No menu items!

58 நிமிட பட்ஜெட் உரை: நிர்மலா சீதாராமன் சொன்னது என்ன?

58 நிமிட பட்ஜெட் உரை: நிர்மலா சீதாராமன் சொன்னது என்ன?

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2024-25-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 6-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த அவர், 58 நிமிடங்களில் பட்ஜெட் உரையை முடித்தார். காலை 11 மணிக்கு தொடங்கிய பட்ஜெட் 12 மணிக்கு முன்னதாகவே நிறைவடைந்தது.

இந்த இடைக்கால பட்ஜெட்டில் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்புகள்..

2023-24ல் திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி அரசின் செலவு ரூ.44.90 லட்சம் கோடி. திருத்தப்பட்ட வரி வருவாய் மதிப்பீடு ரூ. 27.56 லட்சம் கோடி. நிதி பற்றாக்குறை – 5.8%.

2024-25 ஆம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறை ஜிடிபி-யில் 5.1% ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2025-26 ஆம் ஆண்டிற்குள் பற்றாக்குறையை ஜிடிபி-யில் 4.5% ஆகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வருமான வரி:

வருமான வரி விதிப்பு விகிதங்களில் எந்த மாற்றம் இல்லை. ஏழு லட்சம் வரையிலான தனிநபர் வருமானத்திற்கு வரி செலுத்த தேவையில்லை வருமான வரி செலுத்துவோருக்கு ஏற்கனவே இருந்த நடைமுறையே தொடரும்.

நேரடி மற்றும் மறைமுக வரி, இறக்குமதி வரி விதிப்பிலும் எந்த மாற்றங்களும் இல்லை.

ரூ.25,000 வரையிலான வரி தொடர்பான பழைய வழக்குகள் ரத்து செய்யப்படும். இதன்மூலம் 1 கோடி பேர் பயனடைவார்கள்.

விவசாயம்:

விவசாயத் துறையில் கூடுதல் முதலீடு செய்ய அரசு தயாராக உள்ளது.

11.8 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் அரசின் மானியம் நேரடியாக செலுத்தப்படுகிறது

பிரதான் மந்திரி காப்பீட்டின் மூலம் 4 கோடி விவசாயிகள் பலனடைந்துள்ளனர்.

இளைஞர் நலன்:

திறன்மிகு இந்தியா திட்டத்தின் மூலம் 1.4 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

தொழில் தொடங்க வட்டியில்லாக் கடன் வழங்குவதற்காக ரூ.1 லட்சம் கோடியில் புதிய நிதியம் அமைக்கப்படும்.

பெண்கள் நலன்:

கடந்த 10 ஆண்டுகளில் பெண்கள் உயர்கல்வி பெறுவது 28% அதிகரித்துள்ளது. பெண் தொழில் முனைவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. முத்ரா திட்டத்தின் மூலம் 30 கோடி பெண் தொழில் முனைவோருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.

கர்ப்பப் பை புற்றுநோயை தடுக்க தடுப்பூசி திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் 3 கோடி பெண்கள் லட்சாதிபதிகளாக்கப்படுவர்.

சூரிய ஒளி மின்சாரம்:

ஒரு கோடி வீடுகளில் சூரிய ஒளி மின்சார திட்டம் அமல்படுத்தப்படும். வீட்டின் மொட்டை மாடியில் சோலார் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.

வீட்டு வசதி:

நடுத்தர வர்க்கத்தினருக்கான வீட்டு வசதி திட்டம் அறிமுகப்படுத்தும். அடுத்த 5 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகள் கட்டித்தரப்படும்.

ரயில்வே:

40,000 சாதாரண ரயில் பெட்டிகள் வந்தே பாரத் ரயில் பெட்டிகளாக தரம் உயர்த்தப்படும். 3 சரக்கு பொருளாதார ரயில்வே வழித்தடம் விரைவில் அமைக்கப்படும்.

அந்நிய முதலீடு

இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு 596 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

10 வருடங்களில் இந்தியாவுக்கு 500 பில்லியன் டாலருக்கும் அதிகமான அந்நிய முதலீடுகள் வந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...