No menu items!

உய்ய்ய்ய்ய்ய்….: நயனின் நைன் பாயிண்ட்ஸ்

உய்ய்ய்ய்ய்ய்….: நயனின் நைன் பாயிண்ட்ஸ்

விக்னேஷ் சிவனை செல்லமாக ‘உய்’ என்றுதான் நயன் அழைக்கிறார். விக்னேஷ் சிவனும் நயனை அப்படித்தான் செல்லமாக அழைக்கிறார். இவர்கள் பாஷையில் ‘உய்’ என்றால் உயிர்.

தென்னிந்தியாவிலேயே இப்போதைக்கு அதிக சம்பளம் வாங்கும் நடிகை நயன்தாராதான். ஒரு கையில் எத்தனை விரல்கள் இருக்கிறதோ, அத்தனை கோடியை குறைந்தபட்ச சம்பளமாக கேட்கிறார் என்கிறார் ஒரு தயாரிப்பாளர்.

நயனுக்குப் பிடித்த விஷயங்களில் ஒன்று கார் அதற்கடுத்து பாடிகாட் முனீஸ்வரர். சென்னையில் புதிதாக எந்தக் கார் அறிமுகமானாலும் வாங்கி விடுவது அவரது வழக்கம். வாங்கும் கார்களுக்கு பாடிகாட் முனீஸ்வரர் கோயிலில்தான் பூஜை.

சூப்பர் ஸ்டார் பிம்பத்துக்குள் சிக்காமல் இருக்கிறார். தனது அலுவலக ஊழியர்களுடன் சகஜமாக பழகுவார். சாப்பிட்ட தட்டைக்கூட நயன்தாராவே கழுவி வைப்பார் என்று அலுவலக ஊழியர்கள் கூறுகிறார்கள்.

பார்க், பீச் என்று சுற்றுவதுதான் பொதுவாக காதலர்களின் வழக்கம். ஆனால் நயன் – விக்னேஷ் சிவன் ஜோடி அதிகமாக கோயில்களுக்குதான் செல்கிறார்கள். இருவருக்குமே பக்தி அதிகம்.

ஆரம்பத்தில் விக்னேஷ் சிவனின் அம்மாவுக்கு நயன்தாராவை பிடிக்காமலிருந்திருக்கிறது. ஆனால் பழகிய பிறகு அவரது மனதுக்கு மிகவும் நெருக்கமானவராக மாறியிருக்கிறார் நயன்.

நெய்ச் சோறும் சிக்கனும்தான் நயந்தாராவுக்கு மிகவும் பிடித்த உணவு. அதனால் தினமும் மெனுவில் இந்த இரண்டு ஐட்டமும் உண்டு.

நயன்தாராவின் இப்போதைய ஒரே நோக்கம். விக்னேஷ் சிவனை பெரிய இயக்குநராக ஆக்குவதுதான் தமிழின் முக்கியமான நட்சத்திரங்களிடம் விக்னேஷ் சிவன் குறித்து பேசுகிறார். விஜய்யிடம்கூட கூறியிருக்கிறார். இன்னும் விஜய் தரப்பிலிருந்து சம்மதம் வரவில்லை.

திருமணம் செய்துகொள்ளாமல் இப்போதைக்கு காதல் பறவைகளாக மட்டுமே இருப்பது என்று நயன் – வினேஷ் சிவன் ஜோடி முடிவெடுத்துள்ளது.

விக்னேஷ் சிவனை செல்லமாக ‘உய்’ என்றுதான் நயன் அழைக்கிறார். விக்னேஷ் சிவனும் நயனை அப்படித்தான் செல்லமாக அழைக்கிறார். இவர்கள் பாஷையில் ‘உய்’ என்றால் உயிர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...