No menu items!

ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்காத விஜய் ஆண்டனி!!

ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்காத விஜய் ஆண்டனி!!

தமிழ் சினிமாவை உலுக்கியிருக்கிறது விஜய் ஆண்டனியின் மகள் மீராவின் தற்கொலை.

செப்டெம்பர் 19-ம் தேதி அதிகாலையில் மீரா மின்விசிறியில் தூக்கிட்டு தன்னுயிரை மாய்த்து கொண்டார்.

தூக்கில் தொங்கிய மீராவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது முதல், மறுநாள் 20.9.23 கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்யும் வரையில் விஜய் ஆண்டனி பெரிதாக எதுவும் சாப்பிடவும் இல்லை. இரவு முழுவதும் தூக்கவும் இல்லை. ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்கவும் இல்லை.

மகளை இழந்த சோகத்தில் எழுந்த அழுகையையும் கூட அடக்கி வைத்து கொண்டிருந்த விஜய் ஆண்டனிக்கு இந்த இரண்டு நாட்களும் கூடவே துணையாக இருந்தவர் இயக்கும் மோகன் ராஜா. ‘விஜய் நடிக்க மோகன் ராஜா இயக்கிய ‘வேலாயுதம்’ படத்தின் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. இந்த நட்புதான் ராஜாவை விஜய் ஆண்டனியுடன் கூடவே இருக்க செய்திருக்கிறது.

குழந்தையைப் பறிக்கொடுத்த விஜய் ஆண்டனியுடன் இயக்குநர் மோகன் ராஜாவும் சாப்பிடாமலேயே துணைக்கு இருந்திருக்கிறார்.

மீராவை நல்லடக்கம் செய்வதற்கு முன்பாக தேவாலயத்தில் திருப்பலி கொடுக்கும் போது, அதுவரை துக்கத்தை மறைத்து கொண்டிருந்த விஜய் ஆண்டனி முற்றிலும் உடைந்துப் போய்விட்டார்.

தனது மகளை நல்லடக்க பெட்டியில் நானே தூக்கி வைப்பேன் என்று அவளுக்கு அடிப்பட்டு விடுமோ என்ற தயக்கத்தோடு பார்த்து பார்த்து தூக்கினார். மறுப்பக்கம், இனி தங்கம் என்று போனில் அழைத்தால், அவள் எடுப்பாளா மாட்டாளா என மீராவின் தாய் ஃபாத்திமா கண்கலங்கினார்.

தங்கை லாரா, ஏன் கல்லறைக்கு வந்து வீடியோ எடுக்கிறார்கள். அது தப்பு இல்லையா என அக்காவைப் பார்த்தபடியே வருத்தப்பட்டு கொண்டிருந்தாள்.

இதனால் மீராவின் நல்லடக்கத்தில் கூடியிருந்த எல்லோர் கண்களிலும் கண்ணீர் பொங்கியப்படி இருந்தது.


த்ரிஷாவின் புதிய காதலர்??

அஜித், விஜய், கமல் என முன்னணி நட்சத்திரங்களுடன் நடிக்க இருப்பதால், இன்னும் இரண்டு வருடம் கழித்துதான் திருமணம் என்று உறுதியாக இருந்த த்ரிஷா முடிவில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரத்தில் பேசப்படுகிறது. அவரது குடும்ப ஜோதிடரும் திருமணம் இப்போதைக்கு வேண்டாமென்றதால், திருமணம் குறித்து த்ரிஷா தீவிரமாக யோசிக்கவில்லை.

ஆனால் இப்போது, த்ரிஷாவுக்கு ஒரு புதிய நட்பு கிடைத்திருக்கிறதாம். அந்த நண்பரும் சினிமாவை வட்டம்தானாம். மலையாள சினிமாவை சேர்ந்த பிரபல தயாரிப்பாளர் அவர் என்கிறார்கள்.

இவர்கள் இருவருக்கும் இடையில் நல்ல புரிதல் இருப்பதால், இந்த நட்பு அடுத்தகட்டத்திற்கு சீக்கிரமே நகர்ந்து காதலாகி திருமணத்தில் முடிய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

த்ரிஷா திருமணம் செய்தால் போதும் என்ற மனநிலையில் அவரது அம்மா இருப்பதால், வெகுவிரைவிலேயே த்ரிஷா திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித்துடன் ’விடாமுயற்சி’யில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால், அடுத்த 8 மாதங்கள் ஆகிவிடும். இதே நேரத்தில் மணிரத்னம் – கமல் இணையும் படம் இருப்பதால், அதற்கும் 8 மாதங்கள் ஆகலாம். அதனால் அடுத்த ஒரு வருடம் சினிமாவில் மும்முரமாக இருக்க வாய்ப்பு இருப்பதால், ஜோதிடர் சொன்ன காலத்தில் திருமணத்தை பக்காவாக நடத்திவிடலாம் என த்ரிஷா தரப்பில் யோசிக்கப்பட்டு வருகிறதாம்.


ஷ்ருதி ஹாஸனை துரத்திய மர்மநபர்

சினிமா விழாக்களில் இப்பொழுதெல்லாம் பவுன்சர்களைதான் அதிகம் பார்க்க முடிகிறது. அங்கே போகாதே…இங்கே வரக்கூடாது… வழி விட்டு நில்லுங்க.. இப்படி ஏகப்பட்ட கட்டளைகளுடன், விழாவுக்கு வருபவர்களை ஒரு வழி செய்துவிடுவார்கள்.

நட்சத்திரங்களுக்கு துணையாக வரும் பவுன்சர்களுக்கு தயாரிப்பாளர்கள்தான் சம்பளம் கொடுக்க வேண்டுமென்பது கூடுதல் தகவல்.

பவுன்சர்களின் இந்த அடாவடித்தனமான நடவடிக்கைகளால் ஊடகத்தினர் மத்தியில் ஏகப்பட்ட புகைச்சல்.

இது ஒருபக்கம் இருந்தாலும், சமீபத்தில் துபாயிலிருந்து இந்தியாவுக்கு திரும்பிய ஷ்ருதி ஹாஸனை மும்பை விமான நிலையத்திற்குள் முன்பின் தெரியாத மர்மநபர் ஒருவர் பின் தொடர்ந்திருக்கிறார்.

யாரோ ஒருவர் தன்னை பின் தொடர்வதை சுதாரித்து கொண்டு தெரிந்து கொண்ட ஷ்ருதி ஹாஸன், அவரிடமிருந்து விலகி செல்ல முயன்றிருக்கிறார். ஆனாலும் அந்த நபர் ஷ்ருதி ஹாஸனை விடாமல் தொந்தரவு செய்திருக்கிறார்.

இதனால் பதட்டமடைந்த ஷ்ருதி ஹாஸன் மிக வேகமாக வெளியேறி தனது காருக்குள் உட்கார்ந்து கொண்டார். அதுவரையில் பின் தொடர்ந்திருக்கிறார் அந்த மர்ம நபர்.

இதனால் உண்டான கிலி ஷ்ருதியை கலவரமடைய வைத்திருக்கிறது.

இந்த பிரச்சினை இப்பொழுது பெரிதாகி வருகிறது. நட்சத்திரங்களுக்கு பாதுகாப்பு இல்லை. அதனால் பவுன்சர்களை வைத்து கொள்வதுதான் ஒரே வழி என மீண்டும் முணுமுணுப்பு கிளப்பி இருக்கிறது.

இது ஊடகத்தினர் மத்தியில் கூடுதல் கடுப்பை உருவாக்கி இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...