No menu items!

Weekend ott – இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

Weekend ott – இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

ஜான்சி -2 (தமிழ் வெப்சீரிஸ்)டிஸ்னி ஹாட்ஸ்டார்

அஞ்சலி நடிப்பில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் கடந்த அக்டோபர் மாதம் வெளியான வெப் சீரிஸ் ஜான்ஸி. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நடக்கும் அநீதிகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த தொடருக்கு அப்போது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. இந்த தொடரின் இரண்டாவது சீசன் தற்போது வெளியாகி உள்ளது.

காட்டில் நடக்கும் ஒரு துப்பாக்கி சூடு சம்பவத்தில் தனது பழைய நினைவுகளை இழக்கிறார் ஜான்ஸி (அஞ்சலி). அந்த சம்பவத்துக்கு பிறகு காதலர் மற்றும் அவரது குழந்தையுடன் நகரத்தில் வசிக்கும் ஜான்ஸியை அவ்வப்போது அவரது வரும் பழைய நினைவுகள் மிரட்டுகிறது. ஒரு கட்டத்தில் தனது பழைய வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதை அறிவதற்காக புறப்படுகிறார். அப்போது அவர் சந்திக்கும் சவால்களை அடிப்படையாகக் கொண்டு கதை நகர்கிறது.

ஆக்‌ஷன் மற்றும் துப்பறியும் கதையை விரும்புபவர்களுக்கு ஏற்ற படம் இது.


Hunt for The Indian Mujahideen (இந்தி) – டிஸ்கவரி பிளஸ்

2003-ம் ஆண்டுமுதல் 2007-ம் ஆண்டுவரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் குண்டுவெடிப்புகளை நடத்திய இந்தியன் முஜாஹிதீன் என்ற தீவிரவாத அமைப்பினரை இந்திய உளவுத்துறை எப்படி கைது செய்தது என்பதை விளக்கும் ஆவணப் படம் Hunt for The Indian Mujahideen. வார்னர் பிரதர்ஸ் தயாரித்துள்ள இந்த ஆவணப் படம் இப்போது டிஸ்கவரி பிளஸ் ஓடிடியில் வெளியாகி உள்ளது.

தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்ட விசாரணை அதிகாரிகளின் வாய்மொழி வார்த்தைகளில் இந்த ஆவணப் படம் நகர்கிறது. துப்பறியும் கதைகளில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த ஆவணப் படம் மிகவும் பிடிக்கும். அத்துடன் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பைப் பற்றியும் நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம்.


காப்பா (மலையாளம்) – நெட்பிளிக்ஸ்

கர்ப்பமாக இருக்கும் மனைவி அன்னா பென்னுடன் திருவனந்தபுரத்துக்கு மாற்றலாகி வருகிறார் ஆசிப் அலி. அங்கு வந்த பிறகுதான் அவர் ஒரு தாதாவின் மகள் என்பதும், அவர்கள் குடும்பத்துக்கும் நகரின் மற்றொரு தாதாவான பிருத்விராஜின் கும்பலுக்கும் இடையே மோதல் இருப்பதும் தெரிய வருகிறது.
அப்பாவியான தன் மனைவியை அந்த மோதலில் இருந்து காப்பாற்ற விரும்பும் ஆசிப் அலி, பிருத்விராஜுடன் சமாதானம் பேசுகிறார். அதே நேரத்தில் அன்னா பென்னின் குடும்பத்தினர் அவரை முகமூடியாக பயன்படுத்தி பிருத்விராஜை அழிக்க நினைக்கிறார்கள். இந்த இரு கோஷ்டிகளின் மோதலின் முடிவு என்ன என்பதே படத்தின் கதை.

நாம் ஏற்கெனவே பார்த்த நிழல் உலக தாதாக்களின் மோதல்தான் கதை என்றாலும், சற்றும் எதிர்பார்க்காத க்ளைமேக்ஸ், படத்தை தூக்கி நிறுத்துகிறது. பரபரப்பான ஆக்‌ஷன் கதையை விரும்பும் ரசிகர்களுக்கு ஏற்ற படம்.


டிரைவர் ஜமுனா (தமிழ்) – ஆஹா

குடும்பத்தை காப்பாற்ற கால் டாக்ஸி டிரைவராக வேலை பார்க்கிறார் ஜமுனா (ஐஸ்வர்யா ராஜேஷ்). ஒரு நாள் அரசியல்வாதி மரகதவேலை ( ‘ஆடுகளம்’ நரேன்) கொல்வதற்காக கிளம்பும் கூலிப்படை, ஜமுனாவின் கால் டாக்ஸியில் ஏறுகிறது. இதை அறியும் போலீஸ், கூலிப்படையை துரத்துகிறது. போலீஸார் அவர்களைப் பிடிக்கிறார்களா?, அரசியல்வாதி கொல்லப்பட்டாரா? ஜமுனா தப்பினாரா என்பது போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கிறது படத்தின் க்ளைமேக்ஸ்.

இந்த படம் ஆஹா ஓடிடியில் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...