No menu items!

மலையாள சினிமாவில் யோகிபாபு

மலையாள சினிமாவில் யோகிபாபு

மலையாளத்தில் அதிக வரவேற்பை பெற்ற ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ படத்தை இயக்கிய விபின் தாஸ், அடுத்தப் பட வேலைகளில் இறங்கி இருக்கிறார். இப்படத்திற்கு ‘குருவாயூரம்பலநடையில்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்.

இந்தப் படத்தில் மலையாள சினிமாவின் ’கமர்ஷியல் கலகக்காரர்’ ப்ரிதிவி ராஜ் நடிக்கிறார். இவரோடு பசில் ஜோசப்பும் நடிக்க இருக்கிறார்.

அதனால் என்ன இது மலையாளப் படம் தானே என்கிறீர்களா?

ஆமாம், ஆனால் இப்படத்தில் நம்மூர் யோகிபாபுவும் நடிக்கிறார் என்பது லேட்டஸ்ட் செய்தி. இங்கே டைமிங் காமெடியில் கல்லா கட்டும் யோகிபாபு, காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மலையாளப் படங்களில் நடிக்க இருப்பதால், அங்கே ஒரு ரவுண்ட் அடிப்பாரா என்ற எதிர்பார்பு உருவாகி இருக்கிறது.

யோகிபாபு ஒரு பக்கம் சந்தோஷம் இருந்தாலும், மற்றொரு பக்கம் கொஞ்சம் வருத்தமும் இருக்கிறதாம்.

காரணம் வைட்டமின் எம் பிரச்சினைதான். இங்கே யோகிபாபு ஒரு நாளைக்கு 4 லட்சம் முதல் 6 லட்சம் வரை சம்பளமாக வாங்குகிறாராம். ஆனால் மலையாள சினிமாவில் ஒட்டுமொத்த படத்திற்கே பத்து லட்சம்தான் கொடுப்பார்கள்.


5 கோடிக்கு கார் வாங்கிய மோகன்லால்!

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் ஒரு கலா ரசிகர். கலை ரசிகராக இருந்தாலும் இவருக்கு சொகுசு கார்கள் மீது ஆர்வம் மிக அதிகம். இதனால் அவ்வப்போது புது வகையறா கார்களை வாங்கி, ரவுண்ட் அடிப்பது வழக்கம்.

இப்போது அவர் புதிதாக ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராஃபி கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். இதன் மதிப்பு சுமார் 5 கோடி.

தனது மனைவிக்கு தனது அன்பு பரிசாக இதை பரிசளித்து இருக்கிறார்.

இந்த புதிய ரேஞ்ச் ரோவர் கார் உடன் இவர் வசம் Lamborghini Urus, Toyota Vellfire, Mercedes Benz GL 350 மற்றும் Toyota Land Cruiser.போன்ற கார்கள் இருக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...