No menu items!

கமல் கால்ஷீட் ஃபுல்!

கமல் கால்ஷீட் ஃபுல்!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமல், மீண்டும் தெலுங்கு சினிமாவில் நடிக்கிறார். பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ‘கல்கி 2898 ஏடி’ படத்தில் ஹீரோ பிரபாஸ். வில்லனாக கமல் களமிறங்குகிறார். இப்படத்தில் அமிதாப் பச்சன், திபீகா படுகோன், திஷா பதானி என பெரும் நட்சத்திரப்பட்டாளமே இருக்கிறது என்பது கவர்ச்சிகரமான கூடுதல் தகவல்.

’விக்ரம்’ பட வெற்றிக்குப் பிறகு சினிமாவில் பரபரப்பாகி இருக்கும் கமல், மணிரத்னத்துடன் இணையவிருக்கும் படத்தின் ஷூட்டிங்கிற்கு முன்பாகவே கல்கி 2898ஏடி படத்தில் தன்னுடைய சம்பந்தப்பட்ட காட்சிகளை நடித்து முடிக்க திட்டமிட்டு இருக்கிறார்.

இதனால் கமல் நடிக்கும் காட்சிகளின் ஷூட்டிங் மீண்டும் தொடங்குகிறது. அநேகமாக அக்டோபர் முதல் வாரத்தில் கமல் நடிக்கும் காட்சிகள் எடுக்கும் வகையில் வேலைகள் நடந்துவருகின்றன.

வில்லனாக நடிப்பதால், பல முக்கிய காட்சிகள் இருக்கின்றனவாம். இதனால் தன்னுடைய கால்ஷீட்டை செப்டெம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய மூன்று மாதங்களில் பிரித்துப் பிரித்து கொடுத்திருக்கிறார்.

கல்கி அவதாரத்தை அப்படியே லேட்டஸ்ட் ட்ரெண்டுக்கு ஏற்றப்படி மாற்றி, கல்கி 2898ஏடி படத்தை ஹாலிவுட் வகையறா படமாக எடுப்பதாக கூறுகிறார்கள்.


அஜித்துடன் கைக்கோர்க்கும் 2 ஹீரோயின்கள்!

அஜித் நடிக்க மகிழ் திருமேனி இயக்கவிருக்கும் ‘விடாமுயற்சி’ பட ஷூட்டிங் செப்டெம்பர் இரண்டாவது வாரத்தில் தொடங்கும் என படத்தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் தரப்பில் பேச்சு அடிப்பட்டது.

ஆனால் ஷூட்டிங் சொன்ன தேதியைத் தாண்டி அக்டோபர் 2-ம் தேதிதான் தொடங்கும் என தெரிகிறது.

லோகேஷன் பிரச்சினை, நட்சத்திரத் தேர்வு தாமதம் என இந்த இரண்டு பிரச்சினைகளால் ஷூட்டிங் தொடங்குவது தாமதமாகி வருகிறதாம்.

முதல் ஷெட்யூல் அபுதாபியில் நடைபெறுகிறதாம். இதனால் நட்சத்திரங்களை கொஞ்சம் முன்பாகவே அபுதாபியில் இறக்கிவிட இருக்கிறார்கள்.

சமீபகாலமாகவே அஜித் படங்களில் அவருக்கு மனைவி, காதலி என்பது போன்ற ஜோடி யாருமில்லை. ஏதாவது ஒரு முன்னணி ஹீரோயின் அவருடன் இணைந்து நடிப்பது போலவே திரைக்கதை இருந்திருக்கின்றன.

இதே பாணியில்தான் இப்போது விடாமுயற்சியும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித்திற்கு ஜோடி த்ரிஷா என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல் உலவினாலும், மற்றுமொரு ஹீரோயினும் இருக்கிறார் என்றார்கள்.

இந்த கதாபாத்திரத்திற்கு பாலிவுட் நடிகை ஹியூமா குரேஷியைதான் கமிட் செய்திருப்பதாக கிசுகிசுக்கிறார்கள். இவர் ‘வலிமை’ பட த்தில் நடித்தவர் என்பதால், இவரை உடனே கமிட் செய்யும் வகையில் பேச்சுவார்த்தை முடிந்திருப்பதாகவும் கூறுகிறார்கள்.

மறுபக்கம் சஞ்சய் தத் வில்லனாக நடிக்கிறார் என்ற செய்தி கசிந்தாலும், .பிக் பாஸ்’ புகழ் ஆரவ் மற்றொரு வில்லனாக நடிக்கப் போகிறாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...