No menu items!

லாரன்ஸூக்கு ஜோடியாகும் நயன்தாரா!

லாரன்ஸூக்கு ஜோடியாகும் நயன்தாரா!

இன்றைக்கு பரபரப்பாக இருக்கும் இயக்குநர்கள் பட்டியலில் லோகேஷ் கனகராஜ் முன்னணியில் இருக்கிறார். காரணம் அடுத்தடுத்த ஹிட். இப்போது விஜயின் ‘லியோ’ படமும் எதிர்பார்ப்பை கிளப்பியிருப்பதால் கோலிவுட்டின் டார்லிங் இயக்குநராகி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

இயக்குநராக இருக்கும் இவர் இப்போது தயாரிப்பாளராகவும் மாறவிருக்கிறார். லோகேஷ் கனகராஜ் தயாரிக்கவிருக்கும் படத்தை அவரது நெருங்கிய நண்பரான ’ஆடை’ பட இயக்குநர் ரத்னகுமார் இயக்குகிறார். படத்தின் வியாபாரத்தை பெரிதாக்குவதற்காக, தனது பெயரையே ப்ராண்டாக பயன்படுத்தும் வகையில் திரைக்கதையை லோகேஷ் கனகராஜ் எழுதியிருக்கிறார்.

இப்பட வேலைகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. ரத்னகுமாரின் படத்தின் நாயகனாக டான்ஸ் மாஸ்டரும் நடிகருமான ராகவரா லாரன்ஸ் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

பாலிவுட்டில் ஷாரூக்கானுக்கு ஜோடியாக அறிமுகமாக இருப்பதால், நயன்தாரா இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வாரா என்று எழும் கேள்விக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே, திரைக்கதையை லோகேஷ் கனகராஜ் எழுதியிருக்கிறார்.

மேலும் நயன்தாராவை நடிக்க வைத்தால், பட வியாபாரத்தை எளிதில் முடித்துவிடலாம் என்பதால் அவருக்கு பெரும் தொகையை சம்பளமாக கொடுக்கவும் லோகேஷ் தரப்பு தயாராக இருக்கிறதாம்.

இதனால் நயன்தாரா லாரன்ஸூக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்புகள் மிக அதிகம் என்கிறது லோகேஷ் வட்டாரம்.


ஷாரூக்கான் மீது விக்னேஷ் சிவனுக்கு பொறாமையா?

விக்னேஷ் சிவன் ஒரு இயக்குநராக பிரபலமடைந்ததை விட, நயன்தாராவின் காதலராக, கணவராக ரொம்பவே பாப்புலர் ஆகியிருக்கிறார்.

அஜித்தை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு தவறிப்போனாலும், அதைப் பற்றி கவலைப்படாமல் சமூக ஊடகங்களில் தொடர்ந்து ஏதாவது ஒரு போஸ்ட்டை போட்டப்படியே பிஸியாக இருக்கிறார்.

சமீப நாட்களாக ரஜினியின் ‘ஜெயிலர்’ படம் பற்றிய போஸ்ட்களை அதிகம் பதிவிட்டு இருக்கிறார் விக்னேஷ் சிவன். அதோடு நயனும், விக்கியும் இணைந்து சென்ற டூர், தங்களது குழந்தைகளுடனான வீடியோ, நயன் தாராவின் வீடியோ என அள்ளிவிடுவதால் இளசுகளின் பொறாமைக்கு உள்ளாகி இருக்கிறார்.

இது போதாது என்று நயன்தாரா தொடங்கியிருக்கும் காஸ்மெட்டிக் கம்பெனியின் லிப் பாம் பற்றிய வீடியோக்களையும் பதிவேற்றி வருகிறார்.

ஆனால் நயன்தாரா பாலிவுட்டில் அடியெடுத்து வைக்க காரணமாக இருக்கும் ’ஜவான்’ படம் பற்றிய எந்தவொரு புகைப்படத்தையோ அல்லது வீடியோவையோ இதுவரையில் வெளியிடவே இல்லை.

ஆனால் இன்ஸ்டாக்ராமில் தனது கணக்கை தொடங்கியிருக்கும் நயன்தாரா தன்னுடைய குழந்தைகள் வீடியோவையும், ஜவான் ட்ரெய்லரையும் பகிர்ந்து இருக்கிறார்.

இதற்கு பிறகும் கூட விக்னேஷ் சிவன் ’ஜவான்’ பட த்தையும், ஷாரூக்கானையும் கண்டுகொள்ளவே இல்லை.

நயன் தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு ஷாரூக்கான் நேரில் வந்து வாழ்த்தினார். பிறகு அவர்களது வீட்டிற்கு சென்று மதிய உணவருந்தியும் இருக்கிறார். இந்தளவிற்கு நெருக்கமாக இருக்கும் ஷாரூக்கானுடன் நயன் நடித்திருக்கும் படம் பற்றி வாயே திறக்காமல் இருப்பது ஏன்.. விக்னேஷ் சிவனுக்கு ஷாரூக்கான் மீது பொறாமையா என நெட்டிசன்கள் இப்போது விவாதிக்க தொடங்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...