No menu items!

Waste இண்டீஸிடம் தோல்வி! – என்ன ஆச்சு இந்தியாவுக்கு?

Waste இண்டீஸிடம் தோல்வி! – என்ன ஆச்சு இந்தியாவுக்கு?

வெஸ்ட் இண்டீஸ் அணி வேஸ்ட் இண்டீஸ் அணியாக நாசமாகிப் போனது எப்படி என்று சில நாட்களுக்கு முன்புதான் ஒரு கட்டுரையை இந்த தளத்தில் வெளியிட்டிருந்தோம். அந்த கட்டுரை வெளியான சில நாட்களிலேயே, வேஸ்ட் இண்டீஸ் என்று முத்திரை குத்தப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோல்வியைத் தழுவியிருக்கிறது இந்தியா. அதிலும் அவர்கள் போராடிச் சேர்த்த 149 ரன்களைக்கூட எட்ட முடியாமல் தோல்வியைத் தழுவியிருக்கிறார்கள்.

ஒரு சிலர் இந்த தோல்வியை சாதாரணமாக கடந்து செல்லலாம். ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா, பந்த் போன்ற முக்கிய வீர்ர்கள் இல்லாத சாதாரண அணிதானே இது. அப்படி இருக்கும்போது இந்த தோல்வியை நினைத்து ஏன் கவலைப்பட வேண்டும் என்று நினைக்கலாம். ஆனால் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் முக்கிய வீர்ர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படும் ஹர்த்திக் பாண்டியா, சுப்மான் கில், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ் போன்ற வீர்ர்களைக் கொண்ட இந்திய அணியின் தோல்வியை அத்தனை சாதாரணமாக கிரகித்துக்கொள்ள முடியவில்லை.

மிக முக்கியமாக அடுத்த டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணியின் கேப்டனாக ஹர்த்திக் பாண்டியாதான் இருப்பார் என்று சொல்லப்படுகிறது. கடந்த 2 ஐபிஎல் தொடர்களில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்திய ஹர்த்திக் பாண்டியா சிறந்த கேப்டனாக இருப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருக்கிறது. ஆனால் நேற்று ஐபிஎல்லில் பாண்டியா காட்டிய புத்திசாலித்தனங்கள் காணாமல் போயிருந்தன. பேட்டிங் சுத்தமாக வராத சாஹல், குல்தீப், முகேஷ் குமார், ஹர்ஷ்தீப் சிங் ஆகியோரை ஒரே நேரத்தில் அணியில் சேர்த்தது முதல் சிறந்த பினிஷராக கருதப்படும் சூர்யகுமார் யாதவை நிறுத்தி நிதானமாக ஆடவேண்டிய 3-வது பேட்ஸ்மேனாக ஆடவைத்தது வரை ஏகப்பட்ட குளறுபடிகளை செய்திருந்தார் ஹர்த்திக் பாண்டியா.

வெஸ்ட் இண்டீஸ் அணி 149 ரன்களை மட்டுமே எடுக்க, 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்குதான் இந்தியாவுக்கு. ஆனால் சுப்மான் கில், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஹர்த்திக் பாண்டியா, சஞ்சு சாம்சன் என அனைவரும் இந்த ஸ்கோரை எளிதில் எட்டவேண்டுமே என்ற ஆர்வக்கோளாறில் ஆடி அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். ஆரம்பத்தில் நிதானமாக ஆடி விக்கெட்களை காத்து, கடைசி ஓவர்களில் அதிரடி காட்டி ஜெயிக்கலாம் என்று தல தோனி கற்றுக்கொடுத்த பாடம் ஒருவருக்கும் நினைவில்லாமல் போனது.

இந்த நேரத்தில் சஞ்சு சாம்சனைப் பற்றி குறிப்பிட வேண்டி இருக்கிறது. ஐபிஎல்லில் சிறப்பாக ஆடும் சாம்சனை, இந்திய அணியில் சேர்க்காததற்காக பலரும் தேர்வுக் குழுவை குறை சொல்கிறார்கள். அவருக்கும் தேர்வுக்குழு எப்போதாவதுதான் அணியில் இடம் கொடுக்கிறது. அப்படி வாய்ப்பு கிடைக்கும்போது அவர் கப்பென்று பிடித்துக்கொள்ள வேண்டாமா?… ஆனால் அப்படிச் செய்வதில்லை. விட்டேத்தியாக ஆடி விக்கெட்டை பறிகொடுக்கிறார். நேற்றும் அதுதான் நடந்தது. கடைசிவரை நின்று ஆடி அணியை வெற்றிபெறச் செய்திருக்க வேண்டிய சஞ்சு சாம்சன், 12 ரன்களை மட்டுமே எடுத்து அவசரமாக ரன் அவுட் ஆனார். இப்படி கிடைக்கும் வாய்ப்பை வீணடித்தால் பந்த் திரும்ப வரும்போது அவரைத்தான் முதல் ஆளாக வெளியில் உட்கார வைப்பார்கள். அவ்வளவு ஏன் அடுத்த ஆட்டத்திலேயே அவரை உட்காரவைத்து ஜெய்ஸ்வாலை பாண்டியா சேர்க்க வாய்ப்பு உள்ளது.

நேற்றைய ஆட்டத்தில் ஓரளவுக்கு நம்பிக்கை கொடுத்தவர் அறிமுக வீர்ரான திலக் வர்மாதான். 22 பந்துகளில் 3 சிக்சர்களுடன் அவர் 39 ரன்களைக் குவித்தார். ஆனால் சிக்சர் அடிப்பதுதான் தன் வேலை என்று நினைத்ததால் அதற்கான முயற்சியில் ஆட்டம் இழந்தார்.

நேற்றைய ஆட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் ஹர்த்திக் பாண்டியா, “இது இளம் வீர்ர்களைக் கொண்ட அணி. ஒருசில தவறுகளை இந்த அணி செய்வது இயல்புதான். ஆனால் தவறுகளில் இருந்து பாடம் கற்போம். அடுத்தடுத்த போட்டிகளில் வெல்வோம்” என்று கூறியிருக்கிறார்.
சொன்னபடி செய்தால் ஹர்திக் பாண்டியாவுக்கும், இளம் இந்திய அணிக்கும் நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...