விஜய் பிறந்த நாளன்று ‘லியோ’ படத்தின் முதல் பார்வை விளம்பர படத்தை வெளியிட்டு இருக்கிறது அப்படக்குழு. ‘லியோ’ படத்தின் ஷூட்டிங் ஏறக்குறைய முடிவடையும் தருவாயில் இருக்கிறது. இதனால்தான் படத்தை விளம்பரப்படுத்தும் வேலைகளை லோகேஷ் கனகராஜ் தொடங்கியிருக்கிறார்.
’லியோ’ படம் தொடர்பாக அவ்வப்போது வெளியாகும் தகவல்கள், புகைப்படங்கள், கிசுகிசுக்கள் எல்லாம் ‘லியோ’ படத்தின் வியாபாரத்திற்கு நன்றாகவே எடுப்பட்டு வருகின்றன.
தமிழில் திரையரங்கு உரிமை, ஒடிடி உரிமை, டிஜிட்டல் உரிமைகள் என எல்லா தளங்களிலும் லியோ வியாபாரம் சூடுப்பிடித்திருக்கிறது. இந்நிலையில் தெலுங்குப் பக்கம் பட வியாபாரம் மூலம் கல்லா கட்டுவதில் தங்களது கவனத்தை திருப்பி இருக்கிறார்கள்.
கடைசியாக தெலுங்கில் டப் ஆகி வெளியான விஜயின் ‘வாரிசு’ படம், சுமார் 15 கோடி வசூல் செய்திருப்பதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. மேலும் விஜயின் நடனத்திற்கும், ஆக்ஷனுக்கு தெலுங்கில் ரசிகர்கள் அதிகமிருக்கிறார்கள். இதனால் விஜய் படங்கள் மீதான எதிர்பார்பு அங்கும் அதிகரித்து வருகிறது.
இதை கணக்கு பண்ணிய லியோ தயாரிப்பு தரப்பு, இப்படத்தின் தெலுங்கு திரையரங்கு உரிமையை பெரும் விலைக்கு கேட்கிறாராம். அதாவது வாரிசு செய்த வசூலை விட இரண்டு மடங்கு அதிகம் வைத்து கேட்கிறாராம். ‘லியோ’ தெலுங்கு டப்பிங் உரிமையை வாங்க இரு பெரும் நிறுவனங்கள் போட்டியில் இருந்தாலும், 27 கோடி ரூபாய் கொடுத்தால் லியோ தெலுங்கு திரையரங்கு உரிமை உங்களுக்குதான் என தயாரிப்பாளர் லலித் குமார் கறாராக இருக்கிறாராம்.