No menu items!

நியூஸ் அப்டேட்: தபால்காரர் வேலையை மட்டும் ஆளுநர் செய்யட்டும்: முதல்வர் தாக்கு

நியூஸ் அப்டேட்: தபால்காரர் வேலையை மட்டும் ஆளுநர் செய்யட்டும்: முதல்வர் தாக்கு

திராவிடர் கழகம் தலைவர் கி. வீரமணியின் நீட் எதிர்ப்பு, தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு தொடர் பரப்புரைப் பயண நிறைவு சிறப்புப் பொதுக் கூட்டம் சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, “எட்டுக்கோடி மக்களின் பிரதிநிதிகள் அனைவரும் சேர்ந்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு மசோதாவை, ஒரு நியமன ஆளுநர் என்ற ஒற்றை மனிதர் திருப்பி அனுப்புகிறார். நாம் மீண்டும் அனுப்பியதையும் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப தொடர்ந்து மறுக்கிறார் என்றால், இந்த நாட்டில் மக்களாட்சி நடக்கிறது என்று சொல்ல முடியுமா? ஆளுநரிடம் நான் கேட்பது என்பது சட்டமுன்வடிவுக்கான ஒப்புதல் அல்ல, ஒப்புதல் வழங்கும் அதிகாரம் அவருக்கு இல்லை. நாம் கேட்பது, இந்த சட்டமுன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வையுங்கள், ஆசிரியர் சொன்னதுபோல, “போஸ்ட்மேன் வேலை செய்ய வேண்டும்” என்பதுதான். முன்வடிவை அனுப்பி வைக்கும் அஞ்சல் துறைப் பணியைக் கூட ஆளுநர் செய்ய மறுப்பது என்பது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல”என்று கூறினார்.

மின் நெருக்கடி ஏன் உள்ளது: கிரிக்கெட் வீரர் டோனி மனைவி கேள்வி

இந்தியா முழுவதும் மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் எதிரொலியால், பல்வேறு மாநிலங்களிலும் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தில் நிலவும் மின் நெருக்கடி தொடர்பாக இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனியின் மனைவி சாக்‌ஷி சிங் அம்மாநில அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து சாக்‌ஷி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ஜார்கண்டின் வரி செலுத்துபவராக, இங்கு பல ஆண்டுகளாக மின் நெருக்கடி பிரச்சினை ஏன் உள்ளது என்பதை அறிய விரும்புகிறேன். நாங்கள் எங்கள் பங்கைச் சரியாக செய்து வருவதன் மூலம், மின் ஆற்றலைச் சேமித்து வருகிறோம்’’  என கூறி உள்ளார்.

ஆன்மீகப் பயணம் முடிந்தது; விரைவில் அரசியல் பயணம்: வி.கே. சசிகலா பேட்டி

சசிகலா இன்று சென்னையில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டு சென்றார். இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ”ஆன்மீக பயணத்தை நிறைவு செய்த நிலையில் விரைவில் அரசியல் பயணத்தை தொடங்க உள்ளேன். அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு தொடர்பாக விரைவில் மேல்முறையீடு செய்வேன்” என்றார். அப்போது, கோடநாடு வழக்கு தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், அந்த கேள்விக்கு சசிகலா பதிலளிக்க மறுத்துவிட்டார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த சசிகலா திருச்சி விமான நிலையத்திலும் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ‘உங்கள் அரசியல் பயணம் தனியாகவா? அல்லது கூட்டணி கட்சியுடனா?’’ என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சசிகலா, “பொறுத்திருந்து பாருங்கள்” என்றார்.

டுவிட்டரை வாங்கிய பின் எலன் மஸ்க் பதிவிட்ட முதல் ட்விட்

பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரின்100 % பங்குகளையும் வாங்க உலகின் முன்னணி கோடீஸ்வரரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க் முன்வந்தார். இதையடுத்து டுவிட்டரை எலான் மஸ்க்கிடம் 4,400 கோடி அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யும் ஒப்பந்தத்திற்கு அந்நிறுவனம் சம்மதித்தது. இன்று இந்த ஒப்பந்தம் இறுதியானது. இதனைத் தொடர்ந்து, டுவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளராக தன் முதல் டுவீட்டை அவர் பதிவிட்டுள்ளார். அதில், ”எனது மோசமான விமர்சகர்கள் கூட டுவிட்டரில் இருப்பார்கள் என நம்புகிறேன். ஏனென்றால் அதுதான் பேச்சு சுதந்திரம்” என்று பதிவிட்டுள்ளார். தொடர்ந்து அவர் பதிவிட்ட மற்றொரு டுவிட்டில் “சுதந்திரமான பேச்சு என்பது  செயல்பாட்டில் இருக்கும் ஜனநாயகத்தின் அடித்தளமாகும். மனித குலத்தின் எதிர்காலத்திற்கான முக்கிய விஷயங்கள் டுவிட்டரில் விவாதிக்கப்படுகிறது. புது அம்சங்களுடன் டுவிட்டரை மேம்படுத்துவதன் வாயிலாக டுவிட்டரை எப்போதும் விட சிறந்ததாக ஆக்க விரும்புகிறேன். டுவிட்டரில் வைரஸ் தாக்குதல்களை நிறுத்துவதன் வாயிலாகவும், எல்லா மனிதர்களையும் அங்கீகரிப்பதன் மூலமும்  டுவிட்டரை  சிறந்ததாக்க விரும்புகிறேன். டுவிட்டரில்  மிகப்பெரிய ஆற்றல் இருக்கிறது. அதனை வெளிக் கொண்டுவர இந்த நிறுவனத்துடனும் அதன் பயனர்களின் சமூகத்துடனும் இணைந்து பணிபுரிய நான் ஆவலுடன் காத்திருக்கிறேன் ” என்று தெரிவித்துள்ளார்.

குற்றாலம் அருவிகளில் மீண்டும் இரவு குளிக்க அனுமதி

தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக குளிக்க அனுமதி இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை குளிக்க அனுமதி வழங்கிய மாவட்ட நிர்வாகம் இரவு நேரத்தில் குளிக்க அனுமதி வழங்கவில்லை. இதனையடுத்து, இது தொடர்பாக கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் செ. கிருஷ்ணமுரளி சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க அனுமதி கடிதம் கொடுத்திருந்தார். தென்காசி எம்எல்ஏ பழனியும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தார். இதனடிப்படையில் ஏப்ரல் 25ஆம் தேதி முதல் 24 மணிநேரமும் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு அனுமதி அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...