No menu items!

பிரதமர் மோடி வருகை – திண்டுக்கல்லில் பாதுகாப்பு தீவிரம்

பிரதமர் மோடி வருகை – திண்டுக்கல்லில் பாதுகாப்பு தீவிரம்

திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்துகொள்வதால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பிரதமர் வருகையையொட்டி மதுரை விமான நிலையத்தில் நேற்று முதல் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலைய ஓடுபாதை, கண்காணிப்பு கோபுரம், விமான நிலைய உள்வளாகம் ஆகிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற உள்ள பல்நோக்கு அரங்கம் பிரம்மாண்டமாக நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

காந்தி கிராமிய பல்கலைக்கழக வளாகப் பகுதியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக வளாகத்திற்குள் கல்லூரி மாணவ-மாணவியர் பேராசிரியர்கள் பல்கலைக்கழக பணியாளர்கள் உட்பட அனைவரும் தீவிரமாக சோதனை செய்யப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

விமான நிலையத்தைச் சுற்ரியுள்ள கிராமங்களில் வானவெடிக்கைகள் வெடிக்கக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல சின்னாளப்பட்டி, காந்திகிராமம், அம்பாத்துரை, அம்மைநாயக்கனூர், செம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் டிரோன்கள் பறக்கவும் தடைவிதித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் 45 இடங்களில் என்ஐஏ சோதனை

தமிழகத்தில் கோவை, சென்னை உள்பட 45 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

சென்னையில் மண்ணடி, ஜமாலியா, புதுப்பேட்டை, பெரம்பூர் உள்ளிட்ட 5 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். கோவையில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்தது. கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த முபினுடன் தொடர்புடையவர்கள், தடை செய்யப்பட்ட இயக்கங்களின் ஆதரவாளர்கள் என சந்தேகப்படுபவர்கள் வீடுகளில் இந்த சோதனை நடைபெற்றது. திருப்பூரில் ஜமேஷா முபினின் தங்கை கணவர் வீடு, மயிலாடுதுறையில் ஒருவர் வீடு என பல இடங்களில் சோதனை நடைபெற்றது.

குஜராத் சட்டப்பேரவை தேர்தல் : ரவீந்திய ஜடேஜா மனைவி போட்டி

குஜராத் சட்டசபை தேர்தலில் 160 தொகுதிக்கான முதல் வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டு உள்ளது. இதில் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவிக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5-ம் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறுகின்றன. தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் பட்டியலை தயார் செய்வதற்கான ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்தது. இதில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, தேசிய பா.ஜ.க. தலைவர் நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து தேர்தலில் 160 தொகுதிக்கான முதல் வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. இன்று வெளியிட்டு உள்ளது. இதனை அக்கட்சியின் தேசிய பொது செயலாளர் துஷ்யந்த் குமார் கவுதம் வெளியிட்டு உள்ளார்.

இந்த தேர்தலில் குஜராத் முதல்-மந்திரியான பூபேந்திர பட்டேல் கத்லோடியா தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார். குஜராத் உள்துறை மந்திரி ஹர்ஷ் சாங்கவி மஜூரா தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார். ஜாம்நகர் வடக்கு தொகுதியில் இருந்து பா.ஜ.க. வேட்பாளராக கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவபா ஜடேஜா போட்டியிடுகிறார் என அவர் தெரிவித்து உள்ளார்.

20 மசோதாக்கள் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளன – சட்ட அமைச்சர் ரகுபதி

தமிழக அரசு அனுப்பிய 20 சட்ட மசோதாக்கள் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “2022-23 கல்வியாண்டிற்கான முதுநிலை சட்டப் படிப்புகளுக்கான இணையவழி ஒற்றை சாளர கலந்தாய்வுக்கு சட்டக்கல்வி இயக்கத்தின் வாயிலாக 1433 விண்ணப்பங்கள் வரப்பெற்றன. கடந்த நவ.5-ம் தேதி சட்டக் கல்வி இணையதளத்தில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் முதல் 10 இடங்களைப் பிடித்தவர்களுக்கு மாணவர் சேர்க்கை அனுமதி கடிதம் இன்று வழங்கப்பட்டது

ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் தொடர்பான சட்ட மசோதா, ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று இன்னும் வரவில்லை. ஆளுநர் அதற்கான ஒப்புதல் வந்தவுடன் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் தலைமையில் அமைக்கப்படும்.ஏற்கெனவே கொண்டுவரப்பட்ட அவசர சட்டத்தின் ஷரத்துகள்தான் தற்போது அனுப்பியுள்ள அவசர சட்டத்திலும் இடம்பெற்றுள்ளன. புதிதாக எதுவும் இல்லை. ஒருவேளை விளக்கம் எதுவும் கேட்கப்பட்டால், விளக்கம் அளிக்கவும் தயாராக இருக்கிறோம். ஆளுநரிடம் 20 சட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளன” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...