No menu items!

ஆன்லைன் ரம்மி தடை மசோதா மீண்டும் பேரவையில் நிறைவேற்றப்படும்: அமைச்சர் ரகுபதி

ஆன்லைன் ரம்மி தடை மசோதா மீண்டும் பேரவையில் நிறைவேற்றப்படும்: அமைச்சர் ரகுபதி

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்வதற்கான மசோதாவை தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பினார். அதில், மத்திய அரசின் கீழ் வரும் விவகாரத்தில் மாநில அரசு எந்த அடிப்படையில் சட்டம் இயற்றலாம் என்பது உட்பட 8 கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இந்நிலையில், இது தொடர்பாக இன்றைய தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இது குறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறுகையில், “இந்த தடை சட்டத்தை இயற்ற தமிழக சட்டமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளார். நாங்கள் சட்டம் இயற்ற அதிகாரம் உள்ளது என்று சட்டத்தை இயற்றி மீண்டும் அனுப்ப உள்ளோம். நீதிமன்றம் சட்டம் இயற்றும் அதிகாரத்தை எங்களுக்கு கொடுத்துள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அனைத்து தரப்பினரின் கேட்டுதான் இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. 95 சதவீத பேருடன் ஆதரவுடன் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாக்க கொண்டு வரப்பட்ட சட்டம் இது. இந்த சட்டம் ஆளுநரிடம் இருந்த காலத்தில் 12 பேர் மரணம் அடைந்துள்ளனர்” என்று தெரிவித்தார்.

சட்டசபை உறுப்பினராக பதவி ஏற்றார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டசபை தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிட்டு 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார். இந்நிலையில், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் சட்டசபை உறுப்பினராக இன்று பதவி ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. அங்கு ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் மூத்த அமைச்சர்கள் பங்கேற்றனர்.

இன்ப்ளூயன்சா காய்ச்சலுக்கு இந்தியாவில் 2 பேர் பலி

இந்தியாவில் இன்புளூயன்சா எச்3என்2 வகையை சேர்ந்த வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. காய்ச்சல், தொண்டை புண், இருமல், சளி உள்ளிட்டவை இந்த வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகளாகும். இந்த வைரஸ் கொரோனாவை போல வேகமாக பரவும் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில், எச்3என்2 இன்ப்ளூயன்சா காய்ச்சலுக்கு இந்தியாவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். அரியானா மற்றும் கர்நாடகாவில் தலா ஒருவர் இந்த காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. மேலும், இந்த இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சலால் 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மூன்றாவது முறையாக சீன அதிபரான ஜின்பிங்

சீன அதிபர் ஷி ஜின்பிங், அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் மூன்றாவது முறையாக அதிபராகப் பதவியேற்றுள்ளார். மாவோவுக்குப் பிறகு சீன தலைவர்கள் இருமுறை மட்டுமே அதிபர் பதவியை வகித்துள்ளனர். அவருக்குப் பிறகு தற்போது ஷி ஜின்பிங் தான் மூன்றாவது முறையாக சீன அதிபர் பதவியை வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அதிகார பலப்படுத்துதலைத் தொடர்ந்து, 69 வயதான ஷி ஜின்பிங், சீனாவின் மிகுந்த மேலாதிக்கம் கொண்ட தலைவராக மாறியுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவராக ஷி ஜின்பிங் உள்ளதன் பின்னணியில் இருந்து அவருக்கான அதிகாரம் கிடைத்துள்ளது.

வரும் நாட்களில் புதிய பிரீமியர்(பிரதமர்) மற்றும் பல்வேறு அமைச்சர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும். அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. புதிதாக நியமிக்கப்படுபவர்கள் அனைவரும் ஷி ஜின்பிங் விசுவாசிகளாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...