ரஜினியுடன் ‘பேட்ட’ படத்தில் தலையைக் காட்டியவர், ‘மாஸ்டர்’ படத்தில் விஜய்க்கு ஜோடியானார் மாளவிகா மோகனன்.
இப்போது விக்ரமுடன் ‘தங்கலான்’ படத்தில் நடித்து வருகிறார்.
மும்பைவாசியாக இருந்த மாளவிகாவுக்கு தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தைப் பிடித்துவிட வேண்டுமென்ற தீராத ஆசை இருக்கிறதாம். ஆனால் விஜயுடன் நடித்தப் பிறகும் சரியான கமர்ஷியல் பட வாய்ப்புகள் அமையாததால் வருத்தம் இருக்கிறதாம்.
எப்படியாவது தமிழில் முன்னணி இடத்தைப் பிடித்துவிட வேண்டுமென்ற வேகத்தில் மாளவிகா மோகனன் பல சலுகைகளை அள்ளிவிட்டு கொண்டிருக்கிறாராம்.
அதாவது படத்தில் நான் எவ்வளவு மணி நேரம் வருகிறேன். எனக்கு காட்சிகள் எத்தனை என்பதெல்லாம் முக்கியமில்லை. முக்கிய இயக்குநர்கள், நடிகர்களின் படங்களில் நான் இருக்கவேண்டும். கால்ஷீட் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கிறேன். சம்பளத்தைக் கூட குறைத்து கொள்கிறேன். வாய்ப்புகளைப் பிடித்து வாருங்கள் என தன்னுடைய மேனேஜரிடம் கட்டளையிட்டு இருக்கிறாராம்.
இப்படி ஆடித்தள்ளுபடி போல பல சலுகைகளை அள்ளிவிட்டாலும், வாய்ப்புகள்தான் வந்தப்பாடில்லை என்பதால் மாளவிகா மோகனன் தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக ஊடகங்களில் தொடர்ந்து பதிவேற்றிக் கொண்டே இருக்கிறார்.
கேஜிஎஃப் ஹீரோவின் சம்பளம் இவ்வளவா?
கேஜிஎஃப் என்று ஒரே படம். இரண்டுப் பாகங்கள். ஒட்டுமொத்த கன்னட சினிமா உலகையே உலகம் முழுவதிலும் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டன. ஆனால் அதற்குப் பிறகு வெளியான ‘காந்தாரா’ மற்றும் ‘சார்லி 555’ படங்களைத் தவிர வேறெந்தப் படங்களும் சரியாக எடுப்படவில்லை. அதனால் இந்தப் படங்களுக்குப் பிறகு மீண்டும் கன்னட சினிமா தனது திசையில் பயணிக்க ஆரம்பித்துவிட்டது.
கேஜிஎஃப் படத்தின் மாபெரும் வெற்றி கன்னட சினிமாவுக்கு பலனை கொடுத்திருக்கிறதோ இல்லையோ, அப்பட ஹீரோ யாஷ்ஷூக்கு சுக்கிர திசையை வழங்கி இருக்கிறது.
கேஜிஎஃப் இரண்டுப் பாகங்களும் வெளிவந்த பிறகும் தனது அடுத்தப்பட குறித்த தகவல்களை வெளியிடாமல், நீண்ட ஓய்வில் இருந்தார் யாஷ்.
இதனால் அடுத்து யாருடையப் படத்தில் யாஷ் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி எல்லோருக்குமே இருந்தது. யார் எதிர்பாராத வண்ணம் கார்த்தியை வைத்து ‘சர்தார்’ படத்தை இயக்கிய பி.எஸ். மித்ரன் யாஷ்ஷூக்கு ஒரு கதை பண்ணிக்கொண்டிருந்தார்.
தற்போது அந்த ப்ராஜெக்ட்டும் கேள்விக்குறியாகி இருக்கிறது. இந்நிலையில் யாஷ் ஹிந்தியில் மிகப் பிரம்மாண்டமாக எடுக்க இருக்கும் ’ராமாயணம்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறுகிறார்கள்.
நிதேஷ் திவாரி இயக்கவிருக்கும் ராமாயணத்தில் சாய் பல்லவி சீதையாகவும், ரன்பீர் கபூர் ராமராகவும் நடிக்க இருக்கிறார்கள். ராவணனாக நடிக்க யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்தபோதுதான், கேஜிஎஃப்-பில் மிரட்டிய யாஷ்ஷை அணுகி இருக்கிறார் நிதேஷ் திவாரி.
கேஜிஎஃப் மூன்றாம் பாகம் என்று பிஸியாக இருந்த யாஷ், அதிக நாட்கள் கால்ஷீட் கொடுக்க முடியாது. முதல் பாகத்தில் நடிக்க 15 நாட்கள் கால்ஷீட் தருகிறேன். சம்பளம் 100 கோடி என்று வெளிப்படையாகவே சொல்லிவிட்டாராம்.
இதைக் கேட்டு நிதேஷ் திவாரி அதிர்ச்சியானாலும், சரியென ஒப்புக்கொண்டிருப்பதாகவும் பேச்சு அடிப்படுகிறது.