No menu items!

பாஜகவா? காங்கிரசா? – இதுதான் இன்றைய தேர்தல் நிலவரம்!

பாஜகவா? காங்கிரசா? – இதுதான் இன்றைய தேர்தல் நிலவரம்!

5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 3-ம் தேதி நடக்கவுள்ள நிலையில், இத்தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதன்படி காங்கிரஸ் கட்சி சட்டீஸ்கர், தெலங்கானா மாநிலங்களிலும், பாஜக ராஜஸ்தான் மாநிலத்திலும் ஆட்சியைப் பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பதில் கருத்து கணிப்புகள் முரண்பட்டு நிற்கின்றன. மிசோரமில் தொங்கு சட்டசபை அமையும் என்று தெரியவந்துள்ளது.

இந்த கருத்து கணிப்பின் விரிவான முடிவுகள்…

மத்தியப் பிரதேசம்: மொத்த தொகுதிகள் – 230

மத்தியப் பிரதேச மாநிலத்தில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பதில் கருத்துக் கணிப்பு முடிவுகள் ரெண்டுபட்டு கிடக்கின்றன. ஏபிசி நியூஸ், டைனிக் பாஸ்கர், ஜன் கி பாத் ஆகியவை நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இருக்கின்றன. அதேநேரத்தில் ரிப்பப்ளிக் டிவி, இந்தியா டுடே, டுடே சாணக்யா அகியவை நடத்தியுள்ள கருத்துக் கனிப்புகள் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று அடித்துச் சொல்கிறன. அதனால் காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் இந்த கருத்துக் கணிப்புகளைப் பார்த்து காலரை தூக்கிவிட்டுக்கொள்ளும் நிலை இல்லை.

கருத்து கணிப்பு நிறுவனம் பாஜக காங்கிரஸ் மற்றவை
ஏபிபி நியூஸ் – சி வோட்டர் 88-112 113-137 2-8
டைனிக் பாஸ்கர் 95-115105-120 0-15
இந்தியா டுடே – ஆக்சிஸ் 140-16268-90 0-30-3
இந்தியா டிவி- சிஎன்எக்ஸ் 140-159 70-89 0-2
ஜன் கி பாத்100-123102-1255
டுடே சாணக்யா 139-16362-861-9
ரிப்பப்ளிக் டிவி 118-13097-107 0-2
டைம்ஸ் நவ் 105-117 109-125 0-6

ராஜஸ்தான்: மொத்த தொகுதிகள் – 200

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சியாளர்களை மாற்றுவது ராஜஸ்தான் மக்களின் வழக்கம் அதே வழக்கம் இந்த தேர்தலிலும் தொடரும் என்று பெருவாரியான கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன. இதன்படி காங்கிரஸ் கட்சி இம்மாநிலத்தில் பாஜகவிடம் ஆட்சியை இழக்கலாம் என்று கருதப்படுகிறது. அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சி அத்தனை எளிதில் தோற்காது. பாஜகவுடன் கடுமையாக போராடும் என்றும் இந்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்தியா டுடே, இந்தியா டிவி உள்ளிட்ட நிறுவனங்களின் கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் கட்சி முந்துவதாகக்கூட காட்டப்பட்டுள்ளது.

கருத்து கணிப்பு நிறுவனம் பாஜக காங்கிரஸ்மற்றவை
ஏபிபி நியூஸ் – சி வோட்டர் 94-114 71-91 9-19
டைனிக் பாஸ்கர் 98-105 85-95 10-15
இந்தியா டுடே – ஆக்சிஸ் 80-100 86-106 8-16
இந்தியா டிவி- சிஎன்எக்ஸ் 80-90 84-104 14-18
ஜன் கி பாத் 100-122 62-85 14-15
டுடே சாணக்யா 77-101 89-113 2-16
ரிப்பப்ளிக் டிவி 115-130 65-75 12-19
டைம்ஸ் நவ் 108-128 56-72 13-21

சட்டீஸ்கர்: மொத்த தொகுதிகள் – 90

காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் முகத்தில் புன்னகையை மலரச்செய்யும் விதமாக சட்டீஸ்கர் மாநிலத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் உள்ளன. சட்டீஸ்கரில் அக்கட்சி ஆட்சியை தக்கவைக்கும் என்று கருத்துக் கணிப்புகள் உறுதியாக சொல்வதே இதற்கு காரணம். வெகு சில கருத்துக் கணிப்புகள் மட்டும் சட்டீஸ்கரில் தொங்கு சட்டசபை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கிறது

கருத்து கணிப்பு நிறுவனம் பாஜக காங்கிரஸ் மற்றவை
ஏபிபி நியூஸ் – சி வோட்டர் 36-48 41-530-4
டைனிக் பாஸ்கர்35-45 46-55 0-10
இந்தியா டுடே – ஆக்சிஸ் 36-46 40-501-5
இந்தியா டிவி- சிஎன்எக்ஸ் 30-40 46-56 3-5
ஜன் கி பாத் 34-45 42-533
டுடே சாணக்யா 25-41 49-65 0-3
ரிப்பப்ளிக் டிவி 34-42 44-520-2
டைம்ஸ் நவ் 32-40 40-50 0-3

தெலங்கானா: மொத்த தொகுதிகள் – 119

தெலங்கானா மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியின் பக்கமே காற்று வீசுவதாக பல கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் மாநிலத்தில் தொங்கு சட்டசபை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் சில கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

கருத்து கணிப்பு நிறுவனம் பிஆர்எஸ் காங்கிரஸ் பாஜக
ஏபிபி நியூஸ் – சி வோட்டர் 38-54 49-65 5-13
இந்தியா டிவி- சிஎன்எக்ஸ் 31-47 63-79 2-4
ஜன் கி பாத் 40-55 63-79 4-7
டுடே சாணக்யா 24-42 62-80 2-12
ரிப்பப்ளிக் டிவி 46-56 58-68 5-7
டைம்ஸ் நவ் 37-45 60-70 6-8

மிசோரம் – மொத்த தொகுதிகள் – 40

மிசோரம் மாநிலத்தில் தொங்கு சட்டசபை அமையவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

கருத்து கணிப்பு நிறுவனம் MNFMNF காங்கிரஸ்
ஏபிபி நியூஸ் – சி வோட்டர் 15-21 12-18 2-8
இந்தியா டிவி- சிஎன்எக்ஸ் 14-18 12-16 8-10
ஜன் கி பாத் 10-14 15-25 5-9
ரிப்பப்ளிக் டிவி 17-22 7-12 1-2
டைம்ஸ் நவ் 14-18 10-14 9-13





LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...