No menu items!

’ஃபைட்டர்’ சமந்தாவின் ரீஎண்ட்ரி!

’ஃபைட்டர்’ சமந்தாவின் ரீஎண்ட்ரி!

சென்னையின் டெம்பரேச்சரை விட அதிக சூட்டைக் கிளப்பும் சமந்தா, இப்போது முழுவீச்சில் களத்தில் இறங்கியிருக்கிறார்.

’மையோசிடிஸ்’ என்னும் ஆட்டோஇம்யூன் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட சமந்தா சில மாதங்கள் கட்டாய ஓய்வில் இருந்தார். இதனால் இவர் கமிட்டான ஹிந்திப்படம், வெப் சிரீஸ், தெலுங்குப் படம் என எல்லாமே அப்படியே கிடப்பில் போடப்பட்டு இருந்தன.

இப்பொழுது உடல்நலம் தேறியதால், சமந்தா மீண்டும் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார்.

கொடுத்த கால்ஷீட்களின் அடிப்படையில் இவர் முதலில் நடிக்கவேண்டியது, ‘கீதா கோவிந்தம்’ புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் ‘குஷி’ படத்திற்குதான். ஆனால் சமந்தா மும்பைக்கு விமானத்தில் ஏறி, ’சிடாடல்’ வெப் சிரீஸின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டார்.

இது இங்கே சர்ச்சையை கிளப்பியது. விஜய் தேவரகொண்டா தனது அடுத்தப்பட ஷூட்டிங்கிற்கு வண்டியைக் கிளப்ப, குஷி பட இயக்குநர் டென்ஷனில் புலம்பிக் கொண்டிருந்தார்.

ஆனால் இப்பொழுது நிலைமை தலைக்கீழ்.

சிடாடல் ஷூட்டிங்கை முடித்த சமந்தா, குஷி ஷூட்டிங்கில் கலந்து கொள்ள போகிறேன் என கிளம்பி வர, ஒட்டுமொத்த யூனிட்டும் பிரம்மாண்டமான கேக்கை சமந்தா முன்பு கொண்டு வந்து வைத்து, கொண்டாட வைத்திருக்கிறது.

இதில் குஷி படத்தின் இயக்குநர் சிவா நிர்வானா, ‘சமந்தா ஒரு ஃபைட்டர். போராடி வெற்றி பெறுவதில் அவருக்கு போட்டியே இல்லை’ என்று பாராட்டித்தள்ளி இருக்கிறார்.

சமந்தா குஷி படக்குழுவின் அன்பைப் பார்த்து நெகிழ்ந்துப் போயிருக்கிறாராம்.

#samantha ,#samantharuthprabhu, #kushi, #vijaydevarakonda, #liger, #geethagovindam, #autoimmune, #myositis,


’இந்தியன் 2’ ரிலீஸ் எப்போது?

கமல், ஷங்கர் மீண்டும் இணையும் ‘இந்தியன் 2’ படத்தின் ஷூட்டிங் பரபரவென போய் கொண்டிருக்கிறது.

தீபாவளி அல்லது ஆயுத பூஜை கொண்டாட்ட நாட்களில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற இலக்கோடு ஷூட்டிங் நடைபெற்று வருவதாக அப்படக்குழுவினர் தரப்பிலிருந்து தகவல் கசிந்திருக்கிறது. இதற்காகவே ஷூட்டிங் டர்போ ஜெட் வேகத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறதாம்.

ஷூட்டிங் முடிந்ததும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் வேலைகள் அதிகமிருப்பதால்தான் ஷூட்டிங்கை வேக வேகமாக முடித்து கொண்டிருக்கிறார்களாம்.

இப்பொழுது அக்டோபர் 9-ம் தேதி அல்லது 10-ம் தேதி ‘இந்தியன் 2’ படத்தை வெளியிட ஷங்கர் தரப்பில் முடிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறுகிறார்கள். வெகு விரைவில் இந்த இரண்டு நாட்களில் ஒன்றை அதிகாரப்பூர்வமாக வெளியிட இருக்கிறார்களாம்.

ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் வேலைகள் இழுத்து கொண்டு போனால் தீபாவளிக்குதான் ’இந்தியன் 2’ ரிலீஸாகும் என்றும் தெரிகிறது.

#kamal, #kamalhaasan, #shankar, #lyca, #ulaganayagan, #indian, #kajalagarwal, #rahulpreetsingh, #tamilcinema,


ஆஸ்கர் விருது கமிட்டியில் தமிழன் சூர்யா!

தமிழ் சினிமாவில் மற்றுமொரு கெளரவத்தைப் பெற்றிருக்கிறார் சூர்யா.

சினிமாவில் உலகமே கொண்டாடும் தீபாவளி, பொங்கல் வகையறா விழாவாக இருப்பது ஆஸ்கர் விருது விழா..

வருகிற மார்ச் 13-ம் தேதி ஆஸ்கர் விருது நடைபெற இருக்கிறது. இந்த விழாவின் கமிட்டிக்கு உலகம் முழுவதிலும் இருந்து நட்சத்திரங்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இப்படி தேர்ந்தெடுக்கப்படும் நட்சத்திரங்கள், விருது தேர்வுகளில் தங்களது வாக்கை பதிவு செய்யவேண்டும்.

அப்படியொரு கெளரவத்தைப் பெற்றிருக்கும் முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் சூர்யா.

கடந்த ஜூன் மாதம் அகாடமி, 397 நட்சத்திரங்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை அறிவித்தது. இந்த பட்டியலில்தான் சூர்யாவும் இடம்பிடித்திருந்தார்.

இப்பொழுது ஆஸ்கர் விருது நெருங்கிய நிலையில், சூர்யா தனது வாக்கை பதிவு செய்திருக்கிறார்.

தமிழ் சினிமாவுக்கும் உலகளவில் கிடைத்திருக்கும் ஒரு அங்கீகாரமாக இது பார்க்கப்படுகிறது.

#oscar, #academyawards, #suriya, #oscarawards, #cinemalove,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...