No menu items!

வாவ் எதிர்காலம்: நயன்தாரா ராசி எப்படி இருக்கு?

வாவ் எதிர்காலம்: நயன்தாரா ராசி எப்படி இருக்கு?

வார ராசி பலன்: மே 9 – மே 15 வரை

ஜோதிடர் DR. N.ஞானரதம் M.A., PH.D.,

செல் +91 93810 90389

மேஷம்: வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும்

உத்தியோகஸ்தர்களுக்கு சம்பளப் பாக்கி கைக்கு வரும். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்று புதுவீடு வாங்குவீர்கள். வாகனம், வீடு பராமரிப்பு செலவுகள் அதிகமாகும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். பிரபலங்கள் உதவுவார்கள். சமூகத்தில் அந்தஸ்து ஒருபடி உயரும். உங்கள் உடல் உஷ்ணம் அதிகமாகும். அடிவயிற்றில் வலி, சளித் தொந்தரவு வந்து நீங்கும்.

அதிர்ஷ்ட தேதிகள்: 10, 12

அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம், பச்சை


ரிஷபம்: கூடுமானவரை கவனமாக இருக்கவும்

மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும். வெளி நாட்டு நண்பர்கள் தங்களுக்கு உதவுவர். சிலருக்கு கௌரவப் பதவிகள் தேடி வரும். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். தூக்கமின்மை, கனவுத் தொல்லை வந்து செல்லும். யாருக்கும் பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். கூடுமானவரை கவனமாக இருக்க வேண்டும். வாயுத் தொந்தரவால் நெஞ்சு வலிக்கும்.

அதிர்ஷ்ட தேதிகள்: 12, 15

அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, சிவப்பு


மிதுனம்: காதல் பிரச்சினைகள் தீரும்

காதல் விவகாரத்தில் இருந்து வந்த குழப்பங்கள், பிரச்சினைகள் தீரும். வேலை கிடைக்கும். வீடு, மனை வாங்குவது விற்பது லாபகரமாக முடியும். தாய்வழி சொத்து வந்து சேரும். உத்தியோகத்தின் பொருட்டு நீங்கள் பிள்ளைகளைப் பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். உயர்கல்வியில் நாட்டம் உண்டாகும். திருமணப் பேச்சுவார்த்தை நல்ல விதத்தில் முடியும்.

அதிர்ஷ்ட தேதிகள்: 9, 11

அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெள்ளை


கடகம்: புதிய முயற்சிகள் கைகூடும்

விலை உயர்ந்த தங்க ஆபரணங்களைக் கவனமாகக் கையாளுங்கள். மொத்தத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். திடீர் பயணங்களால் அலைச்சல், செலவுகள் இருக்கும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். கோவில் கும்பாபிஷேகத்தில் முதல் மரியாதைக் கிடைக்கும். உணவில் எச்சரிக்கை அவசியம். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட தேதிகள்: 12, 14

அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம், கிரே


சிம்மம்: வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

விடா முயற்சியாலும் கடின உழைப்பாலும் புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். மனைவி வழியில் உதவிகள் உண்டு. ஆனால், மனைவியுடன் கருத்து மோதல்கள் வரும். அமைதி காக்கவும். அதிவேகமாக வாகனத்தை இயக்க வேண்டாம். கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்த உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட தேதிகள்: 10, 12

அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம், ஊதா


கன்னி: லாபம் அதிகரிக்கும்

நீண்ட நாட்களாக சந்திக்க வேண்டுமென்று நினைத்திருந்த நண்பர், உறவினர்களை சந்தித்து மகிழ்வீர்கள். சகோதர, சகோதரிகள் உறுதுணையாக இருப்பார்கள். ஏற்றுமதி-இறக்குமதி, உணவு, மருந்து, வாகன உதிரி பாகங்களால் லாபம் அதிகரிக்கும். புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள்.

