக்கமே தலைக்காட்டாமல் இருந்து, இதுவரை எடுத்தப் படங்களால் எக்கச்சக்கமான கடன் சுமையோடு இருந்த கமல் ஹாசனுக்கு, லோகேஷ் கனகராஜ் கொடுத்த ‘விக்ரம்’ வெற்றி, கமலின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டிருக்கிறது. இதனால்தான் லோகேஷ் கனகராஜ் என்றால் கமல் அப்படி உருகுகிறார்.

இதனால் தன் மகள் ஷ்ருதி ஹாசனுக்காக ராஜ் கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்தினால் தயாரித்த பாடல் இசைக்கும் லோகேஷ் கனகராஜை நடிக்க வைத்தார். இதில் நெருக்கமாக நடிக்க கூச்சப்பட்ட லோகேஷை, தலைவரின் மகள் என்று தயங்கிய லோகேஷை, தைரியமாக நடிக்க சொல்லி ஊக்கப்படுத்தியவர் ஆழ்வார்பேட்டை ஆண்டவரின் மகள் ஷ்ருதி ஹாசன்.

இப்படி அப்பாவும், மகளும் ரொம்பவே பாசத்தைக் கொட்ட, இப்போது லோகேஷ் கனகராஜ், தான் அடுத்து இயக்கவிருக்கும் படத்தில் ரஜினியின் கதாப்பாத்திரத்தின் மகளாக ஷ்ருதி ஹாசனை நடிக்க வைக்கலாமா என்று யோசனையில் இருக்கிறாராம்.

ஆனால் லோகேஷ் கனகராஜ் யோசனையை ரஜினியும் கமலும் ஒப்புக்கொண்டிருப்பதாகவும் ஒரு தகவல் கசிந்திருக்கிறது. ரஜினியும், கமலும் இணைந்து நடித்து 25 ஆண்டுகளாகி விட்டன. இந்நிலையில் ரஜினியின் மகளாக ஷ்ருதி ஹாசன் நடித்தால் அது படத்தின் விளம்பரத்திற்கும், வியாபாரத்திற்கும் நல்ல யுக்தியாக இருக்கும் என்பதால் உடனே அதை செய்யுங்கள் என்று தயாரிப்பு தரப்பும் கூறியிருக்கிறதாம்.


விஜயின் ’விசில் போடு’ சாதனையும் சோதனையும்

விஜய் – வெங்கட் பிரபு கூட்டணி முதல் முறையாக இணைந்திருக்கும் ‘தி க்ரேட்டஸ்ட் ஆஃப் அல் டைம்’ படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் வெளியாகி இருக்கிறது. வழக்கம் போல் வெங்கட் பிரபு படங்களுக்கு இசையமைக்கும் ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாதான் இதற்கு இசையமைத்து இருக்கிறார்.

இந்தப் பாடல் வரிகளுடன் வெளியிடப்பட்டிருக்கும் பாடலுக்கு எதிர்பார்த்த வரவேற்பு இல்லை என விஜய் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள். பொதுவாகவே விஜய் படங்களில் பாடல்கள் தூக்கலாக இருக்கும். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்திற்கு விஜய் பட பாடல்கள் உத்திரவாதம் கொடுப்பதாக இருக்கும். ஆனால் கோட் படத்தில் இருந்து வெளியாகி இருக்கும் முதல் சிங்கிளே இப்படி இருக்கிறதே…. யுவன் ஷங்கர் ராஜா மற்றப்பாடல்களையும் சொதப்புவாரா இல்லை இதுவரையில்லாத மாதிரி சரவெடியாக கொடுப்பாரா என்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன.

’விசில் போடு’ பாடல் வெளியான ஒரே நாளில் சுமார் 30 மில்லியன் பார்வைகளைப் பெற்று ஒரு புதிய சாதனையைப் படைத்திருக்கிறது. அதாவது பாடல் வெளியான 24 மணி நேரத்தில் அதிகப் பார்வைகளைப் பெற்ற தென்னிந்திய பாடல்வரி காணொலி என்ற சாதனையைப் படைத்திருக்கிறது.

ஆனால் மறுபக்கம் பல சோதனைகளுக்கு உள்ளாகி இருக்கிறது. இந்தப் பாடல் வெளியாகி 24 மணிநேரத்தில் வெற்றும் 1.3 மில்லியன் லைக்குகளை மட்டுமே பெற்றிருக்கிறது. இதன் மூலம் அதிகம் லைக்குகளை பெற்ற பாடல்களின் வரிசையில் நான்காவது இடத்தைதான் பிடித்திருக்கிறது. இந்த வகையில் அதிக லைக்குகளை பெற்ற பாடலாக முதலிடத்தில் இருப்பது விஜயின் பாடல்தான். ’பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்ற ‘அரபிக்குத்து’ பாடல்வரி காணொலி 2.20 மில்லியன் லைக்குகளை பெற்றிருக்கிறது. ’லியோ’ பட ‘நா ரெடி’ பாடல்வரி காணொலி 1.6 மில்லியன் லைக்குகளையும், ’வாரிசு’ பட ‘ரஞ்சிதமே’ பாடல்வரி காணொலி 1. 35 மில்லியன் லைக்குகளையும் பெற்றிருக்கிறது.

இதனால் விஜய் பட பாடல்வரி காணொலிகளில், ‘விசில் போடு’ நான்காவது இடத்தைதான் பிடித்திருக்கிறது. இதுதான் இப்போது விஜய் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...