No menu items!

அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி- அண்ணாமலை

அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி- அண்ணாமலை

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னையில் இன்று நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இதுபற்றி கூறும்போது, “நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி என்பதில் எந்த குழப்பமும் இல்லை. எங்கள் கூட்டணியில் அதிமுக பெரிய கட்சி என்பதால் எடப்பாடி பழனிசாமி கூறிய கருத்தில் தவறில்லை. 2024 தேர்தலில் பல கட்சிகளுக்கு முடிவுரை எழுதப்படும், எந்த கட்சி பலமானது என அப்போது தெரியும்.

பால் விலை உயர்வை கண்டித்து வரும் 15-ம் தேதி பாஜக சார்பில் 1,200 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். தமிழகத்துக்கு வரும் பிரதமர் மோடிக்கு பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படும்” என்றார்.

மார்ச் மாதத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு

மார்ச் மாதத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் தொடங்கும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெறும் தேதியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார்.

இதன்படி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெறுகிறது. 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5-ம் தேதி வரை நடைபெறுகிறது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 10 லட்சம் மாணவ மாணவிகள் எழுத உள்ளனர்.

அர்ஜுனா விருதுக்கு பிரக்ஞானந்தா பெயர் பரிந்துரை

அர்ஜூனா விருதுக்கு தமிழக இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவின் பெயரை அகில இந்திய செஸ் கூட்டமைப்பு பரிந்துரை செய்துள்ளது.

விளையாட்டு துறையில் சாதனைபடைக்கும் வீரர்களுக்கு ஆண்டுதோறும் அர்ஜூனா விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான விருதுக்கு தகுதியான வீரர், வீராங்கனைகளின் பெயர்களை ஒவ்வொரு விளையாட்டு சங்கங்களும் மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்து வருகின்றன. அந்த வகையில், தமிழக இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா பெயரை அர்ஜூனா விருதுக்கு அகில இந்திய செஸ் கூட்டமைப்பு பரிந்துரை செய்துள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் வேலூர் கோர்ட்டில் அமைச்சர் பொன்முடி ஆஜர்

சொத்து குவிப்பு வழக்கில் வேலூர் கோர்ட்டில் அமைச்சர் பொன்முடி இன்று காலை ஆஜரானார்.

விழுப்புரத்தை சேர்ந்த தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கு வேலூர் மாவட்ட கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இன்று காலை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் பொன்முடி வேலூர் முதன்மை அமர்வு செசன்ஸ் கோர்ட்டில் ஆஜரானார். வழக்கின் விசாரணை வருகிற 14-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதனைதொடர்ந்து அமைச்சர் பொன்முடி புறப்பட்டு சென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...