No menu items!

Troll, Negativityனால – லைஃபே போயிருச்சு! – ராஷ்மிகா மந்தா உருக்கம்

Troll, Negativityனால – லைஃபே போயிருச்சு! – ராஷ்மிகா மந்தா உருக்கம்

NationalCrush என்று இந்திய இளசுகளால் மனதிற்குள் தூக்கி வைத்து கொண்டாடப்பட்ட ராஷ்மிகா. இப்போது crushed potatoe மாதிரி மனரீதியாக உருக்குலைந்து போயிருக்கிறார்.

ராஷ்மிகாவின் மனதிற்குள் இவ்வளவு வலியா என்று யோசிக்க வைத்திருக்கிறது சினிமா ரசிகர்களுக்கு அவர் எழுதிய லேட்டஸ்ட் ஓபன் லெட்டர்.

ரசிகர்களுக்கு அவர் எழுதியிருக்கும் அந்த லெட்டரை படிக்கும் போதே எந்தளவுக்கு ட்ரோல்களும் நெகட்டிவிட்டியும் அவரை காயப்படுத்தி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

Rashmika Mandana அப்படி என்னதான் சொல்லி இருக்கிறார் என்று பார்ப்போம்.

‘கடந்த சில நாட்களாகவே, அவ்வளவு ஏன் சில வாரங்கள், மாதங்கள், வருடங்கள்னு கூட சொல்லலாம். ரெண்டு மூணு விஷயங்கள் என்னைத் தொந்தரவு பண்ணிக்கொண்டே இருக்கின்றன. அந்த விஷயங்களை சரி செய்ய சரியான நேரம் இதுதான் என நினைக்கிறேன்.

நான் எனக்காக மட்டுமே பேசுறேன். இதை சில வருடங்களுக்கு முன்பே நான் பண்ணியிருக்கணும்.

சினிமாவுல என்னோட கேரியரை தொடங்கியதிலிருந்தே வெறுப்புகளை அதிகம் எதிர்கொள்கிற நிலையிலதான் இருக்கிறேன். உண்மையைச் சொல்லணும்னா எக்கசக்கமான ட்ரோல்கள். ஏகப்பட்ட நெகட்டிவிட்டி. நான் தேர்ந்தெடுத்த வாழ்க்கைக்கான விலை இதுங்கிறது எனக்கு தெரியும். ஒவ்வொருத்தருக்கும் பிடிச்ச ஒருவள் நான் இல்லன்னு எனக்கு தெரியும். ஒவ்வொரு தனிமனிதரும் என்னை நேசிக்கணும்னு நான் எதிர்பார்க்கல. என்னை நீங்க ஏற்றுக்கொள்ளல என்கிறதுக்காக நீங்க என் மேல நெகட்டிவிட்டியை கொட்டலாம்னு அர்த்தமில்லை.

உங்கள் அனைவரையும் மகிழ்விப்பதற்காக ஒவ்வொரு நாளும் நான் என்னென்ன வேலைகளைச் செய்யுறேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும். என்னோட வேலையின் மூலமா நீங்க உணர்ற மகிழ்ச்சிக்காக நான் ரொம்பவே அக்கறை காட்டுறேன். நீங்களும் நானும் பெருமைப்படக்கூடிய விஷயங்களை கொடுக்க என்னால் முடிஞ்சவரை முயற்சி பண்றேன்.

உண்மையைச் சொல்லணும்னா நான் சொல்லாத விஷயங்களுக்காக இண்டர்நெட் மூலமா நான் கேலி செய்யப்படும்போதும், மனரீதியாக தாக்கப்படும் போதும் இதயம் சுக்குநூறாக உடைஞ்சு போயிடுது. வெளிப்படையா சொன்னா மனசு சோர்ந்து போயிடுது.

பொதுவாக நான் பேட்டிகள்ல சொன்ன சில விஷயங்கள் எனக்கு எதிராகத் திரும்புறதை நானே பார்க்கிறேன்.. இண்டர்நெட் முழுசா பரப்பப்படும் சில தவறான செய்திகள் எனக்கு மட்டுமில்லாம சினிமா இண்டஸ்ட்ரிக்குள்ளேயும் வெளியேயும் இருக்குற உறவுகளுக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்ததுது

ஆக்கபூர்வமான விமர்சனங்களை நான் வரவேற்கிறேன். அது இன்னும் என்னை இம்ப்ரூவ் பண்ண வைக்கும். இன்னும் சிறப்பாக செயல்பட தூண்டும். ஆனா நெகட்டிவிட்டி, வெறுப்புல என்ன இருக்கு?

ரொம்ப நாட்களாகவே அதையெல்லாம் கண்டுக்காதேன்னு என்கிட்ட சொன்னாங்க. ஆனா இப்போ அது ரொம்ப ரொம்ப மோசமாகிடுச்சு. இதை சொல்றதால, நான் யாரையும் ஜெயிக்க முயற்சி பண்றேன்னு அர்த்தமில்ல.

என் மேல தொடர்ந்து காட்டப்படுற இந்த வெறுப்பின் காரணமாக நான் சமூகத்தால ஒதுக்கப்படுகிறேனோ என்கிற நினைக்க விரும்பல.

நான் சொன்னது மாதிரியே மத்தவங்கிட்ட இருந்து எனக்கு கிடைக்கிற அன்பை நான் அடையாளம் காண முடியுது. அதை ஏற்று கொள்கிறேன்.

உங்களோட மாறாத நிலையான அன்பும் ஆதரவும்தான் என்னைத் தொடர வைக்குது. இந்த இறுக்கத்துல இருந்து வெளியே வந்து இதைச் சொல்லும் தைரியத்தையும் கொடுத்திருக்கு.

என்னை சுத்தி இருக்குற ஒவ்வொருத்தருக்கும், இதுவரை நான் சேர்ந்து வேலைப் பார்த்தவங்களுக்கும், நான் வியந்து பார்த்தவங்களுக்கும் மட்டுமே என்னோட அன்பு இருக்கு. நான் தொடர்ந்து கடினமா உழைப்பேன். உங்களுக்காக இன்னும் நல்லதைதான் பண்ணுவேன். நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, உங்களை சந்தோஷப்பட வைக்குறதுதான் என்னையும் சந்தோஷப்படுத்துது.

எல்லார்கிட்டயும் அன்போடு பரிவோடு இருங்க. நாம் எல்லோரும் நம்மோட பெஸ்ட்டை கொடுக்கதான் முயற்சிக்கிறோம்.

நன்றி.’

Social Media என்பது ட்ரோல்களுக்கும், நெகட்டிவிட்டிக்கும் மட்டுமே என்பது போன்ற சூழல் உருவாகி வருகிறது. நெட்டிசன்கள் போடும் ஒவ்வொரு கமெண்ட்டும் மாயஜாலங்களை உருவாக்குவதற்கு பதிலாக காயங்களை உண்டாக்குகின்றன என சினிமா நட்சத்திரங்கள் மன அழுத்தத்தில்தான் இருக்கிறார்கள்.

இனியாவது Positivity-யை பரப்புவோம். அன்பை அதிகரிப்போம். உலகை உற்சாகமானதாக மாற்றுவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...