No menu items!

நயன்- விக்கி விதிகளை மீறினார்களா? – விளக்குகிறார் மருத்துவர்

நயன்- விக்கி விதிகளை மீறினார்களா? – விளக்குகிறார் மருத்துவர்

நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளனர். இதை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

இதற்காக ஒருபுறம் அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிய, மறுபுறம் திருமணமான குறுகிய காலத்தில் வாடகைத் தாய் மூலம் இப்படி குழந்தை பெற்றுக்கொள்ளலாமா என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது. இந்த சர்ச்சைகளுக்கான விடையைத் தெரிந்துகொள்ள கருத்தரிப்பு மருத்துவர் டாக்டர். பிரியா கண்ணனிடம் பேசினோம்.

வாவ் தமிழா : சர்ரோகஸி என்றால் என்ன? கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்.

மருத்துவர். பிரியா கண்ணன் : ஒரு பெண்ணின் கர்ப்பப்பை ஏதாவது காரணத்தினால் ஒரு குழந்தையை தாங்க முடியவில்லை, அல்லது கருத்தரிக்க முடியவில்லை என்றால் அந்த தம்பதியினரில் பெண்ணின் கரு முட்டையையும், ஆணின் உயிர் அணுக்களையும் எடுத்து, செயற்கையாக கருத்தரிக்க செய்து, அவற்றை வேறொரு ஆரோக்கியமான கர்ப்பப்பை கொண்ட பெண்ணின் கருப்பையில் செலுத்தி குழந்தை பெறுதலை சர்ரோகஸி அல்லது வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளுதல் என்கிறோம்.

வாவ் தமிழா: வாடகைத் தாய் யார் என்று பெற்றோருக்கு தெரியுமா? வாடகைத் தாய்க்கு நாம் யாருக்கு குழந்தை பெற்று கொடுக்கிறோம் என்று தெரியுமா?

மருத்துவமருத்துவர். பிரியா கண்ணன் : ஆம், பொதுவாக வாடகைத் தாயாக அக்கா, தங்கை, நெருங்கிய நண்பர்கள் ஆகியோர் வருவார்கள். சில சமயங்களில், கொஞ்சம் வறுமையில் இருப்பவர்கள் வருவார்கள். நாங்கள், வாடகை தாயை முடிவு செய்தவுடன், குழந்தையின் தாய், தந்தை, ஒரு சாட்சி, வாடகை தாய் அவரது கணவர், அவர்களின் சாட்சி ஆகிய அனைவரையும் ஒன்றாக சேர்த்து, வழக்கறிஞர் முன்னிலையில் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடச் சொல்வோம். வாடகைத் தாயை, குழந்தையின் தாய் தந்தை அறிந்து கொள்வது சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டிருக்கிறது. எனது அனுபவத்தில் வெளியூரிலிருந்து வந்த வாடகைத் தாயை, குழந்தையின் தாய் தன்னுடனே தங்கவைத்து குழந்தையை பெற்று வாங்கிக்கொண்டார். இது சகஜம்தான்.

நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதிக்கு திருமணமாகி 4 மாதங்கள்தான் ஆகின்றன. ஆனால் 2021, டிசம்பர் மாதம் புதிதாக நடைமுறைக்கு வந்திருக்கும் சட்டப்படி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற திருமணமாகி 5 ஆண்டுகள் முடிந்திருக்க வேண்டும் என்ற விதி உள்ளதே. பின்பு எப்படி அவர்கள் குழந்தை பெற்றார்கள்?

வாடகை தாயின் உதவியுடன் குழந்தை பெற, திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும் என்ற விதியை 2021 டிசம்பர் மாதம் அறிவித்திருந்தார்கள். இந்த வருடம் ஜனவரி மாதம் அது அமலுக்கு வந்தது. ஆனால், எங்களை போன்ற மருத்துவர்களுக்கு சில மாதங்கள் விதிவிலக்கு அளித்திருந்தனர். அதனால் நாங்கள் முன்பே முடிவு செய்தபடி, சில தம்பதிகளுக்கு இந்த முறையை பயன்படுத்த தடை எதுவும் இல்லாமல் இருந்தது. நயன்தாரா, விக்னேஷ் சிவனை பொருத்தவரை, அவர்கள் வாடகை தாயின் உதவியுடன் குழந்தை பெற டிசம்பருக்கு முன்பே முடிவு எடுத்திருக்கலாம். அப்போதே அவர்களின் கரு முட்டையும் உயிர் அணுக்களையும் அவர்கள் சேகரித்திருக்கலாம். அதனால்தான் இப்போது அவர்களுக்கு குழந்தை பிறந்திருக்கிறது.

வாவ் தமிழா: குழந்தை பெற்றுக்கொள்ளும் வாடகை தாய்க்கு குழந்தையுடன் இயல்பாக ஏற்படும் உறவை எப்படி கையாள்வார்கள்?

மருத்துவர். பிரியா கண்ணன்: ஒரு பெண்ணை வாடகை தாயாக தேர்ந்தெடுத்ததிலிருந்தே நாங்கள் அவர்களுக்கு இதுபோன்ற விஷயங்களை சொல்லி கவுன்சிலிங்க் கொடுப்போம். அதிகமாக உணர்வுகளை வளர்த்துக்கொள்ளாமல் இருக்க அது உதவும். மனதளவிலும் உடலளவிலும் இப்படி தயாராக இருக்கும் பெண்களையே நாங்கள் தேர்வு செய்வோம். எனது அனுபவத்தில் கொஞ்சம் வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கும் பெண்கள் பணத்திற்காக இப்படி செய்வதை பார்த்திருக்கிறேன். அவர்களின் குடும்பம், குழந்தைகள் ஆகியோருக்காக செய்யும் பெண்கள் மிகவும் மெச்சூர்டாக இதை கையாண்டுவிடுவார்கள்.

வாவ் தமிழா: வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டால் குழந்தைக்கு யார் தாய்ப்பால் கொடுப்பார்கள்?

மருத்துவர். பிரியா கண்ணன் : குழந்தை பிறந்த பிறகு வாடகை தாய்க்கு குழந்தையை ஒரு முறை கூட காண வாய்ப்பு இருக்காது. நாங்கள் அதனை அனுமதிக்க மாட்டோம். குழந்தையை பெற்ற மறு நிமிடமே குழந்தைக்கும் வாடகை தாய்க்கும் இடையேயான உறவு முடிந்துவிடும். குழந்தை பெற்ற பிறகு வாடகை தாய் ஒரிரு மாதம் எங்களிடம் கண்காணிப்புக்காக வரும்போதுகூட நாங்கள் குழந்தையின் நலம் பற்றி கூட அதிகம் பகிர்ந்துகொள்ள மாட்டோம். குழந்தையின் தாய்ப்பால் உள்ளிட்ட தேவைக்காக, தாய்ப்பால் வங்கிகளையோ, தாய்ப்பால் பார்முலாக்களையோ பயன்படுத்த பரிந்துரைப்போம். இயல்பாகவே குழந்தை பெற்றுக்கொள்ளும் சில தாய்மார்களுக்கு பால் சுரக்காத போது செய்யும் மாற்றுவழி இதுதான். குழந்தையின் நலனுக்கு அதுவே போதுமானதாக இருக்கும்.

புதிதாக பெற்றோர் ஆகியிருக்கும் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிக்கு எனது வாழ்த்துகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...