No menu items!

புதிய I Phone Series 15-ல்  இந்தியாவின் NavIC

புதிய I Phone Series 15-ல்  இந்தியாவின் NavIC

ஆப்பிள் நிறுவனம் இந்த வருடத்திற்கான ஐ ஃபோன் 15  சீரிஸ்- யை அறிமுகப்படுத்தியுள்ளது . சிறப்பு அம்சங்களாக சி டைப் சார்ஜர், ஆக்‌ஷன் பட்டன் வசதி, புதியதாக  A17 ப்ரோ சிப் , பிறகு வழக்கம் போல அதிநவீன கேமரா வசதி, உபயோகபடுத்துவதற்கு ஏதுவாக எடை குறைவு என்று நிறைய சொல்லப்பட்டாலும் பெரிதாக எதிர்பார்த்த அளவுக்கு  இல்லை என்பதுதான் ஐ ஃபோன் ரசிகர்களின் பெரும்பாலானோரின் கருத்து.

இதுவெல்லாம் சோஷியல் மீடியாவுல பார்த்தது தான். நீ என்ன புதுசாக சொல்லப் போகிறாய் என்று நீங்கள் நினைப்பது சரிதான். ஐஃபோன் சீரிஸ்-யின் விலை அதனுடைய சிறப்பு அம்சங்கள் பற்றி நிறைய பேசிவிட்டார்கள் அதைப்பற்றிப் பேசப்போவதில்லை. இஸ்ரோ வின் NavIC பற்றிதான் பேசப்போகிறேன். NavIC -ஆ கேள்விப்பட்ட வார்த்தை மாதிரி இல்லையே…. ஆமாம் நாம் கேள்விப்படாத வார்த்தைதான்.

GPS (Global Positioning System ) என்றால் என்ன என்று அனைவருக்கும் தெரியும். வழி மாறி போய்விடுவோம் என்ற பயம் இல்லை. நம்மிடம் இருக்கும் ஸ்மார்ட்ஃபோனில் நொடிப் பொழுதில் எங்கு இருக்கிறோம் நாம் எங்கு செல்ல வேண்டும் என்று தெளிவாக நமக்கு வழிகாட்டிவிடும். GPS-ன் பயன்பாடு இன்றைய சுழலில் இன்றியமையாதது.

GPSஐ அமெரிக்காதான் முதன் முதலில் உருவாக்கியது. இது அமெரிக்காவின் பாதுகாப்பு துறையால் முதன் முதலில் உருவாக்கப்பட்டு, அமெரிக்காவின் வானூர்திப் படையின் 50 -வது விண்வெளிப் பிரிவால் நிர்வகிக்கப்படுகிறது. இது உருவாக்கியதற்கான நோக்கம் ராணுவப்பணிக்காக என்றாலும் காலப்போக்கில் உலக மக்கள் பயன்பாட்டிற்கு மாறியது. ஆரம்ப காலக்கட்டங்களில் அமெரிக்கா உருவாக்கிய இடங்காட்டும் கருவியைதான் அனைத்து நாடுகளும் பயன்படுத்தியது.  காலப் போக்கில் அமெரிக்கவை அடுத்து சில நாடுகளும் இடங்காட்டும் கருவிகளை உருவாக்கின. ரஷ்யாவிற்கு GLONASS உள்ளது, சீனாவில் BeiDou உள்ளது, ஐரோப்பிய ஒன்றியத்தில் கலிலியோ உள்ளது,

அதேப்  போல்தான் இந்தியாவிற்கு navIC (Navigation with Indian Constellation )

முழுக்க முழுக்க இந்தியாவில் உருவாக்கப்பட்ட  navIC என்ற இடங்காட்டும் கருவியைதான், ஆப்பிள் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள ஐ ஃபோன் 15 சீரிஸ்-ல் பயன்படுத்தியுள்ளது.

NavIC முதன்முதலில் 2006 இல் செயல்படுத்தப்பட்டது. ஆனால் பயன்பாட்டிற்கு வந்தது என்னமோ  2018 -ல் தான். இந்திய அரசு, முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்படுகிற அனைத்து  ஸ்மார்ட்ஃபோன் நிறுவனங்களும் navIC கருவியை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியது.

ஆனால் பல நிறுவனங்களுக்கு அது சவாலாக இருந்தது. ஜனவரி 2023 – லில் இந்தியாவில் தயாரிக்கப்படும் அனைத்து ஸ்மார்ட்ஃபோன்  நிறுவனங்களும் NavIC என்ற இடங்காட்டும் கருவியைக் கொண்டு தயாரிக்கப்பட வேண்டும் என்று அறிவுறித்தியது. ஒரு சில நிறுவனங்கள் navIC-யை செயல்படும் வகையில் கொண்டுவந்தாலும் ஆப்பிள், சாம்சங் போன்று முன்னனி  நிறுவனங்கள் கொண்டு வருவது கடினம் என்றன. பல தொழிநுட்ப கோளாறுகள் ஏற்படும், உடனே இதனை நடைமுறைக்கு கொண்டுவருவது  சாத்தியமில்லை என்றன. இப்படியிருக்க, முதன்முறையாக ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு அறிமுகப்படுத்திய ஐஃபோன் சீரிஸ்-ல்  ஐஃபோன் ப்ரோ ,ப்ரோ மேக்ஸ்-ல் மட்டும் இந்தியாவில் உருவாக்கப்பட்ட  navIC -யை கொண்டு வந்ததுள்ளது.

இந்த ஆண்டு கொண்டுவந்த ஐஃபோன் சீரிஸ்-ல் பெரிதாக புதுமைகள் ஏதுமில்லை என்றாலும்   முதன்முறையாக ஆப்பிள் நிறுவனம் navIC-யை கொண்டுவந்துள்ளது வரவேற்க கூடியதாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...