No menu items!

வாரிசு வாய்ப்பு – அதிரவைத்த மிருணாள் தாகூர்

வாரிசு வாய்ப்பு – அதிரவைத்த மிருணாள் தாகூர்

பாலிவுட்டில் ஒரு பெரிய நட்சத்திரம் ஒருவர் இருந்தால் அவரது வாரிசான மகனோ அல்லது மகளோ, அவரது உறவினரோ எந்தவித கஷ்டமும் இல்லாமல், தங்களது முதல் படத்திலேயே மிகப்பெரிய பட்ஜெட் படத்தில் கமிட்டாவது, மிகப்பெரிய ஹீரோ அல்லது ஹீரோயினுடன் ஜோடியாக நடிப்பது, மிகப்பெரும் இயக்குநர் டைரக்‌ஷனில் நடிப்பது என எல்லாமும் ராக்கெட் வேகத்தில் நடக்கும். ஆனால் எந்தவித பின்னணியும் இல்லாமல் வரும் திறமைசாலிக்கு இவை எதுவும் சாத்தியமில்லை. ஆனாலும் தொடர்ந்து போராட வேண்டும். இந்த நெபோடிசம் பற்றி பாலிவுட்டில் அவ்வப்போது ஏதாவது சர்ச்சை கிளம்பும்.

தமிழ் சினிமா, தெலுங்கு சினிமா, மலையாள சினிமா, கன்னட சினிமா என எல்லா பக்கமும் இந்த நெபோடிசம் இல்லாமல் இல்லை, இந்த புலம்பல்கள் இங்கு அதிகம் இருந்தாலும், அவை வெளியே தெரிவதில்லை.

இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நடிக்கவரும் போது கூட ஒரு சலசலப்பு கிளம்பியது நினைவிலிருக்கலாம்.

நெபோடிசம் பத்தி ஆளாளுக்கு ஒரு கருத்தை முன் வைக்கும் போதெல்லாம் நட்சத்திரங்களையும், தயாரிப்பாளர்களையும், இயக்குநர்களையும் எந்தவித பின்னணியும் இல்லாமல் சினிமாவில் முன்னுக்கு வரத்துடிப்பவர்கள் கமெண்ட் அடித்து வருகையில், சீதா ராமம் பட நாயகி மிருணாள் தாகூர் கருத்து மீடியாவை அதிர வைத்திருக்கிறது.

மிருணாள் தாகூரிடம் நெபோடிசம் பற்றி ஊடகத்தினர் கேட்ட போது, ‘’நெபோடிசம் பத்தி நிறைய பேர் சொல்றாங்க. ஆனா நாம் மீடியாவுல இருந்து ஆரம்பிக்கலாம். துரதிஷ்டவசமா இப்போ இங்கே ஜான்வி கபூர், அனன்யா பாண்டே இல்ல. இருந்தாலும் நான் ஒண்ணு சொல்ல விரும்புறேன். இந்து அவங்களோட பிரச்சினை இல்ல. அவங்க எல்லோரும் ஸ்டார் கிட்ஸ். நாமதான் அவங்க வாழ்க்கையில் என்ன நடக்குது, அவங்க என்ன பண்றாங்கன்னு நோண்டி நோண்டி பார்க்குறோம். ஸ்டார் கிட்ஸ் வாழ்க்கையில் நாம தலையிடுறோம்.
ஒரு விருது விழாவுல, எனக்கு விமர்சகர்களின் சிறந்த நடிகை விருது கிடைச்சது. நட்சத்திரங்கள் பேட்டி கொடுக்கிற அமர்வு இருந்துச்சு. என்கிட்ட பேட்டி எடுத்துட்டு இருந்த மீடியா, ஜான்வி கபூர் வந்தவுடன் என்னை அம்போன்னு விட்டுட்டு ஜான்வி கபூர் பின்னாடி போயிட்டாங்க. அவருக்கு வேறு விருதுதான் கிடைச்சிருந்தது. ஆனால் நான் என்னோட பேச்சைக் கூட கடைசியில முடிக்க முடியாம போச்சு.

அவங்க மேல எனக்கு பொறாமையும் இல்ல. வேறெதுவும் இல்ல. அவங்க மேல எந்த தப்பும் இல்ல. இது அவங்க தப்பும் இல்ல. அதனால நெபோடிசம் பத்தி சொல்றதை நிப்பாட்டுங்க. இது ஊடகங்கள், மக்களைச் சார்ந்தே இருக்கு. நெபோடிசம் பெரிசாக மக்களும் மீடியாவும்தான் காரணம்.’’ என்று மிருணாள் தாகூர் அதிரடியாக பேசிய வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.


ஷங்கரால் அதிர்ச்சியான ஸீ ஸ்டூடியோஸ்

ஸீ டிவி இந்தியாவில் பல்வேறு மொழிகளில் இயங்கும் தொலைக்காட்சிகளை நடத்தி வருகிறது. வட இந்தியாவில் முன்னணி சேனல்களில் ஒன்றாக இருக்கும் ஸீ டிவி, காலத்திற்கு ஏற்றவகையில் ஒடிடி-யில் இணைய ஸீ5 ஒடிடி தளத்தைத் தொடங்கியது. மறுபக்கம் ஸீ ஸ் டூடியோஸ் மூலம் திரைப்பட தயாரிப்பிலும் ஈடுப்பட்டு வருகிறது.

இந்நிறுவனம்தான் ஷங்கரின் முதல் நேரடி தெலுங்குப்படமான ‘கேம் சேஞ்சர்’ படத்தை வாங்கியிருக்கிறது. உலகம் முழுவதும் வெளியிடும் உரிமையை சுமார் 350 கோடி இந்நிறுவனம் வாங்கியதாக வியாபார வட்டாரத்தில் கூறுகிறார்கள்.

இதனால் அப்படத்தை தயாரிக்கும் தில் ராஜூ உற்சாகத்தில் இருந்தார். இவர்தான் விஜயை வைத்து ‘வாரிசு’ படத்தை தயாரித்தவர். ஆனால் அவர் இப்போது டென்ஷனில் இருப்பதாக கூறுகிறார்கள்.

காரணம், ‘கேம் சேஞ்சர்’ படம் திட்டமிட்டப்படி முழுமையாக முடிவடையவில்லை. ஷுட்டிங் தள்ளிப் போனது, பல காட்சிகளை திரும்பவும் எடுத்தார்கள். பல முறை ரீஷூட் பண்ணியதால், போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகள் தாமதம் ஆனது, இதனால் பட்ஜெட் எகிறியது.

இந்த பஞ்சாயத்துகளால் படத்தின் பட்ஜெட் திட்டமிட்டதை விட 50 கோடி அதிகமாகி இருக்கிறதாம். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் ’தில்’ ராஜூ, ’டல்’ ராஜூ ஆகியிருப்பதாக கூறுகிறார்கள்.

இப்படி படம் வெளியாகும் முன்னரே பட்ஜெட்டில் துண்டு விழுகிறதே என்று பதறிய தில் ராஜூ, ஸீ ஸ்டூடியோஸிடம் பேசி வருகிறாராம். நாங்கள் நினைத்த பட்ஜெட் வேறு. இப்போது செலவாகி இருக்கும் பட்ஜெட் வேறு. அதனால் அதை சரிக்கட்டும் வகையில் நீங்கள் உரிமைத் தொகையை அதிகமாக்கி தரவேண்டுமென கேட்கிறாராம். இதனால் ஸீ ஸ்டூடியோஸ் வட்டாரம் அதிர்ச்சியில் இருக்கிறதாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...