No menu items!

PoliTricks – தலைவர்களின் கூட்டணி கூப்பாடுகள்!

PoliTricks – தலைவர்களின் கூட்டணி கூப்பாடுகள்!

அரசியலில் இது கூட்டணி காலம். தேர்தலில் தங்கள் கட்சித் தலைவர்கள் யாருடன் யார் கூட்டணி அமைப்பார்கள் என்று தொண்டர்கள் தலைமுடியை பிய்த்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நேரத்தில் அவர்களை மேலும் குழப்பும் வகையில் தலைவர்கள் பேசி வருகிறார்கள்.

அவர்கள் அப்படி என்னதான் பேசுகிறார்கள் என்று பார்ப்போம்…

எடப்பாடி பழனிசாமி:

தமிழக மக்களின் உரிமைகளை பாதுகாக்க, தேவையான திட்டம், புயல், வெள்ளம், வறட்சி போன்ற காலங்களில் நிதியை பெற்று வர தமிழக மக்களுக்கு யார் உதவி செய்கிறார்களோ அவர்களுக்கு பிரச்சினையின் அடிப்படையில் மத்தியில் ஆதரவு கொடுக்கப்படும். தமிழக மக்களின் பிரச்சினையை அதிமுக கூட்டணி தீர்த்து வைக்கும். சில பேர் கேட்கின்றனர் எங்கே கூட்டணி என்று. பொறுத்து இருந்து பாருங்கள் அதிமுக கூட்டணி சிறப்பான கூட்டணி அமைக்கும்.

அன்புமணி ராமதாஸ்:

திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸை, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தித்துப் பேசினார். இது, மரியாதை நிமித்தமான சந்திப்பு. அப்போது,அரசியல் பேசப்படவில்லை. குடும்ப நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கவே ராமதாஸை அவர் சந்தித்தார். கூட்டணி தொடர்பாக பேசிக் கொண்டிருக்கிறோம். விரைவில் யாருடன் கூட்டணி என்பதை அறிவிப்போம். யாருடன் பேசுகிறோம்; என்ன பேசுகிறோம் என்பதை, இப்போது கூற முடியாது.

ஓ.பன்னீர்செல்வம்:

நாடாளும்மன்றத் தேர்தலில் நம்முடன் கூட்டணி வைத்து போட்டியிட சில கட்சிகள் வர வாய்ப்புள்ளது, பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்க போராடி வருகிறோம், நீதிமன்ற தீர்ப்புகள் தற்காலிகமானது, நிரந்தர தீர்ப்புகள் வரவில்லை, நிலைமையை புரிந்துகொண்டு எடப்பாடி பழனிசாமி அதிமுகவிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும். எடப்பாடி பழனிசாமி இல்லாத அதிமுக உருவாக்கப்படும்.

பிரேமலதா விஜயகாந்த்:

2014-ல் வழங்கியதுபோல, 14 நாடாளுமன்றத் தொகுதிகளும், ஒரு ராஜ்ய சபா சீட்டும் வழங்கும் கட்சிக்குத்தான் எங்களின் ஆதரவு, அவர்களுடன்தான் கூட்டணி என்பதை அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் உறுதியாகத் தெரிவித்திருக்கிறார்கள். எனவே, அதற்கான பேச்சுவார்த்தை உள்ளிட்ட தேர்தல் பணிக்காக இனிதான் குழு அமைக்கவிருக்கிறோம். 12-ம் தேதி தே.மு.தி.க-வின் கொடி நாள். அதைத் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடத் திட்டமிட்டிருக்கிறோம். அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் 4 மண்டலங்களில் கேப்டன் விஜயகாந்த்துக்கு நினைவேந்தல் பொதுக்குழு நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். இந்தக் கூட்டம் நிறைவடைவதற்குள் எங்களின் நிலைப்பாடு குறித்து அறிவிப்போம்.

கே.பி.முனுசாமி:

அதிமுகதான் தமிழகத்தில் மிகப்பெரிய கட்சி, தமிழகத்தில் 30 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்துள்ளது. 2 கோடி தொண்டர்களை கொண்ட மாபெரும் இயக்கத்தின் தலைமையில் தான் மெகா கூட்டணி அமையும். அதிமுக தலைமையில் கூட்டணிக்கு வரும் கட்சிகளை சேர்த்துக்கொள்வோம்.

முத்தரசன் :

பாரபட்சமான முறையில் மத்திய அரசு செயல்படுவது நாட்டுக்கும், ஜனநாயகத்துக்கும் நல்லதல்ல. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு வரலாம் என அழைப்பு விடுக்கும் அதிமுக, பாஜகவின் நப்பாசை ஒருபோதும் பலிக்காது.

ஜான் பாண்டியன்:

தேர்தலில் போட்டியிடுவது, கூட்டணி குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. தேர்தல் தேதி அறிவிக்கட்டும். அதன்பிறகு, கூட்டணி குறித்து முடிவு எடுப்போம். அதிமுக, பாஜக என எல்லா கட்சிகளுடன் நான் நட்பாக இருக்கிறேன். 10-ம் தேதி கூட்டத்தில் இது விவாதிக்கப்படும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...