இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிக்கு, 20216-ல் வெளியான ‘பிச்சைக்காரன்’ பட த்திற்கு பிறகு பெரிய ஹிட் படங்கள் எதுவும் அமையவில்லை.
தமிழில் பெரிய ஹிட் படமாக அமைந்த ’பிச்சைக்காரன்’, தெலுங்கில் டப் செய்யப்பட்டு ‘பிச்சகாடு’ என்ற பெயரில் வெளியானது. ஒரு நேரடி தெலுங்குப் படத்திற்கு கிடைக்கும் மாபெரும் வெற்றியை, டப் படமான ’பிச்சகாடு’ பெற்றது. வசூலிலும் கூட தூள் கிளப்பியது.
இதனால்தான் தனது ரீஎண்ட்ரிக்கு ‘பிச்சைக்காரன் 2’ படத்தை விஜய் ஆண்டனி பெரிதும் நம்பினார். அவரது நம்பிக்கைக்கு ஏற்றவகையில், ’பிச்சைக்காரன் 2’ தெலுங்கு பாக்ஸ் ஆபிஸில் தமிழை விட நன்றாகவே போயிருக்கிறது.
இதனால் உற்சாகத்தில் இருக்கும் விஜய் ஆண்டனி, ’பிச்சைக்காரன் -3’ படத்தை எடுக்கும் திட்டத்தில் இருக்கிறாராம். அதற்கான வேலைகளில் இப்பொழுதே விஜய் ஆண்டனி இறங்கிவிட்டார். இப்படத்தையும் விஜய் ஆண்டனியே இயக்கி நடிக்கவிருக்கிறாராம்.
பிச்சைக்காரன், ஒரு அம்மாவுக்கும் அவரது மகனுக்கும் இடையேயான உறவைக் காட்டியது. பிச்சைக்காரன் – 2, சகோதரன் மற்றும் சகோதரிக்கும் இடையிலான பாசப்பிணைப்பை வெளிப்படுத்தியது. ‘பிச்சைக்காரன் -3’, சகோதரர்களுக்கிடையேயான உணர்வுப்பூர்வமான உறவை மையமாக கொண்ட கதையாக இருக்குமாம்.
கிண்டலுக்கு உள்ளான தனுஷ்!
சில காலமாக மீடியாவில் அதிகம் அடிப்படாமல் இருந்த தனுஷ் மீண்டும் பரபரப்பிற்கு உள்ளாகி இருக்கிறார்.
கொஞ்ச நாட்களுக்கு முன்பு, அவர் நடித்துவரும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ஷூட்டிங்கை குற்றாலம் அருகே வனப்பகுதியில் நடத்தினார்கள். வனத்துறையினரின் அனுமதிப் பெறாமல் ஷூட்டிங்கை நடத்தியதால், சர்ச்சை கிளம்பியது.
இந்த பிரச்சினை ஓரளவிற்கு அடங்கி இருக்கும் போது, இப்போது தனுஷை இணையத்தில் கிண்டலடித்து வருவது பரபரப்பாகி இருக்கிறது.
‘கேப்டன் மில்லர்’ படத்திற்காக தலைமுடியையும், தாடியையும் நீளமாக வளர்த்து வருகிறார் தனுஷ். இந்த தோற்றத்தில் தனுஷ், பக்காவாக மாடர்ன் உடையணிந்து ஏர்போர்ட்டுக்கு சென்றிருக்கிறார். அங்கே அவரை புகைப்படமெடுத்து அதை இணையத்தில் ஏற்றிவிட்டிருக்கிறார்கள்.
இதுதான் இப்போது பேசுப்பொருளாகி இருக்கிறது.