No menu items!

சந்திரயான் 3 – தெரிந்துக் கொள்ள வேண்டியவை!

சந்திரயான் 3 – தெரிந்துக் கொள்ள வேண்டியவை!

சந்திரயான் 3 நாளை (ஆகஸ்ட் 23) சரியாக 6.04 மணியளவில் விக்ரம் லென்டர் நிலவின் தென் துருவத்தில் சாஃப்ட் லாண்டிங் செய்யும் என இஸ்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

உலக நாடுகள் அனைத்தும் நிலவில் தண்ணீர் இல்லை என்று செவ்வாய் பக்கம் திரும்ப, இந்தியாதான் முதன் முதலில் நிலவில் தண்ணீர் இருப்பதை சந்திரயான் 1 விண்கலத்தை அனுப்பி கண்டறிந்தது.

சந்திரயான் 1 விண்கலம் மூலம் சாஃப்ட் லாண்டிங் செய்து மேலும் பல ஆராய்ச்சிகளை மேற்கொள்ள திட்டமிட்டது, இந்தியா. ஆனால், சந்திரயான் 1 கடைசி நிமிடங்களில் சில தொழில்நுட்ப கோளாறுகளால் விக்ரம் லென்டர் சாஃப்ட் லாண்டிங் செய்யாமல் நிலவில் போய் மோதி, அந்த முயற்சி தோல்வி அடைந்தது.

இந்த முறை எந்த வகையிலும் தோல்வி பெறாத வகையில் பல தொழில்நுட்ப முன்னேற்பாடுகளை செய்திருக்கிறது இஸ்ரோ நிறுவனம்.

நாளை மாலை விக்ரம் லென்டர் தரையிறங்கப் போகும் அந்த 15 நிமிடங்கள் தான் முக்கியமான தருணம் என்கின்றனர் ஆய்வாளர்கள். சமீபத்தில் ரஷ்யா நிலவுக்கு அனுப்பிய லூனா 25 தோல்வியடைந்தது. இந்த நிலையில் இந்தியாவின் சந்திரயான் 3 – வின் வெற்றியை உலக நாடுகள் அனைத்தும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் .

நிலவில் சாஃப்ட் லாண்டிங் செய்த நாடுகள் என்ற பெருமையை இதுவரை மூன்று (ரஷ்யா, அமெரிக்கா, சீனா ) நாடுகள் மட்டுமே பெற்றிருக்கிறது. அந்த வரிசையில் இந்தியாவும் இடம் பெற வேண்டும் என இஸ்ரோ பல தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சந்திரயான் 3 விண்கலத்தை நிலவிற்கு அனுப்பியுள்ளது.

LVM3-M4 ராக்கெட் 615 கோடி செலவில் செய்யப்பட்டது. இந்தியாவிலேயே செய்யப்பட்ட கருவிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது.

பூமியில் இருத்து 3,84,400 கிமீ தொலைவில் இருக்கும் நிலவுக்கு செல்ல சுமார் 40 நாட்கள் ஆனது. கடந்த ஜூலை 14, சரியாக 2.35 மணியளவில் நிலவுக்கு அனுப்பப்பட்ட LVM3-M4 ராக்கெட்டில் உள்ள விக்ரம் லென்டர் நிலவில் தரையிறங்க இவ்வளவு நாட்கள் எடுக்கக் காரணம், முதலில் பூமியின் நீள்வட்ட பாதையைச் சுற்றிவந்து பிறகு நிலவின் நீள்வட்ட பாதையையும் ஈர்ப்பு விசை மூலம் சுற்றி வந்ததால்தான்.

இந்த நாற்பது நாள் பயணம் வெற்றிகரமாக இருந்தாலும் நாளை தரையிறங்க இருக்கும் 15 நிமிடங்கள் தான் திக் திக் நிமிடங்கள்.

காரணம் ,விக்ரம் லென்டர் நிலவில் போய் மோதக்கூடாது. சாஃப்ட் லாண்டிங் செய்ய வேண்டும் , பிறகு விக்ரம் லென்டரிலிருந்து பிரியான் ரோவர் வெளியே வந்து தன்னை தானே புகைப்படம் எடுக்க வேண்டும். பிறகு, விக்ரம் லென்டரையும் புகைப்படம் எடுக்க வேண்டும்.

நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லென்டர் தரையிறங்கப் போவதே சற்று சவாலான ஒன்றுதான். நிலவின் தென் துருவத்தில், சூரிய ஒளி படாது. 14 பூமி நாட்கள் மட்டுமே அதன் ஆயுட் காலம், அதற்குள் போதிய செய்திகளையும் புகைப்படங்களையும் ரோவர் படம் பிடிக்க வேண்டும்.

வெற்றிகரமாக விக்ரம் லென்டர் சாஃப்ட் லாண்டிங் செய்தால் உலகின் நான்காவது நாடாக சாஃப்ட் லாண்டிங் செய்த பெருமை இந்தியாவைச் சாரும். விக்ரம் லென்டர் சாஃப்ட் லாண்டிங் செய்யும் அந்த 15 நிமிடங்கள் எவ்வளவு சுவாரசியமானதாகவும் சவாலாகவும் இருக்கப் போகிறது என்பதை நாளை காண்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...