No menu items!

உலகக் கோப்பை: இந்திய வெற்றிகளுக்கு இதுதான் காரணம்!

உலகக் கோப்பை: இந்திய வெற்றிகளுக்கு இதுதான் காரணம்!

இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா ஆடும் ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும், ஆட்ட நாயகன் விருதைப் பெறுவது யார் என்ற கேள்விக்கு அடுத்ததாக கேட்கப்படும் கேள்வியாக, ‘சிறந்த பீல்டர் பதக்கம்’ யாருக்கு என்ற கேள்வி இருக்கிறது. ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும், அன்றைய போட்டியில் சிறப்பாக பீல்டிங் செய்த இந்திய வீர்ரை தேர்ந்தெடுத்து அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

யார் காரணம்?

பொதுவாக ஒவ்வொரு அணியும் சிறந்த பேட்ஸ்மேன்களையும், பந்து வீச்சாளர்களையும்தான் கொண்டாடும். ஆனால் அதற்கு மாறாக இந்திய அணி  இப்போது இந்த விருது மூலம் சிறந்த பீல்டர்களையும் கவுரவித்து வருகிறது. இந்த புதிய கவுரவம் இந்திய பீல்டர்களுக்கு கிடைக்க முக்கிய காரணமாக இருப்பவர், அணியின் பீல்டிங் பயிற்சியாளரான டி.திலிப்.

எதற்காக இந்த விருது?

உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்திய அணியின் பீல்டிங் மிகவும் மோசமாக இருந்திருக்கிறது. ஆசிய கோப்பை, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடர், ஆஸ்திரேலிய தொடர்  போன்றவற்றில் இந்திய வீர்ர்கள் பீடிங்கில் பெரிய அளவில் கோட்டை விட்டனர். பல கேட்ச்கள் தவறவிடப்பட்டன. இது இந்திய அணியை கடுமையாக பாதித்தது. சிறப்பாக பீல்டிங் செய்து கேட்ச்களைப் பிடித்தால் எதிரணியின் விக்கெட்களை கொய்யலாம் என்பது ஒருபுறம் இருக்க, மற்றொரு புறம் பவுண்டரிகள் செல்லாமல் தடுப்பது, எதிரணி பேட்ஸ்மேன்கள் சிங்கிள்ஸ் எடுக்க விடாமல் பார்த்துக்கொள்வது ஆகியவற்றின் மூலம் சுமார் 30 ரன்களையாவது சேமிக்க முடியும். இதனால் பீல்டிங்கின் முக்கியத்துவத்துவத்தை வீர்ர்களுக்கு உனர்த்துவதர்காக ஒவ்வொரு ஆட்டத்துக்குப் பிறகும் சிறந்த பீல்டருக்கு மெடல் (பதக்கம்) வழங்கும் வழக்கத்தை திலிப் அறிமுகப்படுத்தி உள்ளார்.

யாரெல்லாம் வென்றார்கள்

திலிப் இந்த விருதை அறிமுகப்படுத்திய பிறகு, முதலில் இந்த விருதை வென்றவர் விராட் கோலி. அவரைத் தொடர்ந்து ஷர்துல் தாக்குர், கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஸ்ரேயஸ் ஐயர் ஆகிய 5 வீர்ர்கள் கடந்த 5 போட்டிகளில் சிறந்த பீல்டிங்குக்கான மெடல்களை வென்றுள்ளனர்.

மெடல் கொண்டுவந்த மாற்றம்

சிறந்த பீல்டருக்கான மெடல் வழங்கப்படும் என்று தெரிந்தபின்னர் அதைக் கைப்பற்றுவதற்காக மைதானத்தில் வீர்ர்களிடையே போட்டி அதிகரித்துள்ளது. கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ஜடேஜா போன்ற வீர்ர்கள் ஒவ்வொரு முறையும் பந்தை பாய்ந்து சென்று பிடித்த பிறகு, பெவிலியனில் இருக்கும் பீல்டிங் கோச்சை நோக்கி மெடல் தங்களுக்குதான் என்று சொல்வதைப் போல் பார்ப்பதை நாம் கவனித்திருப்போம். குறிப்பாக  ஒரு போட்டியில் டைவ் அடித்து கேட்ச்ச்சைப் பிடித்த ஜடேஜா, பீல்டருக்கான மெடலை அணிந்துகொள்வதுபோல் பாவனை செய்தார்.

 இப்படி ஒவ்வொரு வீர்ரும் மெடலுக்காக போட்டி போடுவது  அணிக்கு புத்துணச்சியை அளித்துள்ளது. பாகிஸ்தான், ஆஸ்திரேலியா போன்ற அணிகள் பீல்டிங்கில் சொதப்ப, இந்திய வீர்ர்கள் பதக்கத்துக்காக பாய்ந்து பாய்ந்து பந்துகளை பிடித்து வருகிறார்கள். இதனால் இந்திய அணி தாங்கள் ஆடிய 5 போட்டிகளிலும் வெற்றிபெற இந்த பதக்கமும் ஒரு முக்கிய காரணமாக  விளங்குகிறது. இதனால் புள்ளிப்பட்டியலிலும் இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது.

இந்த பதக்கம் கொண்டுவந்த மாற்றத்தால் இந்திய அணி உலகக் கோப்பையையும் வெல்லும் என்று நம்புவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...