No menu items!

மோடியினால் ரகுல் ப்ரீத் சிங் கல்யாணத்தில் மாற்றம்.

மோடியினால் ரகுல் ப்ரீத் சிங் கல்யாணத்தில் மாற்றம்.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘என்.ஜி.கே’ மற்றும் ஹெச். வினோத் இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’, சிவகார்த்திகேயனுடன் ‘அயலான்’ என முக்கியமான படங்களில் நடித்த ரகுல் ப்ரீத்சிங், இப்போது சினிமா வாழ்க்கையில் இருந்து திருமண வாழ்க்கையில் செட்டிலாக இருக்கிறார்.

ஜாக்கி பாக்னானி, பாலிவுட்டில் தயாரிப்பாளர். ஒரு நடிகரும் கூட. இவரை தான் ரகுல் ப்ரீதி சிங் நீண்டகாலமாக காதலித்து வருகிறார். இந்த இருவரும் லிவ்விங் டுகெதர் முறையில் சேர்ந்து வாழ்ந்தாலும், கடந்த வருடம்தான் தங்களது உறவைப் பற்றி வெளியுலகிற்கு அறிவித்தனர்.

இந்த காதல் ஜோடி தங்களது திருமணம் எப்படி நடக்கவேண்டும் என்பதை பல மாதங்களாக திட்டமிட்டு வருகிறார்கள். பக்காவாக திட்டம் போட்டவர்கள் இந்த வருடம் பிப்ரவரி 21-ம் தேதி திருமணத்தை வைத்திருக்கிறார்கள்.

இவர்கள் திருமணத்தை மத்தியக்கிழக்கு நாடுகளில் ஒன்றில் வைத்து கொள்ள திட்டமிட்டு இருந்தார்கள். இதற்காக லொகேஷன், திருமண ஏற்பாடுகள், தங்கும் இடவசதி, பார்ட்டி என அனைத்தையும் முடிவு செய்துவிட்டார்கள்.

ஆனால் இறுதி நேர மாற்றமாக தங்களது திருமணத்தை கோவாவுக்கு மாற்றிவிட்டார்கள். பல மாதங்கள் திட்டமிட்டு இருந்த கல்யாணத்தை கோவாவுக்கு மாற்றியது பலருக்கு சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது.

ஆளாளுக்கு ஏதோ காரணத்தை கூற, இப்போது வேறு வழியில்லாமல் இந்த காதல் ஜோடி, ‘நம்ம நாட்டு பிரதமர் மோடிக்கு மரியாதை அளிக்கும் விதமாதான் எங்க கல்யாணத்தை கோவாவுக்கு மாத்திட்டோம். இந்தியாவுல இருக்கிற பணக்கார குடும்பங்கள், பெரும் செல்வாக்கு பெற்ற குடும்பங்கள் தங்களுடைய வீட்டு விசேஷங்களை வெளிநாடுகளில் வைப்பதற்கு பதிலாக இந்தியாவில் நடத்த முன்வரவேண்டும்’ என்று கூறியதற்கு மரியாதை செய்யும் விதமாக இந்தியாவில் திருமணத்தை நடத்த இருப்பதாக கூறியிருக்கிறார்கள்.


ஷங்கரை கலாய்த்த தெலுங்கு ரசிகர்கள்

ஷங்கர் தன்னுடைய முதல் தெலுங்குப் படத்தை இயக்கி வருகிறார் என்பது உங்களுக்கு தெரியும். ராம் சரண் நடிக்கும் இப்படத்திற்கு ‘கேம் சேஞ்சர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

’இந்தியன் 2’ ஷூட்டிங் பல பஞ்சாயத்துகளால் தடைப்பட்டு நின்றதாலும், அடுத்து என்ன படம் என்று தெரியாத சூழலிலும், தெலுங்குப்படம் இயக்கலாம் என டோலிவுட் பக்கம் சென்றார் ஷங்கர்.

அப்போது அவர் இயக்க ஒப்புக்கொண்ட படம்தான் ‘கேம் சேஞ்சர்’. பல வருடங்கள் ஷூட்டிங் நடந்தும் இன்னும் எப்போது ரிலீஸ் என்று தெரியாமல் ராம் சரண் தவித்துக் கொண்டிருக்கிறார்.

இழுத்துக்கொண்டே போன ஷூட்டிங் முடிவடைந்தாலும், ரீலீஸ் எப்போது என தெரியாத காரணத்தினால் ராம் சரணின் ரசிகர்கள் இப்போது ஷங்கரை கலாய்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

IRRESPONSIBLE DIRECTOR SHANKAR மற்றும் #WakeUpShankarLucha என்ற கேஷ்டேக்குகளை பிரபலமான சமூக ஊடக தளமான X.com-ல் பதிவிட்டு வருகிறார்கள்.

மற்ற நடிகர்களின் படங்களான ‘தேவரா’, கல்கி 2928 ஏடி’, ‘புஷ்பா 2’, ‘ஒஜி’ பற்றி பல தகவல்கள் வெளிவந்து ட்ரெட்ண்டிங் ஆக, ராம் சரணுக்கு ட்ரெண்ட்டிங் செய்ய ஒன்றுமில்லையே என்ற கோபம்தான் ராம் சரண் ரசிகர்களை ஷங்கரை கலாய்க்க வைத்திருப்பதாக கூறுகிறார்கள்.

ஷங்கரை இப்படி கலாய்ப்பதை தவிர்க்க வேண்டும். இது சரியல்ல என்று ராம் சரணும் இதுவரை வாயைத் திறக்கவில்லை. தயாரிப்பாளரான தில் ராஜூவும் இது குறித்து ஒன்றும் சொல்லவும் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...