No menu items!

நியூஸ் அப்டேட்: எஸ்.பி. வேலுமணி, விஜயபாஸ்கர் வீடுகளில் சோதனை

நியூஸ் அப்டேட்: எஸ்.பி. வேலுமணி, விஜயபாஸ்கர் வீடுகளில் சோதனை

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். சென்னை, செங்கல்பட்டு, தாம்பரம், காஞ்சிபுரம், சேலம், கோவை என 26 இடங்களில் இன்று காலை முதல் 9 மணி நேரத்துக்கு சோதனை நடைபெற்றது.

தெரு விளக்குகளை மாற்றும் ஒப்பந்தத்தில், எல்.இ.டி. விளக்கு கொள்முதலில் ரூ.500 கோடி ஊழல் நடந்திருப்பதாகக் கிடைத்த தகவல்களின்படி எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதுக்கோட்டை இலுப்பூரில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துரையினர் சோதனையில் ஈடுபட்டனர் காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை 8 மணி நேரம் நடைபெற்றது.

சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை: எஸ்.பி வேலுமணி

லஞ்ச ஒழிப்பு சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காவல்துறையை அரசு துஷ்பிரயோகம் செய்கிறது. வேறு எந்த ஆட்சியிலும் நடைபெறாத வகையில் பழிவாங்கும் படலம் நடக்கிறது. சோதனையில் பெரிதாக எதுவும் கைப்பற்றப்படவில்லை. எடப்பாடி பழனிசாமிக்கு உறுதுணையாக இருப்பதால் இந்த சோதனைகள் நடைபெறுகின்றன” என்றார்.

எத்தனை வழக்கு போட்டாலும் எதிர்த்து வெல்வோம் – இபிஎஸ் ஆவேசம்

எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும், அதை சட்ட ரீதியாக எதிர்த்துப் போராடி வெல்வோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு சில சுயநல சக்திகளோடு இணைந்து, அதிமுகவை அழிக்க நினைத்தவர்களுக்கு திமுக அரசு உதவி செய்தது. ஆனால், அச்சதிகளை சட்டப்படி நீதிமன்றங்கள் மூலம் சந்தித்து, சதிகளை தவிடு பொடியாக்கி, இன்று தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவுடன் பலம் பொருந்திய எதிர்க்கட்சியாக அதிமுக வெற்றிநடை போடுகிறது.

இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத இந்த அரசு, மீண்டும் குறுக்கு வழியில் தனது லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் சோதனையை மேற்கொண்டிருப்பதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும், அதை சட்ட ரீதியாக எதிர்த்துப் போராடி வெல்வோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி பொறுப்பேற்பு

சென்னைஉயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி நேற்றுடன் ஓய்வு பெற்றார். சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதியை இதுவரை இந்திய ஜனாதிபதி நியமிக்கவில்லை. கேரளா மற்றும் ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றங்களின் மூத்த நீதிபதிகள் இருவரில் ஒருவரை சென்னை உயர் நீதிமன்ர தலைமை நீதிபதியாக விரைவில் ஜனாதிபதி நியமிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுவரை எம்.துரைசாமியை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் பரிந்துரை செய்தனர். இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்டு, சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமியை நியமித்து. ஜனாதிபதி கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்தார். அதன்படி சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி இன்று பொறுப்பேற்றார்.

கோகினூர் வைரத்தை திரும்பப் பெறக்கோரி குடியரசுத் தலைவரிடம் மனு

உலக புகழ்பெற்ற கோகினூர் வைரம் பூரி ஜெகநாதருக்கு சொந்தமானது என்றும், இங்கிலாந்தில் இருந்து அதனை இந்தியாவிற்கு திரும்பக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கலாச்சார அமைப்பு ஒன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

பூரியைச் சேர்ந்த ஸ்ரீ ஜெகந்நாத் சேனா என்கிற அமைப்பு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரியதர்ஷன் பட்நாயக் இந்த மனுவை அனுப்பியுள்ளார்.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்திடம் இருந்த 105 காரட் கொண்ட கோகினூர் வைரம், அவர் இறந்தைத் தொடர்ந்து அவரது மூத்த மகன் சார்லஸ் மன்னராக முடி சூட்டிக் கொண்டதால் அவரது மனைவியான ராணி கமிலாவுக்கு செல்லும் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...