No menu items!

2023-ல் கோலிவுட் டோலிவுட்டை முந்திய பாலிவுட்!

2023-ல் கோலிவுட் டோலிவுட்டை முந்திய பாலிவுட்!

2022-ம் ஆண்டு, இந்திய சினிமாவில் தெலுங்கு சினிமாவின் ஆண்டாக அமைந்திருந்தது. தெலுங்கில் இருந்து வெளிவந்த பான் – இந்திய படங்கள் வசூலில் அள்ளிக்குவித்தன. இதனால் இந்திய சினிமாவை தெலுங்கு சினிமா ஆக்ரமித்து இருந்தது.

ஆனால் 2023-ல், கொரோனா பாதிப்பினால் தளர்ந்துப் போய் இருந்த பாலிவுட் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

இதற்கு முக்கிய காரணம் ஷாரூக்கான். ‘பதான்’, ‘ஜவான்’ என அடுத்தடுத்து இரு படங்கள் ஷாரூக்கானின் மார்க்கெட்டை உச்சத்திற்கு கொண்டு போய்விட்டன. 2023-ல் இறுதியில் வெளியான ‘டங்கி’ படமும் இன்னும் வசூல் செய்து கொண்டிருக்கிறது.

ஒரு ஹிட் படத்திற்காக போராடிக்கொண்டிருந்த ரன்வீர் சிங்கிற்கு, ‘ராக்கி அவுர் ரானி கி ப்ரேம் கஹானி’ சரியான படமாக அமைந்தது. அடுத்து ரன்பீர் கபூரின் ‘அனிமல்’ பாக்ஸ் ஆபிஸிலும், விமர்சன ரீதியாகவும் மிரட்டலான படமாகி இருக்கிறது.

சன்னி தியோலுக்கு ‘கடார் 2’ படம் ரீ-எண்ட்ரிக்கான ஹிட் படமாக அமைந்திருக்கிறது. அதேபோல் ‘த கேரளா ஸ்டோரி’, ‘ஸரா கட்கே ஸரா பச்கே’, ‘ஒ மை காட் 2’, ‘12த் ஃபெயில்’, ‘து ஜூதி மெய்ன் மக்கார்’, ‘சத்யா ப்ரேம் கி கதா’, ‘ஃபக்ரீ 3’, ‘ட்ரீம் கேர்ள் 2’, ‘சாம் பகதூர்’ போன்ற படங்கள் பாலிவுட்டின் எழுச்சிக்கு காரணமாக அமைந்திருக்கின்றன.

இப்படி அடுத்தடுத்து ஹிட் படங்களாக அமைந்ததால், தவழ்ந்து கொண்டிருந்த பாலிவுட் கொஞ்சம் தலை நிமிர்த்தியிருக்கிறது.

ஆனால் இந்த 2024-ல் ஷாரூக்கான், சல்மான் கான், ரன்வீர் சிங், ரன்பீர் கபூர் போன்ற முன்னணி நடிகர்களுக்கு படங்கள் இல்லை. இவர்கள் நடிக்கும் படங்கள் தயாரிப்பு நிலையில்தான் இருக்கின்றன. இதனால் இந்தாண்டு பாலிவுட் மீண்டும் தத்தளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், ஹிர்த்திக் ரோஷனின் ‘ஃபைட்டர்’, ‘அக்‌ஷய் குமாரின் ‘வெல்கம் 3’, ‘படே மியான் சோட்டே மியான்’, பல நட்சத்திரங்கள் ஒன்றிணையும் ‘சிங்கம் 3’ என இந்தப்படங்களைதான் பாலிவுட் வசூல் விஷயத்தில் அதிகம் நம்பியிருக்கிறது.


தனுஷ் மார்க்கெட் நிலவரம்!

தனுஷை வைத்து சாணிக்காயிதம் பட இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கியிருக்கும் படம் ‘கேப்டன் மில்லர்’. இந்தப் படம் வருகிற பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.

இதனால் இப்பொழுது இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமைக்கான வியாபாரம் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. தனுஷ் படமென்பதால், ரெட் ஜெயண்ட் நிறுவனத்தில் இருக்கும் செண்பக மூர்த்தி இப்படத்தின் செங்கல்பட்டு, கோயம்புத்தூர் உரிமையை வாங்கி இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

மேலும் சென்னை, வட ஆற்காடு, தென் ஆற்காடு, மதுரை போன்ற ஏரியாக்களுக்கு அதிக விலை கேட்கிறார்களாம். இதனால் இப்பகுதிகளின் உரிமை இன்னும் பேச்சுவார்த்தையில்தான் இருக்கிறது.
ஆனால் அதே நேரம் கோயம்புத்தூர் 3.50 கோடிக்கும், சேலம் 1.70, திருநெல்வேலி 1.10 கோடிக்கும், செங்கல்பட்டு 6.50 கோடிக்கும் திருச்சி 2.40 கோடிக்கும் விலைப் போயிருப்பதாக வியாபார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னை, மதுரை, தெற்கு மற்று வட ஆற்காடு ஆகிய பகுதிகளுக்கு வழக்கத்திற்கு மாறாக 2.50 கோடிக்கு திரையரங்கு உரிமையைக் கேட்கிறார்களாம். இதனால் ஒட்டுமொத்த தமிழ்நாடு திரையரங்கு உரிமை சுமார் 23 கோடிகளுக்கு விலைப் போயிருக்கிறது என்கிறார்கள்

இது தனுஷூக்கு இருக்கும் மார்கெட் மதிப்பைவிட கொஞ்சம் குறைவுதான் என்கிறார்கள்.

தமிழ்நாட்டு திரையரங்கு உரிமையை அடுத்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஹிந்தி ஆகியவற்றின் டப்பிங் உரிமைக்கான வியாபாரம் தொடங்கியிருக்கிறது.

சிவராஜ் குமார் இந்தப் பட த்தில் நடித்திருப்பதால், கர்நாடக உரிமை கொஞ்சம் அதிக விலைக்குப் போகும் என்று கேப்டன் மில்லர் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...