No menu items!

பொங்கல் பரிசுடன் முழு கரும்பு வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு

பொங்கல் பரிசுடன் முழு கரும்பு வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு

தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை ஜனவரி 9ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதற்காக ஜனவரி 3ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை டோக்கன் வழங்கப்படுகிறது. இதனிடையே, பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க வேண்டும் என்று பெரும்பாலான கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. சென்னை உயர்நீதிமன்றத்திலும் இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீதான விசாரணையை வரும் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1000 ரொக்கம், சர்க்கரை, பச்சரிசியுடன் முழு கரும்பு வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள தனது தாயாரை சந்தித்து உடல்நலம் விசாரித்தார் பிரதமர் மோடி

இந்திய பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள யு.என். மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குஜராத் வருகை தந்த பிரதமர் மோடி, மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள தனது தாயாரை சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பியவர்களில் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சீனாவில் ‘ஜீரோ கோவிட் பாலிசி’ என்ற பெயரில் விதிக்கப்பட்ட கொரோனா கட்டுப்பாடுகளை ஜின்பிங் அரசு விலக்கிக்கொண்டுள்ள நிலையில், ஒமைக்ரான் வைரசின் புதிய வகை பரவல் வேகம் எடுத்ததால் சீனா நாடு திணறி வருகிறது. பல நகரங்களிலும் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்புகின்றன; பலிகளும் அதிகரிப்பதாக தெரிய வந்துள்ளது. இது உலக நாடுகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பல நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளன. இந்தியாவிலும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளதுடன், வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

இதில் வெளிநாடுகளில் இருந்து வந்த 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. 39 பேரும் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு பிஎப்-7 ரக கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறிய மரபணு சோதனை முறை நடத்தப்பட்டுள்ளது. இதனிடையே, அடுத்த 40 நாட்கள் இந்தியாவிற்கு ஒரு முக்கியமான கால கட்டம் என சுகாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். முந்தைய பாதிப்புகளை மேற்கொள்காட்டி, இந்த நாட்களில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கணித்துள்ளனர்.

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு: நடிகர் சித்தார்த்துக்கு மதுரை எம்.பி. ஆதரவு

நடிகர் சித்தார் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் நேற்று வெளியிட்ட ஒரு பதிவில், “மதுரை விமான நிலையத்தில் சிஆர்பிஎஃப் (அதிகாரிகளால்) 20 நிமிடம் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டோம். அவர்கள் வயதான எனது பெற்றோரின் பைகளில் இருந்த நாணயங்களை வரைக்கும் அகற்றச் செய்தார்கள். மேலும் ஆங்கிலத்தில் பேசச் சொன்ன பிறகும் எங்களிடம் பலமுறை இந்தியில் பேசினர். இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்த போது இந்தியாவில் இது இப்படித்தான் நடக்கும் எனக் கூறினர். வேலையற்றவர்கள் தங்களது அதிகாரத்தைக் காட்டுகின்றனர்,” எனத் தெரிவித்திருந்தார்.

நடிகர் சித்தார்த்தின் இந்த பதிவு சமூக ஊடக பயனர்கள் மத்தியில் கவனம் பெற்றதோடு மொழி பயன்பாடு தொடர்பான விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் இவ்விவகாரம் தொடர்பாக ட்விட்டர் பதிவில், “மதுரை விமானநிலையத்தில் CISF வீரர்கள் ஹிந்தியில் பேசி கடுமையாக நடந்து கொண்டதாக திரைக்கலைஞர் சித்தார்த் எழுப்பியுள்ள குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரனை மேற்கொள்ள வேண்டுமென மதுரை விமானநிலைய அதிகாரிகளிடம் கோரியுள்ளேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...