No menu items!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் இருந்து வரும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்னிலையில் கடந்த 15-ம் தேதி விசாரணைக்கு வந்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, செந்தில்பாலாஜி ஜாமீன் மனு மீது 20-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட் நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

கனடாவில் வாழும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை

கனடாவில் வாழும் மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து இந்தியர்களும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

காலிஸ்தான் தனிநாடு கோரும் பஞ்சாபின் பிரிவினை ஆதரவாளர்களில் முக்கியமானவர் ஹர்தீப்சிங் நிஜார். இம்மாநிலத்தின் ஜலந்தர் மாவட்ட பர் சிங் புரா கிராமத்தை சேர்ந்த இவர், பிழைப்புக்காக கடந்த 1997-ல் கனடாவுக்கு இடம் மாறினார். அங்கிருந்தபடி அவர் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் கடந்த ஜூன் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவரது கொலையில் இந்தியாவின் பங்கு இருக்க வாய்ப்புள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நேற்று முன்தினம் கனடா பிரதமர் மற்றும் அதன் வெளியுறத் துறை அமைச்சர் ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் ஹர்தீப் கொலையில் இந்தியா மீது குற்றம் சுமத்தி பேசினர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு பாதிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளும் பரஸ்பரம் தலா ஒரு தூதரக அதிகாரியை திருப்பி அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கனடாவில் அதிகரித்து வரும் இந்திய விரோத செயல்கள் மற்றும் அரசே மன்னித்துவிட்ட வெறுப்புக் குற்றங்கள், கிரிமினல் வன்முறைகள் ஆகியனவற்றைக் கருத்திக் கொண்டு கனடாவில் உள்ள அனைத்து இந்தியர்கள் மற்றும் அங்கு செல்லவிருக்கும் இந்தியர்கள் உச்சபட்ச பாதுகாப்புடன் இருக்கும்படி எச்சரிக்கிறோம். அண்மைக் காலமாக அங்குள்ள இந்தியர்கள், குறிப்பாக இந்திய எதிர்ப்பு கொள்கைகளை எதிர்க்கும் இந்திய தூதரக அதிகாரிகள் குறிவைக்கப்படுகின்றனர். அதனால், கனடாவில் அச்சுறுத்தல் உள்ள பகுதிகளுக்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் – ரஜினிகாந்துக்கு கோல்டன் டிக்கெட்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை காண்பதற்கான கோல்டன் டிக்கெட்டை ரஜினிகாந்த்துக்கு வழங்கி பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கவுரவித்தார்.

இதற்காக ஜெய் ஷாவுக்கு நன்றி தெரிவித்து சமூக வலைதளத்தில் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள பதிவில், “ 2023-ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான கோல்டன் டிக்கெட்டை பி.சி.சி.ஐ-யிடம் இருந்து பெற்றுக் கொண்டதில் மகிழ்ச்சி. ஜெய்ஷா உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் எண்ணங்களுக்கும் மிக்க நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை அக்-9-ல் கூடுகிறது

தமிழக சட்டப்பேரவை அக்டோபர் 9-ம் தேதி கூடும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்காளிடம் பேசிய அப்பாவு, “அக்டோபர் 9-ம் தேதி காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்ற வளாகத்தில், பேரவை மண்டபத்தில் சட்டமன்றம் கூட இருக்கிறது. அன்றைய தினம், 2023-24-ம் ஆண்டுக்கான கூடுதல் செலவினங்களுக்கான மானியக் கோரிக்கையினை தமிழக நிதி மற்றும் மேலாண்மைத் துறை அமைச்சர் சட்டமன்றத்தில் அறிமுகம் செய்வார்” என்றார்.

அன்றைய தினம் அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டத்தை நடத்தி, கூட்டத்தொடரை எத்தனை நாள் நடைபெறும் என்பது முடிவு செய்யப்படும் என்று அவர் கூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...