No menu items!

இரக்கம் இல்லாத நயன்தாரா

இரக்கம் இல்லாத நயன்தாரா

‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற கொண்டாடப்படும் நயன்தாரா, இப்போது வாய்ப்புகள் இல்லாமல் சும்மா இருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா….

கடைசியாக அவர் நடிக்க ஒப்புக்கொண்ட படங்கள் இரண்டு. ஒன்று தனது காதல் கணவர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த, லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் அஜித்துடன் நடிக்கவிருந்தப் படம். அடுத்து, அஜித்துடன் ஜோடி சேர இருந்த படம் காலை வாரியதால், தங்களது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ரவுடி பிக்சர்ஸ்’ தயாரிப்பில் எடுக்க ஆசைப்பட்டு, இப்போது ’லியோ’ படத்தை தயாரித்த நிறுவனமான செவன் ஸ்டார் ஃப்லிம்ஸ் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே,. சூர்யா நடிப்பில் உருவாக இருக்கும் ‘எல்.ஐ.சி’.

’எல்.ஐ.சி.’ படத்திலிருந்து நயன்தாரா ஆரம்பத்திலேயே ஒதுங்கிக் கொண்டார். செவன் ஸ்டார் தயாரிப்பு நிறுவனம் படம் தயாரிக்க ஒப்புக்க்கொண்ட உடனேயே, தனது சம்பள விஷயத்தில் கறார் காட்டினார் நயன்தாரா.

5 கோடி முதல் 7 கோடி வரை சம்பளமாக வாங்கிக்கொண்டிருந்தவர், தடாலடியாக சம்பளத்தை இரு மடங்காக உயர்த்தி விட்டார். 10 கோடி கொடுத்தால் நடிக்கிறேன். இல்லை என்றால் ஆளை விடுங்கள் என ‘எல்.ஐ.சி’ படத்திலிருந்து கழன்று கொண்டார்.

இதற்குப் பிறகு நயன்தாராவின் முதல் ஹிந்திப் படமான ’’ஜவான் பாலிவுட்டில் வெளியானது. படம் அதிரிபுதிரி வெற்றி. இதன் வசூல் 1000 கோடிகளைத் தாண்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பிரம்மாணடமான வெற்றியினால், ஷாரூக்கான் சம்பளத்தை உயர்த்தினாரோ இல்லையோ, நயன்தாரா தனது சம்பளத்தை உயர்த்திவிட்டார்.

பான் – இந்தியப் படமாக எடுக்கப்பட்டு வரும் பக்தி படமொன்றில் நடிக்க நயன்தாராவை அணுகியிருக்கிறது அப்படக்குழு. அதில் பாலிவுட்டின் அக்‌ஷய் குமார், பிரபாஸ், மோகன்லால் என பெரிய தலைகள் நடிக்க இருக்கிறார்கள். இதில் சிவனாக வரும் பிரபாஸூக்கு ஜோடியாக நடிக்கதான் நயன்தாராவைக் கேட்டிருக்கிறார்கள்.

கைவசம் படம் எதுவும் இல்லையென்றாலும், நயன்தாரா சம்பளமாக 12 கோடி கேட்டிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழு சத்தமில்லாமல் திரும்பிவிட்டது.

நயன்தாராவை தங்களுக்கு ஜோடியாக நடிக்க வைக்க அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என யாரும் தயாராக இல்லை. இதற்கு அடுத்த நிலையில் இருக்கும் ஜெயம் ரவியுடன் நயன்தாரா நடித்தப்படமும் ஓடவில்லை. இதனால் நயன்தாரா என்ன செய்வதென தெரியாமல் இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.

இதனால் சம்பளம் அதிகம் கேட்டால், மார்க்கெட் சூடுப் பிடித்திருக்கிறது என்று ஒரு பேச்சு எழும், அடுத்து வாய்ப்புகள் அதிகமில்லாத சூழலில் முடிந்தவரை சம்பாதிப்பது அவசியம் என்பதால் இப்படி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க நயன்தாரா முயற்சிப்பதாக கூறுகிறார்கள்.


கைவிட்ட கமலுக்கு கரம்கொடுக்கும் சிம்பு

’விக்ரம்’ என்ற ஒரேயொரு படம் கொடுத்த தெம்பு, தமிழ் சினிமாவில் கமலை நிமிர்ந்து உட்கார வைத்திருக்கிறது.

அந்தப் படம் கொடுத்த லாபத்தில் கடன்களை அடைத்திருக்கும் கமல், தனது ராஜ் கமல் இண்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் மூலம் மீண்டும் படங்களைத் தயாரிக்க களமிறங்கியும் இருக்கிறார்.

படத்தயாரிப்பில் இறங்கிய ராஜ்கமல் இண்டர்நேஷனல் அடுத்தடுத்து பெரிய பட்ஜெட்களில் வரிசையாக படங்களைத் தயாரிக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் அவற்றில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம், அடுத்து மணிரத்னமுடன் சேரும் ’தக் லைஃப்’ படங்கள் மட்டுமே எடுக்கப்பட்டு வருகின்றன.

பெரும் எதிர்பார்புடன் ஆரம்பிக்கப்பட்ட சிம்பு இயக்குநர் தேசிங்கு இணையும் படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

ஏற்கனவே படங்கள் எதுவுமில்லாமல், கிடைக்கும் படங்களில் அவ்வப்போது நடித்து வரும் சிம்புவுக்கு இப்படம் பெரும் பெயரைப் பெற்று தரும் என்று வேறு கோலிவுட்டில் ஒரு பில்டப் கொடுக்கப்பட்டது.

சிம்புவும் இனியாவது தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் அந்தப் படம் என்னவானது என்றே தெரியவில்லை. இதற்கு காரணம், ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து படம் தயாரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிறுவனங்கள் கையை விரித்துவிட்டனவாம்.

ராஜ்கமல் இண்டர்நேஷனல் மட்டும் படம் தயாரித்தால், அது கையைச் சுடும் என்பதால் கமல், படம் தயாரிக்கும் எண்ணத்தை அப்படியே விட்டுவிட்டாராம். இதனால் நேரடியாக பாதிக்கப்பட்டது சிம்புவும் இயக்குநர் தேசிங்கும்..

இந்நிலையில்தான் இப்பொழுது ‘தக் லைஃப்’ படத்தில் இருந்து துல்கர் சல்மான் விலகினார். இவரை அடுத்து ஜெயம் ரவியும் விலகுவார் என்று பேச்சு பலமாக அடிப்படுகிறது.

இவர்கள் நடிக்க ஒப்பந்தமான கதாபாத்திரங்களில் யாரை நடிக்க வைப்பது என்ற குழப்பம் நிலவுகிறதாம்.

இந்நிலையில்தான் தன்னை கைவிட்ட கமலுக்கு ஆதரவுக்கரம் கொடுக்கும் வகையில் சிம்பு, ’தக் லைஃப்’ படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம். அநேகமாக ஏப்ரல் மாதம் திட்டமிடப்பட்டு இருக்கும் படப்பிடிப்பில் சிம்பு நடிப்பார் என்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...