No menu items!

ஆஸ்கரில் அசத்தும் ஒப்பன்ஹெய்மர்

ஆஸ்கரில் அசத்தும் ஒப்பன்ஹெய்மர்

சினிமாவில் உள்ள சக படைப்பாளிகளும் கூட இந்த ஜித்தனைப் பார்த்து பொறாமைப்படுவார்கள். எப்படி இந்த மனுஷனால் மட்டும் இப்படி யோசிக்க முடிகிறது. நம்மால் ஏன் முடியவில்லை என்று வாய்விட்டு கமெண்ட் அடித்தவர்களும் கூட இருக்கிறார்கள்.

American Prometheus: The Triumph and Tragedy of J. Robert Oppenheimer,

அப்படிப்பட்ட ஒரு இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் [Christopher Nolan]. இவரது ‘ஒப்பன்ஹெய்மர்’ [Oppenheimer] படம். அணுக்குண்டின் தந்தை என்றழைக்கப்படும் ராபர்ட் ஒப்பன்ஹெய்மரின் பயோக்ராபிகல் படமான இது கே பேர்ட் மற்றும் மார்ட்டின் ஜே ஷெர்வின் எழுதிய ’அமெரிக்கன் ப்ரோமெதஸ் : த ட்ரியம்ப் அண்ட் ட்ராஜெடி ஆஃப் ஜே ராபர்ட் ஒப்பன்ஹெய்மர்’ என்ற புத்தகத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டு இருக்கிறது.

ஒட்டுமொத்த உலகளாவிய பாக்ஸ் ஆபீஸில் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூலித்திருப்பதாகவும் கூறுகிறார்கள்.

இந்தப்படம் இப்போது ஆஸ்கர் பந்தயத்தில் அசுரத்தனமான வேகம் எடுத்திருக்கிறது. வருகிற 96-வது அகாடெமி விருது விழாவில் இப்படம் 13 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது.

  1. சிறந்தப்படம் – எம்மா தாமஸ், கிறிஸ்டோபர் நோலன், சார்லஸ் ரோவன்
  2. சிறந்த நடிகர் முன்னணி கதாபாத்திரம் – சிலியன் மர்ஃபி
  3. சிறந்த இயக்குநர் – கிறிஸ்டோபர் நோலன்
  4. சிறந்த ஒளிப்பதிவாளர் – ஹோய்டே வான் ஹோய்டெமா
  5. சிறந்த ஒலிப்பதிவு – வில்லி பர்டன், ரிச்சர்ட் கிங், காரி ஏ ரிஸோ, கெவின் ஒ’கோனல்
  6. சிறந்த படத்தொகுப்பு – ஜெனிஃபர் லேம்
  7. சிறந்த ப்ரொடக்‌ஷன் டிசைன் – ருத் டி ஜோங், க்ளெர் காஃப்மேன்
  8. சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் – லுட்விக் கோரன்ஸன்
  9. சிறந்த நடிகை – துணை கதாபாத்திரம் – எமிலி ப்ளண்ட்
  10. சிறந்த நடிகர் – துணை கதாபாத்திரம் – ராபர்ட் டவுனி ஜூனியர்
  11. நாவலைத் தழுவிய சிறந்த திரைக்கதை – கிறிஸ்டோபர் நோலன்
  12. சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் – லூயிஸா எபெல்
  13. சிறந்த ஆடை அலங்காரம் – எலென் மிரோனிக்

இப்படி 13 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது. வருகிற 10 மார்ச் 2024 அன்று அகாடமி விருதுகள் விழா நடக்க இருக்கிறது. இந்த விழாவை நான்காவது முறையாக காமெடியன் ஜிம்மி கிம்மெல் தொகுத்து வழங்க இருக்கிறார்.

ஒப்பன்ஹெய்மர் என்ன மாயஜாலங்களை நிகழ்த்த இருக்கிறது என்ற எதிர்பார்பு இப்பொழுதெ ஆரம்பித்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...