No menu items!

நியூஸ் அப்டேட்: விஜயகாந்த் கால் விரல்கள் அகற்றம்

நியூஸ் அப்டேட்: விஜயகாந்த் கால் விரல்கள் அகற்றம்

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் கால் விரல்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி அகற்றப்பட்டுள்ளது என்றும் ஒரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தேமுதிக வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நீண்ட வருடங்களாக இருக்கும் நீரழிவு பிரச்சனையால் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி நேற்று விரல் அகற்றப்பட்டது. மருத்துவர்கள் கண்காணிப்பில் தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். விஜயகாந்த் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான வதந்திகளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் யாரு நம்ப வேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒற்றை தலைமையைதான் அதிமுக தொண்டர்கள் விரும்புகின்றனர்: இபிஎஸ்ஸுக்கு மா.பா. பாண்டியராஜன் ஆதரவு

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.  இந்த விவகாரத்தில் ஓ. பன்னீர்செல்வத்துக்கு தொடர்ந்து ஆதரவு குறைந்து வருகிறது. ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இருந்த நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேஷ ராஜா, விருதுநகர் மாவட்ட செயலாளர் சாத்தூர் ரவிச்சந்திரன், திருவள்ளூர் தெற்கு மாவட்டம் அலெக்சாண்டர் ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இன்று ஆதரவளித்துள்ளனர். இந்நிலையில்,  ஓ. பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும் இன்று எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்ததுடன் காலில் விழுந்து வணங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மா.பா. பாண்டியராஜன், “ஒற்றை தலைமையைதான் அதிமுக தொண்டர்கள் விரும்புகின்றனர்” என்று கூறினார்.

ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சிகள் பொதுவேட்பாளராக யஷ்வந்த் சின்கா தேர்வு

இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி காலம் முடிவடைவதை முன்னிட்டு, புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் வரும் ஜூலை 18ஆம் தேதி நடக்கிறது. இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பங்கேற்றன. இதன் தொடர்ச்சியாக ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக , சரத்பவார், பரூக் அப்துல்லா, மகாத்மா காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தி ஆகியோரிடம் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் களமிறங்க கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அந்த கோரிக்கையை 3 பேரும் நிராகரித்த நிலையில் யஷ்வந்த் சிங்காவை பொதுவேட்பாளராக நிறுத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா உடைகிறது: 12 எம்எல்ஏக்கள் ஏக்நாத் ஷிண்டே மாயம்

மகாராஷ்டிர மாநிலத்தில் சட்ட மேலவைக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் மகா விகாஸ் அகாடியின் 5 வேட்பாளர்களும் பாஜகயின் 5 வேட்பாளர்களும் வெற்றி பெற்ற நிலையில், காங்கிரஸின் சந்திரகாந்த் ஹண்டோர் தோல்வியைச் சந்திக்க நேரிட்டது. பாஜகவுக்கு 105 எம்எல்ஏக்கள் மட்டுமே இருந்தபோதிலும், கூடுதலாக 10 வாக்குகள் பெற்று அக்கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றிருப்பதால் ஆளும் கூட்டணி மத்தியில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த ராஜ்யசபா தேர்தலிலும் பாஜகவின் மூன்று  வேட்பாளர்களும் வெற்றிப் பெற்றனர். சிவசேனா வேட்பாளர்களில் ஒருவரான சஞ்சய் பவார் தோல்வியை சந்திக்க நேரிட்டது. இதன் பின்னணியில் குதிரை பேரம் இருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், ஆளும் சிவசேனா கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதற்கேற்றால் போல் சிவசேனா மூத்த தலைவர்களில் ஒருவரும் அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே, கட்சித் தலைமையின் தொடர்பில் இருந்து விலகி இருப்பதாகவும், குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ஓட்டலில் தங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏக்நாத் ஷிண்டே மட்டுமின்றி அவருடன் 10 முதல் 12 எம்எல்ஏக்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

அக்னி பாதை திட்டத்துக்கு எதிரான போராட்டங்களை தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்: சீமான்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் இன்று ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “அக்னி பாதை திட்டத்துக்கெதிராக தமிழகத்தில் போராடி வரும் இளைஞர்களின் அறப்போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. அவர்களது கோரிக்கை மிக நியாயமானது; தார்மீகமானது. அவர்களது போராட்டக் கோரிக்கை வெல்ல வாழ்த்துகிறேன். அவர்களுக்குத் துணை நிற்கிறேன்.

அக்னி பாதை திட்டத்துக்கு எதிரான நிலைப்பாட்டை முன்வைத்திருக்கிற திமுக அரசு, அதே கோரிக்கைக்காகப் போராடும் இளைஞர்கள் மீது வழக்குகளைத்தொடுக்கும் கொடுங்கோல் போக்கைக் கைவிட வேண்டுமெனவும், அறவழிப்போராட்டங்களை அனுமதிக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...