No menu items!

நியூஸ் அப்டேப்: சர்க்கரை ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடு

நியூஸ் அப்டேப்: சர்க்கரை ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடு

கோதுமையை தொடர்ந்து சர்க்கரை ஏற்றுமதிக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இதுகுறித்து நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம், “நாட்டில் 2021-2022 (அக்டோபர்-செப்டம்பர்) கரும்பு அரவைப் பருவத்தில் சர்க்கரை இருப்பை பராமரிப்பதற்காகவும் விலையை கட்டுக்குள் வைப்பதற்கும் 2022 ஜூன் 1-ம் தேதி முதல் 100 மெட்ரிக் டன் அளவிற்கு மட்டுமே சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த உத்தரவு 2022 ஜூன் 1-ம் தேதி முதல் அக்டோபர் 31, 2022 வரையோ அல்லது மறு உத்தரவு வரும் வரையோ நீடிக்கும். உள்நாட்டு உபயோகத்திற்காக 2 முதல் 3 மாதங்களுக்காக 60 முதல் 65 மெட்ரிக் டன் அளவிற்கு சர்க்கரை இருப்பை பராமரிக்க வேண்டும் என்ற நோக்கில் ஏற்றுமதிக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கி சூடு: 19 குழந்தைகள் உள்பட 21 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில், தெற்கு டெக்சாஸின் யுவால்டே நகரில் உள்ள தொடக்கப் பள்ளி ஒன்றில், 18 வயது வாலிபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள், ஓர் ஆசிரியர் உட்பட 21 பேர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கி சூடு நடத்தியவர் காவல்துறையால் கொல்லப்பட்டுள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், “இந்த தாக்குதலை நடத்தியவர், இந்த சம்பவத்தின் போது தனியாகச் செயல்பட்டார். கைத்துப்பாக்கி ஒன்றையும் AR-15 ரக துப்பாக்கி ஒன்றையும் வைத்திருந்தார். துப்பாக்கிச் சூட்டின் தொடக்கத்தில் அவர் தனது பாட்டியை சுட்டுக் கொன்றதாக சந்தேகிக்கப்படுகிறது” என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர் அப்பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளி மாணவராக இருக்கலாம் என்றும் உள்ளூர் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ரவிச்சந்திரன் கடிதம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கு சிறைவாசி ரவிச்சந்திரனுக்கு விடுப்பு வழங்கக்கோரி அவரது தாயார் ராஜேஸ்வரி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தீர்ப்பு அடிப்படையில், தமிழக உள்துறை கடந்த நவம்பர் 17-ம் தேதி முதல் 30 நாட்கள் ரவிச்சந்திரனுக்கு சிறை விடுப்பு வழங்கியது.

அதன்படி மதுரை மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ரவிச்சந்திரன், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள சூரப்பநாயக்கன்பட்டியில் தாயார் ராஜேஸ்வரியுடன் வசித்து வந்தார். தொடர்ந்து சிறை விடுப்பு நீட்டிக்கப்பட்டதால் சூரப்பநாயக்கன்பட்டியிலேயே உள்ளார் ரவிச்சந்திரன்.

இந்நிலையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ரவிச்சந்திரன் கடிதம் எழுதியுள்ளார். முதல்வர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்ய வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதிமுகவுக்கு தலைமை ஏற்க மக்கள் என்னை விரும்புகிறார்கள்: சசிகலா

சென்னை தி.நகரில் இன்று திருமண விழா ஒன்றில் பங்கேற்ற சசிகலா தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ‘அதிமுக பொதுக் குழுவை விரைவில் கூட்ட போவதாக கூறி இருக்கிறார்கள். எதை செய்தாலும் அவர்களால் ஒரு கருத்துக்கு வர முடியாது. ஏனென்றால் தொண்டர்கள் அவர்களுடன் இல்லை” என்றார்.

தொடர்ந்து, “அதிமுக சரியான எதிர்க்கட்சியாக செயல்படவில்லை என்கிற குற்றச்சாட்டு உள்ளதே?” என்ற நிருபர்கள் கேள்விக்கு, “அதிமுக எந்த விஷயத்திலும் எதிர்க்கட்சியாக செயல்படவில்லை. அதனால் தலைமைக்கு நீங்கள் வர வேண்டும் என்று கூறுகிறார்கள். இதுவே பொதுமக்களின் கருத்தாக உள்ளது” என்று சசிகலா பதில் கூறியுள்ளார்.

சென்னையில் பாஜக நிர்வாகியை கொலை செய்த 3 ரவுடிகள்: போலீசார் வழக்கு பதிவு

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பாஜக எஸ்.சி. பிரிவு மாவட்ட தலைவரான பாலச்சந்தர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவத்தில் பாலச்சந்தரை கொலை செய்த ரவுடிகள் யார் என்பது அடையாளம் தெரிந்துள்ளது.

முன்விரோதம் காரணமாக, சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த ரவுடி பிரதீப் தனது கூட்டாளிகளான சஞ்சய், கலைவாணன் ஆகியோருடன் சேர்ந்து திட்டம் போட்டு போலீஸ் பாதுகாப்பையும் மீறி இந்த கொலையை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கொலையுண்ட பாலச்சந்தரின் சகோதரி அளித்த புகாரின் பேரில் 3 பேர் மீதும் சிந்தாதிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...