No menu items!

விஜய் வழியில் கீர்த்தி சுரேஷ்!

விஜய் வழியில் கீர்த்தி சுரேஷ்!

தமிழ் சினிமாவில் விஜய் இன்று அசைக்க முடியாத கமர்ஷியல் ஹீரோவாக, பாக்ஸ் ஆபிஸில் ஆதிக்கம் செலுத்தும் கில்லியாக இருக்கிறார்.

அவர் வளர்ந்து வரும் காலத்தில் இருந்தது இப்பொழுது வரை ரசிகர்களை அரவணைத்து செல்வதில் எந்தளவிற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறாரோ, அதேபோல் பத்திரிகை நண்பர்களுடன் நட்புப் பாராட்டுவதிலும் அதே அக்கறையுடன் இருந்தது வருகிறார். விஜயின் வளர்ச்சிக்கு அவரது கடின உழைப்பும், விடாமுயற்சியும் முக்கிய காரணமாக இருந்தாலும், ரசிகர்களின் அன்பும் பத்திரிகையாளர்களின் ஆதரவும் அணிலின் பங்களிப்பைப் போல கொஞ்சம் உதவியிருக்கிறது.

இதனால் சில சமயங்களில் அவர் நடிக்கும் படங்களில் பணியாற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தனது நன்றியைத் தெரிவிக்கும் வகையில் தங்க நாணயங்களை வழங்குவது உண்டு. ரசிகர்களுக்கும் அன்புப் பரிசுகளை வழங்குவதுண்டு.

இந்த தங்க நாணயம் நன்றி நவில்தலைதான் இப்பொழுது கீர்த்தி சுரேஷ் பின்பற்ற ஆரம்பித்திருக்கிறார்.

கீர்த்தி சுரேஷ் ‘தசரா’ என்ற தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிவடைந்தது.

ஷூட்டிங் முடிந்ததும் தனது மேனேஜரை அழைத்த கீர்த்தி சுரேஷ், அவரது காதில் கிசுகிசுத்து இருக்கிறார். சட்டென்று சுதாரித்து கொண்ட மேனேஜர், ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் யூனிட் ஆட்களை அப்படியே நோட்டம் விட்டிருக்கிறார். அப்புறம் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பியிருக்கிறார். கொஞ்ச நேரம் கழித்து வந்தவர், கீர்த்தி சுரேஷை பார்த்து எல்லாம் ஒகே என்பது போல் கண்ணசைத்து இருக்கிறார்.

உற்சாகமான கீர்த்தி சுரேஷ், பட யூனிட்டில் இருக்கும் எல்லோரையும் அழைத்து வருமாறு கூற, ஒட்டுமொத்த யூனிட்டும் வந்து நிற்க, ஒவ்வொருத்தருக்கும் 2 கிராம் தங்க நாணயத்தை தனது பரிசாக கொடுத்து நன்றி தெரிவித்திருக்கிறார்.

யூனிட்டில் மொத்தம் 130 பேர். அனைவருக்கும் கீர்த்தி சுரேஷின் அன்பு பரிசு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் மதிப்பு சுமார் ஆறு லட்சத்திற்கும் மேல் என்கிறார்கள்.

அட தளபதி பாணியில் கீர்த்தி சுரேஷ் செல்கிறாரே என்று உற்சாகத்தில் இருக்கிறது தசரா பட யூனிட்.


அடுத்த ரவுண்டுக்கு தயாராகும் ரஜினிகாந்த்!

ரஜினி இனி நடிக்க மாட்டார். உடல்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்பது போன்ற ஒரு செய்தி கொஞ்சம் முன்பு உலா வந்தது.

ஆனால் ‘ரஜினி அடுத்த ரவுண்ட்டுக்கு தயாராக இருக்கிறாராம். ஜெயிலருக்கு அடுத்து மகள் ஐஸ்வர்யா இயக்கும் படத்தில் கேமியோ ரோல் என அடுத்தடுத்து படங்களில் நடிப்பதில் அதிக மும்முரம் காட்டி வருகிறார்.

குறிப்பாக ஒன்றிரண்டு படங்கள் எடுத்த இளம் இயக்குநர்களிடம் அதிகம் கதை கேட்டு வருகிறார். இப்படி கதை சொல்லியிருக்கும் இயக்குநர்களின் பட்டியல் கொஞ்சம் கொஞ்சமாக நீள்கிறது.

ரஜினிக்கு கதை சொல்லியிருக்கும் இளம் இயக்குநர்களின் பட்டியலில் லேட்டஸ்ட்டாக சேர்ந்திருப்பவர்கள் ‘லவ் டுடே’ பிரதீப் ரங்கநாதன், அடுத்து ‘ஜெய்பீம்’ த.செ. ஞானவேல்.

இந்த இருவரின் கதையைக் கேட்ட ரஜினி, சபாஷ், பவுண்டட் ஸ்கிரிப்ட் ரெடி பன்ணுங்க என்று சொல்லியதாக பேச்சு அடிப்படுகிறது.

பிரதீப் ஸ்கிரிப்ட்டில் இன்னும் கொஞ்சம் வேலைகள் இருக்கிறதாம். ஞானவேல் சொல்லியிருப்பது ஒரு சோஷியல் ட்ராமா வகையறா கதையாம்.

இதனால் ரஜினி170 படத்தை இந்த இருவரில் யாராவது ஒருவர் இயக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.


ஆக்ஸிலேட்டரை முறுக்கும் அஜித்!

‘துணிவு’ படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு அஜித்தை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

இந்த உற்சாகமான மனநிலையைக் கொண்டாட மீண்டும் தனது பைக் ஆக்ஸிலேட்டரை முறுக்க திட்டமிட்டு வருகிறாராம்.

விக்னேஷ் சிவன் கதை ஒன்லைன் தயார் என்றாலும், திரைக்கதையில் கொஞ்சம் நுணுக்கமான எழுத்துவேலைகள் இருக்கிறதாம். கதையைக் கேட்டு வாய்விட்டு சிரித்த அஜித், இந்த கதைக்கும் நான் கெட்டப்பை மாற்றவேண்டாம் போல இருக்கே என்று கமெண்ட் அடித்தாராம். அதனால் அதை முழுமையாக எழுதி முடிப்பதற்குள் தாய்லாந்துக்கு பைக் பயணம் செல்ல அஜித் யோசித்து வருகிறாராம்.

இந்த முறை ஒரு பெரிய ரவுண்ட் அடிக்க திட்டமிட்டு இருக்கும் அஜித், ஆஃப் ரோட் ரேசிங்கில் கலந்து கொள்ளலாமா என்ற யோசனையிலும் இருக்கிறாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...