No menu items!

லியோ பாடல் சர்ச்சை – காப்பியடித்தாரா அனிருத்?

லியோ பாடல் சர்ச்சை – காப்பியடித்தாரா அனிருத்?

அக்டோபர் 19 ஆம் தேதி ஆரம்பித்து தற்போது வரை லியோ ஃபீவர் குறையவில்லை. ட்ரைலரில் வந்த கெட்ட வார்த்தை, பாட்டில் வந்த விஜய் சிகரெட் பிடிக்கும் காட்சிகள், நெகடிவ் விமர்சனங்கள் என்று தொடர்ந்து சர்சைகளிலேயே சென்றுக் கொண்டிருக்கிறது லியோ.

இப்போது இன்னொரு சர்ச்சை. லியோவில் வரும் ஆர்டினரி பெர்சன் (Ordinary Person) பாடல் காப்பியடித்த பாடல் என்று சர்ச்சை கிளம்பியிருக்கிறது.

கடந்த சில தினங்களாக லியோ விஜய் சமூக ஊடகங்களை ஆக்கிரமித்திருந்தார். இப்போது லியோ பாடல் இணையத்தைக் கலக்கிக் கொண்டிருக்கிறது. லியோ படத்தில் வரும் ஆர்டினரி மேன் பாடல் வீடியோ யூடியுப்பில் இரண்டு தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. பாடல் வெளிவந்ததும் விஜய் ரசிகர்களுக்கும் கொண்டாட்டம். அனிருத் ரசிகர்களுக்கும் கொண்டாட்டம். ஆனால் இந்த மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. அந்தப் பாடல் காப்பி என்று கமெண்டுகள் வரத் தொடங்கின.

பிகி பிளைன்டர்ஸ் (Peaky Blinders) என்கிற ஆங்கில வெப் தொடரில் வரும் வேர் ஆர் யு (where are you) பாடலின் காப்பி என்று கமெண்டுகள் வந்தன.

உடனே இணையத்தில் வேர் ஆர் யூ என்ற பாடல் அவசர அவசரமாக தேடப்பட்டது. அதனு அனிருத்தின் ஆர்டினரி பெர்சன் பாடல் ஒப்பிடப்பட்டது.

இரண்டுக்கும் ஒற்றுமைகள் அதிகமாக இருக்கின்றன. என்று கமெண்டுகள் வந்தன.
அனிருத் மீண்டும் காப்பியா? என்ற கேள்விகள் எழுந்தன.

ஏற்கனவே, கோலாமாவு கோகிலா படத்தில் வரும் “எனக்கு கல்யாண வயசுதா வந்திடுச்சிடி” பாடல் காப்பி என்று பெரிய சர்ச்சை ஏற்பட்டது.

வேர் ஆர் யு பாடலை இசையமைத்த ஒட்னிக்கா (Otnicka)வின் இன்ஸ்டாகிராம், டிவிட்டர் கமெண்ட்ஸில் லியோ, அனிருத் பேச்சு அடிப்படுவதை கண்ட ஒட்னிக்கா முதலில் குழப்பமடைந்தார். சம்பந்தமில்லாமல் லியோ படம் குறித்து என்னுடைய இன்ஸ்டாகிராம், டிவிட்டர் கமெண்ட்ஸ்களில் பதிவிடுகிறார்கள் என்று அவருக்கு தெரியவில்லை. புரியவில்லை.

இந்த சர்ச்சயைக் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்து விளக்கமளித்துள்ளார், ஒட்னிக்கா.

’ லியோ’ என்ற படம் குறித்து எனக்கு நூற்றுக்கணககன மெசேஜ் அனுப்பியவர்களுக்கு நன்றி. என்னால் அனைத்தையும் பார்க்க முடிகிறது. ஆனால் அனைவருக்கும் என்னால் பதிலளிப்பது இயலாத காரியம். என்னுடைய மெயில், இன்ஸ்டாகிராம் ஆகியவை மெசேஜ்களால் நிரம்பி வழிகிறது. இந்த விவகாரம் குறித்து எங்களுக்கு இன்னும் தெளிவாக தெரியவில்லை. நாங்கள் இதுகுறித்து விசாரித்து வருகிறோம். விரைவில் என்ன நடக்கிறது என்பது குறித்து தெரியப்படுத்துகிறேன்.ஆனால் நான் யார் மீதும் குற்றம் சுமத்தவில்லை’ என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் இந்தப் பாடல் காப்பிரைட் தொடர்பாக யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

இசையமைப்பாளராக அறிமுகமான முதல் படத்திலிருந்து இப்போது வரை தொடர்ந்து ஹிட் கொடுத்துக்கொண்டு வருப்பவர் அனிருத்.

இருந்தாலும், தொடர்ந்து இதுமாதிரியான பாடல் காப்புரிமை சர்ச்சைகளிலும் அடிக்கடி அனிருத் சிக்கிக்கொள்கிறார்.

அவர் காப்பியடிக்கவில்லை. வேர் ஆர் யு பாடல் இன்ஸ்பிரேஷனாக கொண்டு அவருடைய தனிப்பானியில் தான் இசையமைத்துள்ளார் என்று அவருடைய ரசிகர்கள் கமெண்ட்ஸ்களில் கருத்துகளைப் பதிவிட்டுவருகின்றனர். ஆனால் இன்னும் அனிருத்திடமிருந்து பதில் வரவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...