No menu items!

Weekend ott – இந்த வாரம் என்ன பார்க்கலாம்

Weekend ott – இந்த வாரம் என்ன பார்க்கலாம்

துணிவு (தமிழ்) – நெட்பிளிக்ஸ்

சென்னையில் உள்ள ஒரு வங்கியில் சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ள 500 கோடி ரூபாயை கொள்ளையடிக்க ஒரு கும்பல் திட்டமிடுகிறது. அந்த கும்பலுக்கு ஒரு காவல்துறை அதிகாரியும் உடந்தையாக இருக்கிறார். வங்கிக் கொள்ளையில் ஈடுபடும் நேரத்தில், எதிர்பாரத விதமாக அந்த கும்பலை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறார் சர்வதேச கேங்ஸ்டரான அஜித். அங்குள்ள பணத்தை கொள்ளையடிக்க திட்டமிடுகிறார். அவரது இந்த செயலுக்கு பின்னணி என்ன? பணத்தை அவரால் கொள்ளையடிக்க முடிந்ததா என்பதுதான் படத்தின் கதை.

அஜித், மஞ்சு வாரியர், சமுத்திரகனி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்த இப்படம் கடந்த மாதம் திரைக்கு வந்தது. இப்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. கேங்ஸ்டர் டைப் படங்களை விரும்புபவர்களுக்கு ஏற்ற படம் இது.


லவ் ஷாதி டிராமா (Love Shaadi Drama) தமிழ் – டிஸ்னி ஹாட் ஸ்டார்

பிரபலங்கள் தங்களின் திருமணங்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்புவது தற்போது ஃபேஷனாகி வருகிறது. அந்த வகையில் நடிகை ஹன்ஸிகாவின் திருமணம் இப்போது ‘லவ் ஷாதி டிராமா’ என்ற பெயரில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகி உள்ளது.

நடிகை ஹன்ஸிகா, மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் சோஹேல் கதுரியாவை கடந்த டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டார். ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் அவர்களின் திருமணம் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. அந்த திருமணம் இப்போது, ‘லவ் ஷாதி டிராமா’ என்ற பெயரில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. கலகலப்பான நடனம், ஆட்டம் பாட்டத்துடனும் திரைப்படத்தைப் போலவே பல உணர்ச்சிகளை கொண்டதாக இந்த வீடியோ உருவாகியுள்ளது.


ஃபார்ஸி ( Farzi -வெப்சீரிஸ் – இந்தி) – அமேசான் பிரைம்

விஜய் சேதுபதி நடித்துள்ள முதல் இந்தி வெப் சீரிஸான ‘ஃபார்ஸி’ அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகி உள்ளது. விஜய் சேதுபதியுடன் ஷாகித் கபூர், ராஷி கன்னா உள்ளிட்டோர் இந்த தொடரில் நடித்துள்ளனர். ராஜ், டிகே ஆகிய இயக்குநர்கள் இந்த வெப் சீரிஸை இயக்கி உள்ளனர். இந்த இயக்குநர்கள் ஏற்கெனவே இயக்கிய ‘ஃபேமிலி மேன்’ தொடர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதால், ‘ஃபார்ஸி’ தொடருக்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது.

யாரும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு கள்ள நோட்டுகளை துல்லியமாக அச்சிட்டு வெளியிடுபவர் ஷாகித் கபூர். அவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரி விஜய் சேதுபதி. இவர்கள் இருவருக்கும் இடையில் நடக்கும் போட்டிதான் ‘ஃபார்ஸி’ வெப் சீரிஸின் கதை. ஃபேமிலிமேன் வெப் சீரிஸைப் போலவே இந்த வெப் சீரிஸிலும் பல காட்சிகள் பரபரப்பாக உள்ளன. இத்தொடரை தமிழிலும் பார்க்கலாம்.


சலாம் வெங்கி ( Salaam Venky – இந்தி) – ஜீ5

நடிகை ரேவதியின் இயக்கத்தில் கஜோல் நடிப்பில் கடந்த ஆண்டு இந்தியில் வெளியான படம் சலாம் வெங்கி. இப்படம் இப்போது ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

ஒரு தாய்க்கும் ‘’Duchenne Muscular Dystrophy’ என்ற நோயால் பாதிக்கப்பட்ட மகனுக்கும் இடையிலான உறவைப் பற்றி இப்படம் பேசுகிறது. கோலவெண்ணு வெங்கடேஷ் என்ற செஸ் வீரரின் உண்மைக் கதையை அடிப்படையாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

செண்டிமெண்ட் கதைகளை விரும்புபவர்களுக்கு இப்படம் மிகவும் பிடிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...