No menu items!

நியூஸ் அப்டேட்: அமித்ஷா சென்னை வருகை

நியூஸ் அப்டேட்: அமித்ஷா சென்னை வருகை

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கர்நாடகா வழியாக புதுச்சேரி செல்ல திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில், அவரது பயணத்தில் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இன்று இரவு சென்னை வரும் அமித்ஷா, ஆவடியில் உள்ள சி.ஆர்.பி.எப். முகாமிலுள்ள விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 8.40 மணிக்கு ஆவடியிலிருந்து புதுச்சேரிக்கு தனி ஹெலிகாப்டரில் செல்லும் அவர், நிகழ்ச்சிகள் முடிந்தபின் சென்னை திரும்புகிறார். இதையடுத்து மாலை 6.20 மணிக்கு சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்ல பயணத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்திய துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவும் நாளை மாலை பெங்களூரில் இருந்து தனி விமானத்தில் இந்திய விமானப்படை தனி விமானத்தில் சென்னை வரும் நிகழ்ச்சி இருக்கிறது. ஒரே நேரத்தில் இரண்டு முக்கிய தலைவா்கள் தனித்தனி விமானங்களில் சென்னை பழைய விமான நிலையம் வருவதையொட்டி, சென்னை பழைய விமான நிலையத்தில்  பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை: தேர்தல் ஆணையம் ஆலோசனை

இந்திய தேர்தல் ஆணைய குழு அண்மையில் தென் ஆப்பிரிக்கா, மொரிஷியஸ் நாடுகளில் சுற்றுப் பயணம் செய்தது. அந்த நாடுகளில் வாழும் இந்திய வம்சாவளியினரிடம் தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா கலந்துரையாடினார். அப்போது “பாதுகாப்புப் படை வீரர்களுக்காக மின்னணு தபால் வாக்குரிமை திட்டம் (இடிபிபிஎஸ்) வெற்றிகரமாக அமல் செய்யப்பட்டிருக்கிறது. இதே திட்டத்தை வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு நீட்டிப்பது குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.

சென்னை ..டியில் கொரோனா பாதிப்பு 55-ஆக உயர்வு

தமிழகத்தில் கடந்த 2 மாதமாக கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வந்தது. கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கி கொள்ளப்பட்டன. இந்த நிலையில் சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் படிக்கும் மாணவிகள் சில பேருக்கு காய்ச்சல், சளி போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டன. பரிசோதனை முடிவில் 3 மாணவிகளுக்கு தொற்று உறுதியானது. தொடர்ந்து சுகாதார துறையினர் கண்காணிப்பு மற்றும் தீவிர நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினர். பாதிக்கப்பட்டுள்ள மாணவிகளுடன் தொடர்பில் இருந்தவர்களிடம் ஆய்வு மேற்கொண்டதில் நேற்று 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதை தொடர்ந்து நேற்று 1,420 பேருக்கு பரிசோதனை செய்ததில் மேலும் 25 பேருக்கு தொற்று உறுதியானது. இதன்மூலம் ஐஐடி வளாகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடைய எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.

ரஷ்யாவை சார்ந்து இந்தியா இருப்பதை அமெரிக்கா விரும்பவில்லை: பெண்டகன்

அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பெண்டகன் செய்தி  தொடர்பு செயலர் ஜான் கிர்பி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, “பாதுகாப்புத் தேவைகளுக்காக ரஷ்யாவை நம்பியிருப்பதை நாங்கள்  விரும்பவில்லை என்பதை இந்தியா மற்றும் பிற நாடுகளுக்கு தெளிவாக எடுத்துரைத்துள்ளோம்.  அதேநேரத்தில்,  இந்தியாவுடன் நாங்கள் கொண்டிருக்கும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மதிக்கிறோம்.  இதை மேம்படுத்துவதற்கான வழிகளையும் நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம்” என்றார்.

சிங்கிள் யூஸ்பிளாஸ்டிக்கை பயன்படுத்தக் கூடாது: தமிழக அரசு அறிவுறுத்தல்

தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இருந்தும் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் இந்த பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதைத் தடுக்க உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் அவ்வப்போது சோதனைகள் நடத்தப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது. இது தொடர்பான வழக்கிலும் உயர் நீதிமன்றம் தொடர்ந்து உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. இந்நிலையில் டெலிவரி நிறுவனங்கள் தடை செய்யப்பட்ட ‘சிங்கிள் யூஸ்’ பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்று கடிதம் எழுதி உள்ளதாக தமிழக சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹூ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில்,”ஸ்விக்கி, ஜூமோட்டோ, அமேசான், பிளிப்கார்ட், சூப்பர் மார்க்கெட்டுகள் உள்ளிட்டவை ஒருமுறை பயன்படுத்தக்கூடும் ‘சிங்கிள் யூஸ்’ பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு கடிதம் எழுதியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தி நிறுத்தம்: சீரம் நிறுவனம் தகவல்

சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவன தலைவர் அதார் பூனாவாலா மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அதிகளவில் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதால் அவற்றின் உற்பத்தியை கடந்த டிசம்பர் மாதமே நிறுத்திவிட்டதாக அவர் தெரிவித்தார். தற்போது 20 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ள நிலையில் அவற்றை இலவசமாக தர முன் வந்தும்கூட அதை வாங்க யாரும் முன்வரவில்லை என்றும் அதார் பூனாவாலா தெரிவித்தார். மேலும், 5 முதல் 11 வயதுள்ள சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதிக்கும் விவகாரத்தில் அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்றும் அதார் பூனாவாலா கேட்டுக்கொண்டார். 2-வது தவணை தடுப்பூசி போட்டவர்கள் பூஸ்டர் ஊசி செலுத்திக்கொள்வதற்கான கால இடைவெளியை 6 மாதமாக குறைக்க வேண்டும் என்றும் அரசை அவர் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...