No menu items!

கோலிக்கு ஆண் வாரிசு!

கோலிக்கு ஆண் வாரிசு!

விராட் கோலி – அனுஷ்கா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இத்தகவலை விராட் கோலி தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார். மகனுக்கு அக்காய் என்று பெயரிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் நட்சத்திர தம்பதிகளில் ஒருவராக விராட் கோலி – அனுஷ்கா தம்பதியினர் உள்ளனர். கடந்த 2017-ம் ஆண்டு இவர்கள் காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு கடந்த 20121-ம் ஆண்டு வாமிகா என்ற பெண் குழந்தை பிறந்தது.

கிரிக்கெட்டை புறக்கணித்த கோலி:

கடந்த சில வாரங்களாக விராட் கோலி கிரிக்கெட் போட்டிகளை தவிர்த்து வந்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக அவர் கிரிக்கெட் போட்டிகளை தவிர்த்து வருவதாக கூறப்பட்டது. அதே நேரத்தில் இந்தியாவுக்கு முக்கிய தொடராக கருதப்படும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரை விராட் கோலி புறக்கணித்தது விமர்சனத்தையும் ஏற்படுத்தியது.

விராட் கோலியின் மனைவி அனுஷ்கா கர்ப்பமாக இருப்பதாகவும், அதனால் அவருடன் இருப்பதற்காக இங்கிலாந்து தொடரை கோலி புறக்கணித்த்தாகவும் கூறப்பட்டது. ஆனால் அந்த தகவலை யாரும் உறுதிப்படுத்தவில்லை.

டிவில்லியர் பதிவு

விராட் கோலியின் நண்பரும், ஆர்சிபி அணியின் முன்னாள் வீர்ருமான ஏ பி டிவில்லியர்ஸ் இந்த தருணத்தில் ஒரு பதிவை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். விராட் கோலியும் அவரது மனைவியும் அடுத்த குழந்தையை எதிர்நோக்கி காத்திருப்பதாக அந்த பதிவில் கூறப்பட்டிருந்தது. ஆனால் 2 நாட்களுக்குப் பிறகு அந்த பதிவை நீக்கிய டிவில்லியர்ஸ், அதை வெளியிட்டதற்காக கோலி தம்பதியிடமும், ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து அனுஷ்கா கர்ப்பமாக இல்லை, அவர் வேறு ஒரு உடல்நலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் சில செய்தி ஊடகங்களில் வெளியானது. அவர்கள் வெளிநாட்டில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

ஆண் குழந்தை

இந்த சூழலில் தங்களுக்கு கடந்த 15-ம் தேதி ஆண் குழந்தை பிறந்திருப்பதாக விராட் கோலி நேற்று சமூக வலைதள பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார். அந்த குழந்தைக்கு அக்காய் என்று பெயரிட்டுள்ளதாகவும் விராட் கோலி குறிப்பிட்டிருந்தார். விராட் கோலியைப் போலவே அனுஷ்காவும் இந்த தகவலை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அக்காய் என்றால் என்ன?

அக்காய் என்றால் வழிகாட்டி மற்றும் கைகளைக் கொண்டு வழிநடத்துபவன், பாதுகாவலன் ஆகிய பொருள்களும் உள்ளன. மேலும் இந்த பெயரை ஆண் குழந்தைகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும் வைக்கலாம். இதனால்தான் இப்படி ஒரு வித்தியாசமான பெயரை விராட் கோலி தேர்வு செய்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...