No menu items!

கமல் சம்பளம் தினம் ஒரு கோடி!

கமல் சம்பளம் தினம் ஒரு கோடி!

சின்ன வயதிலேயே சினிமாவுக்குள் வந்த கமலுக்கு, சினிமாவில் எல்லோருக்கும் வரும் ப்ரேக் கூட ரொம்ப தாமதமாகதான் வந்தது. அதுவும் அவருடைய பட டைட்டிலை போலவே ‘விஸ்வரூபம்’ எடுத்த ப்ரேக்.

ஆனால் அடுத்த நான்காண்டுகள் சினிமாவிலிருந்து ஒதுங்கியே இருந்த கமலுக்கு ரீஎண்ட்ரி கொடுத்தது ‘விக்ரம்’.

இதற்கு இளவட்டங்களிடையே கிடைத்த வரவேற்பு கமலை பல விஷயங்களில் பல நட்சத்திரங்களை ஒவர் டேக் செய்ய வைத்திருக்கிறது.

இதனால் செகண்ட் இன்னிங்ஸை கொண்டாடிக் கொண்டிருக்கும் கமல், அடுத்தடுத்து படங்களை தனது ராஜ் கமல் இண்டர்நேஷனல் மூலம் தயாரிக்க இருக்கிறார். அதேபோல் அடுத்தடுத்து நடிக்கவும் தயாராகி இருக்கிறார்.

இப்போது இவர் தெலுங்குப் படமான ‘ப்ராஜெக்ட் – கே’ படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்தப் படத்தில் பிரபாஸ்தான் ஹீரோ. அவரோடு தீபிகா படுகோன், திஷா பதானி என இரண்டு அழகிய ஹீரோயின்கள் ஏற்கனவே ஷூட்டிங்கில் பிஸியாக இருக்க, கமலும் இணைய இருக்கிறார்.
அப்படியானால் கமலின் சம்பளம் எவ்வளவு என்று இப்பொழுதே விவாதிக்க ஆரம்பித்துவிட்டார்கள் நெட்டிசன்கள்.

கமலின் சம்பளம் நூறு கோடி அல்லது 150 கோடியோ அல்ல என்கிறார்கள். ஆனால் இந்தப்படத்தில் கமலின் கதாபாத்திரத்திற்கு 25 நாட்கள் முதல் 30 நாட்கள் வரை ஷூட்டிங் இருக்கும் என்பதால், 30 நாள் கால்ஷீட்தான் கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.

இதனால் இந்தப்படத்தில் நடிப்பதற்காக கமலுக்கு 30 முதல் 40 கோடிக்குள் வரை சம்பளம் பேசப்பட்டு இருக்கிறது என்கிறார்கள்.

அதாவது நாளொன்றுக்கு கமலின் சம்பளம் மட்டும் ஒரு கோடி வரை இருக்கும் என்று கண் சிமிட்டுகிறார்கள்.


ப்ரியா மணியும் ஆன்லைன் கிசுகிசுக்களும்!

தமிழில் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்ட ப்ரியா மணி, மளமளவென தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களில் நடித்தார். தேசிய விருது உள்பட பல விருதுகளை படபடவென பல படங்களில் அள்ளினார். அதேவேகத்தில் சட்டென்று காணாமல் போனார்.

காரணம், அவரது கல்யாணம்.

மார்க்கெட் கொஞ்சம் டல்லடித்ததுமே, சுதாரித்து கொண்ட ப்ரியா மணி கொஞ்சம் கூட யோசிக்காமல் கல்யாணம் செய்து கொண்டார். அவரது மாப்பிள்ளையின் பெயர் முஸ்தபா ராஜ்.

கலப்புத்திருமணம்தான். ஆனாலும் இருவரது வீடுகளிலும் அரைமனதோடு ஏற்றுக்கொண்டார்கள்.

ஆனால் பிரச்சினை அத்துடன் முடியவில்லை. ப்ரியா மணி குடும்பமே இவர்களது திருமணத்தை ஏற்றுக்கொண்டாலும், சுத்தி இருக்கும் நெட்டிசன்கள், ப்ரியா மணியின் ப்ரியர்கள் ஏற்றுக்கொண்டதாக தெரியவில்லை.

இதுகுறித்து ப்ரியா மணி இப்போது மனம் திறந்திருக்கிறார். ‘’எனக்கும், முஸ்தபாவுக்கும் கல்யாணம் ஆனதும், மனசளவுல நான் ரொம்பவே கஷ்டப்பட்டுட்டேன். சோஷியல் மீடியாவுல ஆளாளுக்கு அட்வைஸ் பண்ணுவாங்க. நீ ஏன் அவரை கல்யாணம் பண்ணின. நீ உடனே அந்தாளை டைவர்ஸ் பண்ணு’ இப்படி ஆன்லைன் அட்வைஸ் பண்றது ஒரு பக்கம்னா, இன்னும் சில பேர் காயப்படுத்துற மாதிரி திட்டினாங்க.
ஆனால் இந்த மாதிரியான எந்த வலியையும் நான் ஏத்துக்கல. உதாசீனப்படுத்திட்டேன். அதனாலதான் என் குடும்ப வாழ்க்கை சந்தோஷமா போகுது. நாங்களும் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கோம்.

நானும் என் கணவரும் வேலை நிமித்தமாக தள்ளி தள்ளி இருக்கிறதால, எங்களுக்குள்ள ஒரு இடைவெளி இருக்கிறதா பேசிக்கிறாங்க. அப்படி எதுவும் இல்ல. மீடியாவுல வர்ற எல்லா தகவல்களும் தப்புதான்’ என்று மனம் திறந்து பேசியிருக்கிறார் ப்ரியா மணி.

ப்ரியா மணிக்கு இப்போதுதான் 39 வயதாகிறது. அதுக்குள்ளே இவ்வளவு போராட்டமா என்றும் சிலர் புது கமெண்ட்களோடு கிளம்பி இருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...