No menu items!

ஹன்சிகாவை Datingக்கு அழைத்தாரா ஹீரோ?

ஹன்சிகாவை Datingக்கு அழைத்தாரா ஹீரோ?

சிம்புவுடன் காதல் கிசுகிசுவில் சிக்கிய ஹன்சிகா மோத்வானி, ஒரு வழியாக அந்த பஞ்சாயத்தில் இருந்து சிக்கி திணறிப்போய் வெளியே வந்தார்.

சில மாதங்களுக்கு முன்புதான், சோஹைல் கதூரியாவைக் காதலித்து திருமணம் செய்து ஒரு வழியாக செட்டிலாகி இருக்கிறார்.

திருமணத்திற்கு முன்பே ஹன்சிகாவை சினீயர் ஹீரோயின்கள் பட்டியலை நம்மூர் படைப்பாளிகள் சேர்த்து அழகுப் பார்க்க ஆரம்பித்துவிட்டனர். இதனால் ஹன்சிகாவுக்கு வயது குறைவாக இருந்தாலும், சினிமா வாய்ப்புகள் ரொம்பவே குறைந்து போனது.

இதனால் ஊடகங்களின் கவனத்தை தன் பக்கம் திரும்ப நினைத்து அவர் சொன்ன விஷயம்தான் இப்போது அவரை சுழற்றி சுழற்றி அடிக்கிறது.

’நான் நடிக்க வந்த புதுசுல, ஒரு தெலுங்கு ஹீரோ ரொம்பவே தொந்தரவு கொடுத்துட்டாரு. ஒரு தடவை இல்ல, ரெண்டு தடவை இல்ல. பல தடவை என்னை டேட்டிங்குக்கு கூப்பிட்டாரு. ஆனா நான் சும்மா விடல. அவருக்கு நல்ல பாடம் கத்துக்கொடுத்துட்டேன்’’ இதுதான் ஹன்சிகா சொன்னதாக வந்த ஸ்டேட்மெண்ட்.

அவ்வளவுதான் நெட்டிசன்கள் மத்தியில் இது வைரலானது. ஹன்சிகா குறிப்பிட்ட அந்த ஹீரோ யார்\? அவராக இருக்குமோ, இவராக இருக்குமோ என்று ஹன்சிகாவுடன் நடித்த எல்லா ஹீரோக்களின் பெயரையும் இழுத்துவிட்டு, வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்த பஞ்சாயத்தினால் இடையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. தனது லேப்-டாப்பை திறந்த ஹன்சிகா, ‘தயசு செய்து இந்த வதந்திகளை நம்பாதீங்க. அடிப்படை ஆதாரமற்ற இந்த மாதிரி யூகங்கள் என்னை ரொம்பவே எரிச்சலடைய வைக்கின்றன. இந்த மாதிரியான செய்தியை போடுறதுக்கு முன்னாடி தயவு செய்து உண்மையா பொய்யான்னு சரிப்பார்த்துட்டு வெளியிடுங்க’ என்று கொந்தளித்து ஒரு அப்டேட்டை போட்டுவிட்டிருக்கிறார்.

ஆனாலும் அந்த நடிகர் யாராக இருக்குமென, இன்னும் இண்டர்நெட்டில் தீவிர டிஸ்கஷன் போய் கொண்டிருக்கிறது.


ரஜினியுடன் இணையும் தெலுங்கு, கன்னட சீனியர்கள்!

ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜூவிடம் கதைக் கேட்டிருக்கிறார். அநேகமாக அந்தப்படம்தான் ரஜினியின் கடைசிப்படமாக இருக்கலாம் என்று மிஷ்கின் ஒரு பேட்டியில் கொழுத்திப் போட்டிருக்கிறார்.

ஆனால் ரஜினி, ’இன்னும் 8 மாசம் இருக்கு. அதுக்குள்ளே எதுக்கு அவசரப்படணும்’ என்று’ஐபிஎல். போட்டியில் தோனி தனது ஓய்வு குறித்து சொன்னது போல, அடுத்தப்படத்திலும் கமிட்டாகி விட்டதாக தெரிகிறது.

ஆனால் இந்த முறை ரஜினி அழகான இளம் நடிகையுடன் டூயட் ஆடப்போவதில்லை. ஆனால் தனது வயதுடைய சீனியர் ஹீரோக்களுடன் சேர்ந்து நடிக்க இருக்கிறாராம்.

தெலுங்கு சினிமாவின் அதிரடி அதிரிபுதிரி பாலகிருஷ்ணா மற்றும் கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமார் ஆகிய இருவருடன் இணைந்து ரஜினி நடிப்பதற்கான திட்டம் உருவாகி இருக்கிறது என்கிறார்கள்.

இந்தப்படம் ஆரம்பத்தில் வெறும் பேச்சாகவே இருந்த நிலையில், சிவராஜ் குமார் பெரும் பட்ஜெட்டில் இந்தப் படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம்.

இந்தப்படத்தில் 3 சூப்பர் ஸ்டார்கள் இருப்பதால் 2 பாகங்களாக எடுக்கும் திட்டமும் இருக்கிறதாம். முதல் பாகத்தில் ரஜினியும் பாலகிருஷ்ணாவும் அதிரடி காட்ட, இரண்டாம் பாகத்தில் பால கிருஷ்ணாவும், சிவராஜ்குமாரும் களத்தில் மிரட்ட இருப்பது போல் திரைக்கதை வேலைகள் ஆரம்பமாகி இருப்பதாக கூறுகிறார்கள்.

இப்போது ரஜினி, பாலகிருஷ்ணா, சிவராஜ் குமார் என மூவரும் ஓகே சொல்லியிருந்தாலும், அடுத்தடுத்த மாதங்களில் இந்த ப்ராஜெக்ட் உயிர் பெறுமா அல்லது மருதநாயகம் போல் நிறைவேறாத கனவாக இருக்குமா என்பது இன்னும் சில மாதங்களில் தெரிந்துவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...