No menu items!

இளையராஜாவை மிஸ் பண்றேன் – தங்கர்பச்சான் பேட்டி | 3

இளையராஜாவை மிஸ் பண்றேன் – தங்கர்பச்சான் பேட்டி | 3

தமிழின் சிறந்த இயக்குநர்களில் ஒருவரும் ஒளிப்பதிவாளர், எழுத்தாளர் எனப் பன்முகம் கொண்டவருமான தங்கர்பச்சான், ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டி இது.

முந்தைய பகுதியை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தின் கதையை 2003இலேயே எழுதிவிட்டதாக சொன்னீங்க. 2006இல் திரைக்கதை எழுதிட்டீங்க. ஆனாலும் படமாக ஏன் இவ்வளவு காலமானது?

2003இல் ஒரு சிறுகதையாத்தான் இத எழுதினேன், சினிமாவுக்குன்னு எழுதலை. அத படிச்சிட்டு ஒருத்தர், இந்த ரெண்டு பாத்திரங்களும் முக்கியமானதாச்சே; இத நீங்க படமாக்கலாமேன்னு சொன்னார். ஆனாலும், அதுக்கான காலம் இது இல்ல; நிச்சயம் ஒரு காலம் வரும் அப்ப எடுப்போம்னு எடுத்து வச்சேன். அந்த காலம் இப்ப வந்துவிட்டது.

அதிதி பாலன் இந்த படத்துக்குள் எப்படி வந்தார். அவரை இயக்கிய அனுபவத்தில் அவர் நடிப்பு பற்றி உங்கள் கருத்து என்ன?

அவர் நடிச்ச ‘அருவி’ படம் நான் பார்த்தேன். வியந்து போய்ட்டேன். அந்த வயசுல அந்த பாத்திரத்த எடுத்து வேற யாரும் எடுத்து செய்வாங்களான்னு தெரியலை. அப்புறம் அத மறந்துட்டேன். இந்த படம் தொடங்கும்போது இதுக்குன்னு நடிகையை இந்தியா முழுதும் போய் தேடினேன். சிலரை தேர்வு செய்தேன். ஆனால், அவங்க கொடுத்த தேதி சரியா வரல. ஆனால், அது நல்லதுக்குத்தான். அவங்க எல்லாம் நடிச்சிருந்தா இந்த அளவு திருப்தியா வந்திருக்காது. அதிதி இதுல கதைய தாண்டி நிற்கிற ஒரு பாத்திரம். படப்பிடிப்பு தளத்துல எல்லோரும் அழுதுட்டாங்க. ஒரு துளி கூட பிசிறு இல்லாம அவ்வளவு நேர்த்தியா செஞ்சிருக்கார். அவர் நடிப்புல அடிப்படையான திருத்தங்கள் எதுவும் நான் சொல்லலை.

அதிதி, வர்ற எல்லா படங்கள்லயும் ஒப்புக்கிறதில்ல, ரொம்ப தேர்ந்தெடுத்துதான் நடிக்கிறாங்க. சிறந்த பெண்ணாவும் இருக்காங்க, சிறந்த நடிகையாவும் இருக்காங்க. அவங்களுக்கு பெரிய எதிர்காலம் இருக்கு.

படப்பிடிப்பு தளத்தில அதிதி நடிக்கிற காட்சியில எல்லோரும் அழுதுட்டாங்கன்னு சொன்னீங்க. ஜிவி பிரகாஷும் இந்த படத்தப் பார்த்துட்டு அழுதுட்டேன்னு சொல்லியிருக்கார்.

அவர் படம் பார்த்தார். இரவு நாங்க ரெண்டு பேரும் தனியா உட்கார்ந்து பார்த்தோம். அழுதுட்டார். இசை இல்லாமலே இந்த படம் இவ்வளவு செய்யுதே; நான் அதுக்கு நியாயம் செய்ற மாதிரி சிறப்பா செய்து தாறேன்ன்னு சொல்லியிருக்கார். இன்னும் ரெண்டு ரீலுக்கு இசை அவர்ட்ட இருந்து வரணும். திரும்ப திரும்ப திருத்தம் பண்ணிகிட்டே இருக்கார். அந்தளவு ஈடுபாடாய்ட்டார்.

