No menu items!

வில்லனாகும் கமல்?

வில்லனாகும் கமல்?

கமல் – மணிரத்னம் இணையவிருக்கும் படத்திற்கான வேலைகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கின்றன. இப்படம் தொடங்குவதற்கு இன்னும் சில மாதங்கள் பிடிக்கலாம் என்கிறார்கள்.

இதனால் இதற்கிடையில் கமலின் கால்ஷீட்டை வாங்கிவிட வேண்டுமென இயக்குநர் நாக் அஸ்வின் தரப்பு முயற்சிப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

’பாகுபலி’ வரிசை படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமாகி இருக்கும் பிரபாஸை வைத்து ‘ப்ராஜெக்ட் கே’ என்னும் படத்தை நாக் அஸ்வின் இயக்கி வருகிறார். இப்படம் ஒரு சயின்ஸ் ஃபிக்‌ஷன் படமாக இருக்குமாம். இப்படம் 2024- ல் வெளியாகும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

’ப்ராஜெக்ட் கே’ மிகப்பெரிய பட்ஜெட்டில் அதாவது 500 கோடி பட்ஜெட்டில் எடுக்க திட்டமிடப்பட்டிருக்கிறதாம்.

இதில் பிரபாஸூக்கு ஜோடியாக பாலிவுட் பேரரழகி திபீகா படுகோன் நடிக்கிறார். கதாநாயகி விஷயத்தில் நாக் அஸ்வினுக்கு திருப்திதான் என்றாலும், பிரபாஸூக்கு வில்லனாக ஒரு பெரிய ஹீரோ நடித்தால் நன்றாக இருக்குமென நினைக்கிறாராம்.

சமீபத்தில், இதற்காக நாக் அஸ்வின் கமல் ஹாசனை அணுகியதாக ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. கமலிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். கமலுக்கு மிகப்பெரிய சம்பளம் கொடுக்கவும் ‘ப்ராஜெக்ட் கே’ தயாரிப்பு நிறுவனம் தயாராக இருக்கிறதாம். 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் போதும், வில்லன் சம்பந்தபட்ட காட்சிகளை ஒரே ஷெட்யூலில் முடித்துவிடுகிறோம் என நாக் அஸ்வின் தரப்பிலிருந்து கமலுக்கு சொல்லப்பட்டிருக்கிறது.

’ப்ராஜெக்ட் கே’ படத்தில் பாலிவுட்டின் ஆல் டைம் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

மிகப்பெரிய பட்ஜெட் என்பதால் முதலீடு செய்த பணத்தை வசூலிக்க மிகப்பெரும் நட்சத்திரங்களை நடிக்கும் யுக்தியை ’ப்ராஜெக்ட் கே’ தயாரிப்பாளர் அஸ்வின் தத் கையிலெடுத்து இருக்கிறார் என்கிறார்கள். ’இந்தியன் 2’ படம் வெளியான பிறகே இப்படம் வெளியாக இருப்பதால், அப்படம் மூலம் கமலுக்கு கிடைக்கும் வரவேற்பை பயன்படுத்தி கொள்ளலாம் என்பதுதான் அஸ்வினி தத்தின் திட்டமாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...