No menu items!

கமலுக்கு திடீர் உடல் நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி

கமலுக்கு திடீர் உடல் நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி

நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன், உடல் நலக்குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கும் கமல்ஹாசன், இன்று மாலை வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கமலுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது மருத்துமனையின் அறிக்கைக்கு பிறகே தெரியவரும் என மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன்’ இரண்டாம் பாகத்தில் கமல் நடித்து வருகிறார். கடந்த ஞாயிறன்று ஐதராபாத் சென்ற கமல்ஹாசன், மூத்த இயக்குநர் கே. விஸ்வநாதன் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டார். மீண்டும் சென்னைக்கு திரும்பிய நிலையில், லேசான காய்ச்சல் மற்றும் உடல்சோர்வாக இருப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்தே நேற்று இரவு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவசர அவசரமாக தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட்டது ஏன்? உச்ச நீதிமன்றம் கேள்வி

மத்திய அரசின் கனரக தொழில்துறை அமைச்சகத்தின் செயலாளராக 1985 பஞ்சாப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயல் பணியாற்றி வந்தார். 60 வயதான அருண் கோயலின் பதவி காலம் வரும் டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனிடையே, பணிக்காலம் நிறைவடைவதற்கு முன் அருண் கோயல் கடந்த வெள்ளிக்கிழமை விருப்ப ஓய்வு பெற்றார். அடுத்த நாள் சனிக்கிழமை அருண் கோயலை இந்திய தேர்தல் ஆணையராக மத்திய அரசு நியமித்தது. இந்த நியமன ஒப்புதலை ஜனாதிபதி திரவுபதி முர்மு அளித்தார். இதனை தொடர்ந்து கடந்த திங்கங்கிழமை இந்திய தேர்தல் ஆணையராக அருண் கோயல் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையிலான 3 பேர் கொண்ட தேர்தல் ஆணையர்கள் குழுவின் அருண் கோயல் இடம்பெற்றுள்ளார்.

இந்நிலையில், மத்திய அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற மறுநாளே அருண் கோயல் இந்திய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக உச்ச  நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, அருண் கோயல் நியமனம் தொடர்பான ஆவணங்களை மத்திய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அப்போது, 18ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வர இருந்த நிலையில், அதே நாளில் புதிய தேர்தல் ஆணையர் பெயரை பிரதமர் அறிவிப்பதற்கான காரணம் என்ன என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மே 15 முதல் நவம்பர் 18ஆம் தேதி வரை தேர்தல் ஆணையர் பதவி காலியாக இருந்த நிலையில், அந்த காலகட்டத்தில் என்ன செய்துகொண்டிருந்தீர்கள் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி அவசர அவசரமாக தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட்டது ஏன்? 4 அதிகாரிகளில் அருண் கோயலை தேர்வு செய்தது எப்படி என்பது குறித்து அரசு வழக்குரைஞர் விளக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

ஸ்ரீநிதி மரணத்திற்கு நீதி கோரி போராட்டம்: மாதர் சங்க நிர்வாகிகள் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக நடந்த போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தின் போது போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தியது மற்றும் பள்ளி பொருட்களை சேதப்படுத்தியது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை டிஜிபி அலுவலகத்தை ஜனநாயக மாதர் சங்கத்தை சேர்ந்த பெண்கள் முற்றுகையிட முயற்சி செய்தனர். அப்போது அங்கு இருந்த போலீசார் ஜனநாயக மாதர் சங்கத்தை சேர்ந்தவர்களை கைது செய்தனர்.

ரொனால்டோவிற்கு ரூ. 50 லட்சம் அபராதம்

ரசிகரின் மொபைல் போனை தட்டிவிட்டதற்காகக் ரொனால்டோவுக்கு ரூ. 50 லட்சம் அபராதமும் 2 கிளப் ஆட்டத்தில் விளையாடத் தடையும் விதிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் கடந்த ஏப்ரலில் நடைபெற்றது. தற்போது அவர் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து வெளியேறிய நிலையில் அடுத்து அவர் இணையும் கிளப்பில் இந்த தடை தொடரும் என கூறப்பட்டுள்ளது. அபராதம் விதிப்பால் கிளப் போட்டியில் பங்கேற்க முடியாத சூழல் ரொனால்டோவிற்கு ஏற்பட்டுள்ளது.

சாலையில் நடந்து சென்ற இளைஞரை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த 4 இளம்பெண்கள்

பஞ்சாபில் ஜலந்தரில் உள்ள ஒரு பேக்டரியில் தொழிலாளியாக பணியாற்றும் நபர் ஞாயிற்றுக்கிழமை இரவு பணியை முடித்துக் கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை நோக்கி ஒரு கார் வேகமாக வந்துள்ளது. அந்த காரில் 20 வயது மதிக்கத்தக்க 4 இளம்பெண்கள் இருந்துள்ளனர். இதனையடுத்து காரில் இருந்த இளம்பெண்கள் ஒரு துண்டு சீட்டை நீட்டி அந்த நபரிடம் கொடுத்து முகவரி விவரம் குறித்து கேட்டுள்ளனர். அவர்கள் கூறியதை நம்பிய அந்த நபர் வாங்கி படித்துள்ளார். அப்போது அந்த பெண்கள் ஸ்பிரே ஒன்றை அவர் மீது அடித்துள்ளனர். இதனையடுத்து அவர் மயங்கி விழுந்துள்ளார். பின்னர் அவரை தங்களது காரில் ஏற்றிக்கொண்டு சென்று மறைவான இடத்தில் காரை நிறுத்தி அவரது கை, கால்களை கட்டி போட்டு அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

அவர்கள் குடித்துவிட்டு தன்னையும் குடிக்க வற்புறுத்துவதாகவும் பாதிக்கப்பட்ட நபர் கூறியுள்ளார்.  இதையடுத்து அந்த இளம்பெண்களைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...