No menu items!

க்ளீன் போல்ட் – கிரிக்கெட் காதல்கள்

க்ளீன் போல்ட் – கிரிக்கெட் காதல்கள்

பிரிக்க முடியாத விஷயங்களில் ஒன்று கிரிக்கெட்டும் காதலும். 1960-களின் கிரிக்கெட் நாயகனான பட்டோடி, அன்றைய கனவுக் கன்னி ஷர்மிளா தாகூரை காதலித்துத் தூக்க, அப்போது தொடங்கியது கிரிக்கெட் காதல்கள். கபில்தேவ், கங்குலி, அசாருதீன், தோனி என்று தொடரும் இந்த காதல் பாரம்பரியம் இன்றைக்கு இஷான் கிஷன் வரை வந்திருக்கிறது. இந்த காதல் ரூட்டில் இப்போதைக்கு சொல்லி அடிக்கும் இளம் கில்லிகள் இவர்கள்.

ரிஷப் பந்த்:

தோனி, கோலி வரிசையில் கிரிக்கெட்டில் டாப் கியரில் பயணிப்பவர் ரிஷப் பந்த். 23 வயதிலேயே 52.5 கோடி சொத்துக்கு அதிபதி. ஆண்டு வருமானம் சுமார் 10 கோடி ரூபாய். ஐபிஎல்லில் டெல்லி அணிக்கு கேப்டன். இப்படி ஒரு பக்கம் பணம், மறுபக்கம் புகழ் என்று காதலுக்கு தேவையான அம்சங்கள் பொருந்திப் போனதால், அவருக்கு காதலி கிளிக் ஆனதில் ஆச்சரியம் இல்லை.

பந்த்தின் காதலியின் பெயர் இஷா நேகி. 2019-ல் நடந்த ஆஸ்திரேலிய தொடருக்குப் பிறகு தனது காதலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரங்கமாக அறிவித்தார் ரிஷப் பந்த்.

ரிஷப்பை போலவே இஷா நேகியும் சாதனையாளர்தான். சிறுவயதிலேயே தொழிலதிபரான இஷா, சில மாதங்களுக்கு முன் டெல்லியில் ‘இஷாஸ் குளோசெட்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கி உடைகள் முதல் காலணிகள் வரை இளசுகளுக்குத் தேவையான அத்தனை விஷயங்களையும் வழங்கி வருகிறார். நல்ல காதலனுக்கு இலக்கணமாக, இந்த நிறுவனத்தின் விளம்பரத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார் ரிஷப் பந்த். பணி நேரம் போக மற்ற நேரங்களில் இவர்கள் ஒன்றாகச் சுற்ற, புகைப்படக்காரர்கள் இவர்களைச் சுற்றி வருகிறார்கள்.

ஷுப்மான் கில்

வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட்டர் ஷுப்மான் கில். 22 வயது. 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியின் துணை கேப்டனாக இருந்தவர். மாநிலம் பஞ்சாப். ஐபிஎல் அணி குஜராத் டைட்டன்ஸ். ஒபனிங் பேட்ஸ்மேன். இப்படி பல விஷயங்கள் இவரைச் சுற்றி இருந்தாலும் இவர் எல்லோராலும் கவனிக்கப்படுவது இந்த முக்கிய விஷயத்துக்காக.

உண்மையா பொய்யா தெரியாது… ஆனால், சச்சின் மகளான சாராவை ஷுப்மான் கில் காதலிப்பதாக ஒரு செய்தி பத்திரிகை வட்டாரத்தில் கொடிகட்டிப் பறக்கிறது. சாராவோ, ஷுப்மான் கில்லோ இந்தச் செய்தியை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

ஆனால், ஷுப்மான் கில் கிரிக்கெட்டில் சாதிக்கும்போதெல்லாம் தனது வலைதளப் பக்கத்தில் சாரா கொண்டாடுவதும், சாராவின் இன்ஸ்டா போஸ்ட்களுக்கு கில் சுவாரஸ்யமாக பதிலளிப்பதும் இந்த வதந்திகளுக்கு கூடுதல் சிறகுகளைத் தருகின்றன.

இந்தச் செய்திகளால் சாராவுக்கு பலன் இருக்குமா என்று தெரியவில்லை. ஆனால், கில் காட்டில் மழை பெய்வதற்கு இந்த வதந்திகளும் ஒரு முக்கிய காரணம். “என்ன இருந்தாலும் சச்சினுக்கு மாப்பிள்ளையா வரப் போறவராச்சே” என்று கில்லுக்கு மரியாதை கூடி வருகிறது. இந்த கிசுகிசுக்கள் விஷயத்தில் கில், சாராவைப் போல் சச்சினும் அமைதி காப்பது கூடுதல் புகையைக் கிளப்புகிறது.

கே.எல்.ராகுல்

இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலமாக கருதப்படும், கே.எல்.ராகுலின் எதிர்காலம் இப்போது ஆத்யா ஷெட்டியின் கையில்.

பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகளான ஆத்யா ஷெட்டி, 2019 முதல் ராகுலின் இதயச் சிறையில் இருக்கிறார்.

இலைமறை காய்மறையாக இருந்துவந்த இவர்களின் நட்பு, சில மாதங்களுக்கு முன் சுனில் ஷெட்டியின் மகன் ஆஹான் ஷெட்டியின் சினிமா பிரிவியூவுக்கு ஆத்யாவும் ராகுலும் ஜோடியாக வந்ததன் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. பல இடங்களில் ஒன்றாகச் சுற்றினாலும் இப்போதைக்கு இந்த ஜோடி, தங்கள் காதலை பகிரங்கமாக அறிவிக்கவில்லை.

இஷான் கிஷன்

காதில் கடுக்கன் சகிதம் கிரிக்கெட் மைதானத்தில் ஃபேஷன் ஹீரோவாக சுற்றி வருபவர் இஷான் கிஷன்.

இதனால்தானோ என்னவோ ஃபேஷன் உலகில் கொடிகட்டிப் பறக்கும் அதிதி ஹூண்டியாவின் மனதில் நாற்காலி போட்டு அமர்ந்திருக்கிறார் இஷான்.

இந்த ஃபேஷன் நட்சத்திரங்கள் ஜோடி சேர்ந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டன.

ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் நகரில் பிறந்தவர் அதிதி ஹூண்டியா. 2017-ம் ஆண்டில் ராஜஸ்தான் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிதி, அதே ஆண்டில் நடந்த மிஸ் இந்தியா போட்டியிலும் பங்கேற்றுள்ளார். இதில் பட்டம் பெறாமல் போனாலும், 2018-ம் ஆண்டில் மிஸ் டிவா – சூப்பர்நேஷனலாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அழகிப் போட்டிகளில் பங்கேற்கும் நேரம்போக இஷான் கிஷன் சாதனை படைக்கும்போதெல்லாம் அவரை வாழ்த்தி ட்வீட் போடுவதில் நேரத்தைச் செலவழிக்கிறார் அதிதி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...