‘அழகி’, ‘சொல்ல மறந்த கதை’, ‘சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி’ போன்ற உங்கள் ஆரம்ப கால படங்களுக்கு இளையராஜா இசையமைத்தார். அதன்பிறகு வித்யாசாகர், பரதவாஜ் என்று மாறிவிட்டீர்கள். இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ‘கருமேகங்கள் கலைகின்றன’ பட விழாவில் வைரமுத்து பேசும்போது இளையராஜாவுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்றார். ஆனால், நீங்கள் தள்ளி வந்துவிட்டீர்கள். என்ன காரணம்?

நான் வேண்டாம்னு சொல்லலை; இளையராஜாவ வேண்டாம்னு சொல்ல யாருக்காவது தகுதி இருக்கா?

அவருக்கு மேல யார் இருக்க முடியும்? இந்த படத்துக்கூட அவர அனுகினேன். சந்திக்கலை. என்ன காரணம்னு தெரியல. ஆனா, நடக்கும்.

இளையராஜாவை ‘மிஸ்’ பண்றீங்களா?

நிச்சயமா. எல்லா சிறந்த இயக்குநர்களுக்கும் இளையராஜா தேவை. குறிப்பா கதைய மையமா வச்சி, இலக்கியத் தரமா செய்ய விரும்புறவங்களுக்கு இளையராஜா எல்லா காலத்துக்கும் தேவையான ஒருத்தர்.

நீங்களும் கவுதம் வாசுதேவ மேனனும் இணைந்து கொடுத்த ஒரு பேட்டியில, அவரது நடிப்பும் தோற்றமும் பற்றி நீங்க பேசுனது சமூக வலைதளங்கள்ல பேசுபொருளா ஆகியிருக்கு. அவர் தர்மசங்கடமா உணர்றார், ஆனாலும் அத பொருட்படுத்தாம நீங்க பேசிகிட்டே இருக்கீங்கன்னு விமர்சிக்கிறாங்க?

அப்படி ஒரு சிக்கலே இல்லையே, அவரும் அதுபத்தி எதுவும் சொல்லலையே. சமூக வலைதளங்கல்ல இருக்கிற பலருக்கு வேலையே இல்ல. அதனால எதயாவது கிளறிகிட்டே இருக்காங்க. மேலும், பிறர் மேல குற்றம் சுமத்தி, அதை வைத்து பணம் பண்றதும் இப்போ நிறைய பேர் தொழிலாவே ஆகிகிட்டு இருக்கு. ஒருத்தனா திட்டுறது, ஒருத்தன அதிகப்படியா புகழ்றது. இந்த ரெண்டுக்கும் நடுவுல யாரும் இருக்கமாட்டாங்க. அதனால, அவங்கள பொருட்படுத்த வேண்டியதில்லங்கிறது என்னுடைய கருத்து.

இதுபோல், உங்கள் பெயர் தொடர்பாவும் ஒரு சர்ச்சை ஓடிகிட்டு இருக்கு. அமிதாப் பச்சனைப் பார்த்து தங்கர்பச்சான்னு வச்சிகிட்டீங்கன்னு?

இதுக்கான பதில 40 ஆண்டுகளா நான் சொல்லிகிட்டு இருக்கேன். அமிதாப் பச்சன் வேற பச்சான் வேற. பச்சான்கிறது என்னுடைய அப்பா பெயரு. பச்சைவாழி அம்மன்கிறது எங்க குல தெய்வத்தோட பெயரு. என் அத்தை பெயரு பச்சையம்மாள். எங்க பகுதியில இந்த ரெண்டு பேரையும் பொதுவாக அதிகம் பார்க்கலாம். பச்சன்னா மரங்கள். இயற்கையதான கும்பிட்டோம். மாரின்னா மழை, மாரிமுத்துன்னு சொல்றோம். அதுமாதிரி பச்சைவாழி அம்மன். எனக்கு விட்டுல விட்ட பேரு தங்கராசு. தங்கர்னு அழைப்பாங்க. அப்பா பெயர சேர்த்து தங்கர்பச்சான்னு வச்சிகிட்டேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...