No menu items!

காதல் படம் கஷ்டம் – லோகேஷ் கனகராஜ் கேள்வி பதில்

காதல் படம் கஷ்டம் – லோகேஷ் கனகராஜ் கேள்வி பதில்

கோலிவுட்டின் இப்போதைய ஹாட் இயக்குநரான லோகேஷ் கனகராஜ், நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் மற்றும் சில நட்சத்திரங்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார் அதிலிருந்து சில கேள்விகள்…

கேள்வி : இசையமைப்பாளர் அனிருத், லோகேஷ் காம்போ பற்றி சொல்லுங்கள்

பதில்: வார்த்தைகளே இல்லை, இது மேலும் தொடரும்.


கமல் : கமலஹாசனின் புஷ் அப் வீடியோவை எப்ப ரிலீஸ் பண்ணுவீங்க?

பதில் : ஜூன் 26-ல் வெளியிடுவேன்


கேள்வி : ஆண்டவர் கமலஹாசனுடன் உங்களின் சிறந்த அனுபவம் என்ன?

லோகேஷ் : எனது உலகநாயகனுக்கு ரத்த மேக்கப் போட்டதை என்னால் மறக்க முடியாது.


கேள்வி : அர்ஜுன் தாஸின் கதாபாத்திரம், கைதி திரைப்படத்தில் இறந்த பின் விக்ரமில் எப்படி வந்தார்?

லோகேஷ் : கைதி திரைப்படத்தில் அன்பு கதாப்பாத்திரத்தின் தாடை மட்டுமே நெப்போலியனால் உடைக்கப்பட்டது அதனால் தாடையில் தழும்புடன் விக்ரமில் வந்தார், கைதி 2 திரைப்படத்தில் இது பற்றி மேலும் தெரிந்து கொள்வீர்கள்.


கேள்வி : உங்கள் டீமின் லைட் மேன் பற்றி சொல்லுங்க.

லோகேஷ் : எனது பார்வையின் தூண்கள் அவர்கள்தான். இந்த வாய்ப்பை பயன்படுத்தி லைட் ஆபிஸர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.


கேள்வி : ஹிட் பட வரிசைகளை தொடர்ந்து, உங்களுக்கு மோட்டிவேஷன் தருவது எது?

லோகேஷ் : ஒரு பொறுப்பான திரைப்பட இயக்குநராக இருக்க வேண்டும்


கேள்வி : தரமான சினிமாக்களை உருவாக்க நினைக்கும் இளம் இயக்குநர்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன?

லோகேஷ் : ஃபாலோ யுவர் ஹார்ட், கடைசி வரை முயற்சி செய்ய வேண்டும்.


கேள்வி : காதல் படம் எடுப்பீர்களா?

லோகேஷ் : கஷ்டம் ப்ரோ


நடிகர் சாந்தனு : லோகேஷின் மல்டி வெர்ஸில் பார்கவ் (மாஸ்டர் பட கேரக்டர்) மீண்டும் வர வாய்ப்பு இருக்கா? ஹானஸ்டா சொல்லணும்.

லோகேஷ் : சாரி மச்சான், பார்கவ் செத்துட்டான்.


நடிகர் கலையரசன் : தளபதி 67-ன் ஆடிஷன் எப்போது?

லோகேஷ்: உங்களுக்கு ஆடிஷனே இல்லை சார்.


நடிகர் அர்ஜுன் தாஸ் : கமல் தந்த உங்க புது கார்ல எப்போ என்ன ரைடு கூட்டீட்டு போவீங்க?

லோகேஷ் : எனி டைம் யூ ஆர் ஃபிரீ மச்சி


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...