அதிர்ஷ்ட தேதிகள்: 9, 12

அதிர்ஷ்ட நிறங்கள்: சிவப்பு, வெள்ளை


துலாம்: செலவு செய்வதில் கவனம்

பண விஷயத்தில் கறாராக இருங்கள். மற்றவர்களுக்காக கேரண்டி கையொப்பமிட வேண்டாம். அவ்வப்போது மறதி, முன்கோபம் வந்து போகும். மாணவர்களுக்கு நினைவாற்றல் பெருகும். செலவு செய்வதில் கவனம் தேவை. நல்ல அந்தஸ்தில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அவர்களின் நட்பால் ஆதாயமடைவீர்கள். சொத்து வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும்.

அதிர்ஷ்ட தேதிகள்: 11, 14

அதிர்ஷ்ட நிறங்கள்: கடல் நீலம், பச்சை


விருச்சிகம்: வசதி, வாய்ப்புகள் பெருகும்

புகழ்பெற்ற புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். உறவினர்களில் ஒருசிலர் உங்களுடைய புத்திசாலித்தனத்தை மெச்சுவார்கள். வசதி, வாய்ப்புகள் பெருகும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். பழைய கசப்பான சம்பவங்களை நினைத்துப் பார்த்து அச்சப்படாதீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும்.

அதிர்ஷ்ட தேதிகள்: 9, 11

அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, பச்சை


தனுசு: கனவு நனவாகும்

வியாபாரத்தில் வரும் போட்டிகள் குறையும். அதிக லாபம் ஈட்டுவீர்கள். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். வேலையாட்களிடம் கனிவாகப் பேசி வேலை வாங்குவீர்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். ஒரு சிலர் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிக்கு கடையை மாற்றுவீர்கள். புது பங்குதாரர்களால் உற்சாகமடைவீர்கள். நீண்ட கால கனவு நனவாகும்.

அதிர்ஷ்ட தேதிகள்: 12, 14

அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, ஆரஞ்சு


மகரம்: நடிகை நயன்தாரா ராசி

ரசனைக் கேற்ப வரன் அமையும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். சிலருக்கு வெளிமாநிலம், அயல்நாட்டில் வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் நெருக்கடி தந்த அதிகாரி மாறுவார். வேலைச்சுமை அதிகரித்தாலும் சக ஊழியர்களின் ஆதரவால் முன்னேறுவீர்கள். மறைமுக அவமானங்களும் வந்து போகும். உடல் நிலை சீராகும். நண்பர்கள் உதவுவர். புதிய தொழில் துவங்குவீர்கள்.

இந்த ராசிக்கு இப்போது ஏழரை சனி நடந்துகொண்டிருக்கிறது. ஆனாலும், நயன்தாரா நடித்த ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் நன்றாகத்தான் போகிறது. காரணம், மங்காத நயன்தாரா தனித்துவம்.

அதிர்ஷ்ட தேதிகள்: 10, 12

அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, மஞ்சள்


கும்பம்: பொது இடத்தில் வெளிப்படையாக பேச வேண்டாம்

பெற்றோருடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். பழுதான வாகனம் சரி செய்வீர்கள். உங்களைப் பற்றிய வதந்திகள் அதிகமாகும். பொது இடத்தில் வெளிப்படையாகப் பேசி சிக்கிக்கொள்ள வேண்டாம். நட்பு வட்டம் விரிவடையும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது ஒரு பயம் வரும். அதை சமாளிக்கும் வழி கிடைக்கும். பொறுப்பான வேலையாட்கள் பணியில் வந்து சேருவார்கள்.

அதிர்ஷ்ட தேதிகள்: 9, 15

அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்


மீனம்: தடைகள் நீங்கும்

வியாபாரத்தில் கணிசமாக லாபம் கூடும். கமிஷன், புரோக்கரேஜ் வகைகளால் பணம் வரும். தடைகளெல்லாம் நீங்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்திருந்த வேலைக்கான அழைப்பு இப்போது வரும். வேலையாட்கள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். பங்குதாரர்களை உங்களுடைய பேச்சுத் திறமையால் சரி செய்வீர்கள்.

அதிர்ஷ்ட தேதிகள்: 11, 14

அதிர்ஷ்ட நிறங்கள்: கிரே, பச்சை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...