No menu items!

சிம்பு வேண்டும் –  நடிகை நடத்திய போராட்டம்

சிம்பு வேண்டும் –  நடிகை நடத்திய போராட்டம்

நடிகர் சிம்புவை தனக்கு திருமணம் செய்துவைக்கக் கோரி சின்னத் திரை நடிகை ஸ்ரீநிதி சிம்பு வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டது வைரல் செய்தியாகியிருக்கிறது.

யார் இந்த நடிகை ஸ்ரீநிதி?

விஜய் டிவியில் ஒளிபரப்பான 7சி என்ற தொடர் மூலம் அறிமுகமான நடிகைதான் ஸ்ரீநிதி. இதைத்தொடர்ந்து  ‘யாரடி நீ மோகினி’, ‘புதுப்புது அர்த்தங்கள்’ ஆகிய தொடர்களில் நடித்த ஸ்ரீநிதிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 20 வயதான அவர், சிம்புவின் தீவிர ரசிகை.

சிம்புவின் ரசிகை என்பதால் தினந்தோறும் சிம்புவைப் பற்றி தனது சமூக வலைதள பக்கத்தில் ஆர்வமாய் பதிவிட்டுக் கொண்டே இருப்பார். 

சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில், ’ஒரு நாள் எல்லோருக்கும் கல்யாணம் நடந்திருக்கும். நானும் சிம்புவும்தான் மிச்சமிருப்போம்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு அவரது ரசிகர் ஒருவர், ‘ஏன், நீங்கள் ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாமே’ என்று பதிவிட்டார். அதற்கு ஸ்ரீநிதி, ‘நல்லாதான் இருக்கும். ஆனா இப்ப எனக்கு ஆள் இருக்கே‘ பதிலளித்திருந்தார். இது மட்டுமில்லாமல் அவர் தொடர்ந்து சிம்பு குறித்த பதிவுகளை வெளியிட்டுக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் அவர் நேற்றிரவு நடிகர் சிலம்பரசனின் வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபட்டார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.  அது குறித்து  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும்,   ஸ்டோரியாக பதிவிட்டுள்ளார். ‘சிம்பு என்னுடைய இன்ஸ்பிரேஷன்.

இவ்வளவு காலம் சிங்கிளாக, எனக்காக காத்திருந்திருக்கிறார். எனக்கு இன்று தான் புரிந்தது. இதை பார்ப்பவர்கள் உடனே எங்களை சேர்த்து வையுங்க. ஜல்லிக்கட்டுக்கு தான் போராடணுமா? காதலுக்கு போராடக் கூடாதா?’ என்று நடிகர் சிம்புவை டேக் செய்து கமெண்ட்களை பதிவிட்டுள்ளார்.

 அது மட்டுமில்லாமல், ’4% தான் சார்ஜ் இருக்கிறது. ப்ளீஸ் வாங்க. முதலில் சிம்பு வேண்டும், பிறகு தண்ணீர் வேண்டும். கோவமா இருக்கிற அவர மட்டும் புரிஞ்சக்கணுமா? நம்மளை புரிஞ்சுக்க மாட்டாரா? ப்ளீஸ் வாங்க’ என்று பதிவிட்டுள்ளார்.

சிறிது நேரம் சிம்பு வீட்டு முன் நின்றுவிட்டு வீடு திரும்பிய ஸ்ரீநிதி,     ‘ சாணக்யா சாணக்யா’ பாடலை  டிக் செய்து ‘ பொழச்சு போங்க சிம்பு’ என்று அவரை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.  

கோலிவுட்டில் மட்டுமின்றி சோஷியல் மீடியாவிலும் இது வேகமாகப் பற்றியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...