No menu items!

240 கோடி ரூபாய்க்கு ஒரு அபார்ட்மெண்ட்!

240 கோடி ரூபாய்க்கு ஒரு அபார்ட்மெண்ட்!

நீங்கள் குளித்துவிட்டு என்ன டவலில் துடைப்பீர்கள்?

டர்க்கி டவலா?

உங்களுக்கும் இந்த 240 கோடி ரூபாய் மும்பை அபார்ட்மெண்டுக்கும் தொடர்பு இருக்கிறது.

240 கோடி ரூபாய் கொடுத்து 30 ஆயிரம் சதுர அடி பெண்ட்ஹவுஸ் ஸ்டைல் அபார்ட்மெண்டை வாங்கியிர்க்கும் பி.கே.கோயங்கா செய்வது டவல் பிசினஸ். அவர் நடத்தும் வெல்ஸ்பன் (welspun ) என்ற நிறுவனம்தான் உலகிலேயே மிகப் பெரிய டவல் தயாரிப்பு நிறுவனம்.

டவல் விற்றே 240 கோடி ரூபாய்க்கு பெண்ட் ஹவுஸ் வாங்கியிருக்கிறார்.

அந்த பெண்ட் ஹவுசைப் பார்ப்போம்.

மும்பை ஒர்லியில் அன்னிபெசண்ட் அவென்யூவில் ஒரு அபார்ட்மெண்ட் காம்ப்ளக்ஸ் இருக்கிறது. மிக மிக மிக பெரிய கோடீஸ்வரர்கள் மட்டுமே இந்தக் குடியிருப்பில் வீடு வாங்க முடியும்.

திரீ சிக்ஸ்டி வெஸ்ட் என்ற இந்த அபார்ட்மெண்ட் காம்ப்ளக்ஸில் அமெரிக்காவில் இருந்த இரட்டை கோபுரங்கள் போல் இரண்டு வானுயர்ந்த கட்டடங்கள் இருக்கின்றன.

இந்த இரட்டை கோபுரங்களில் டவர் ஏ 66 மாடிகள் கொண்டது. டவர் பி 90 மாடிகளைக் கொண்டது. இவற்றில்தான் இந்த லக்சரி வீடுகள் அமைந்திருக்கின்றன. அனைத்தும் இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களுக்கானது.

இங்கிருக்கும் அப்பார்ட்மெண்டுகள் 5000 முதல் 10000 சதுர அடி வரை பரப்பளவு கொண்டவை.

இவற்றில் 63, 64, 65வது மாடிகளை வாங்கியிருக்கிறார் கோயங்கா. இதன் மொத்த பரப்பு சுமார் 30 ஆயிரம் சதுர அடி. விலை 240 கோடி ரூபாய்.

இந்த 30 ஆயிரம் சதுர அடிகளை ஒரே பெண்ட் ஹவுஸ் என்று சொல்லப்படும் சொகுசு அபார்ட்மெண்டாக உருவாக்கப்படுகிறது.

த்ரி சிக்ஸ்டி வெஸ்ட் குடியிருப்பில் அனைத்து வசதிகளும் ஐந்து நட்சத்திர தரத்தில் இருக்கிறது. ரெஸ்டாரண்டுகள், உடற்பயிற்சி கூடங்கள், பொழுதுபோக்கு மையங்கள்…என ஏகப்பட்ட வசதிகள் உண்டு. கடுமையான பாதுகாப்பும் உண்டு. ரிட்ஸ் கார்ல்டன் ஒட்டலும் இந்தக் கட்டடத்தில் இருக்கிறது.

240 கோடி ரூபாய்க்கு வாங்கியதை ஆ வென்று பார்த்துக் கொண்டிருக்கையில் இந்த குடியிருப்பு குறித்து இன்னொரு செய்தியும் உண்டு.

இந்த வெஸ்ட் எண்ட் த்ரி சிக்ஸ்டி குடியிருப்பில் 23 வீடுகளை இன்னொரு கோடீஸ்வரர் வாங்கியிருக்கிறார். அதன் மொத்த மதிப்பு 1200 கோடி ரூபாய்.

டி மார்ட் குழுமத்தின் நிறுவனர் ராதாகிருஷ்ணன் தாமனி தான் அந்தக் கோடீஸ்வரர்.

கோடிகள் கொடுத்து வீடுகள் வாங்குவது டி மார்ட் குழும நிறுவனர்களுக்கு புதிதல்ல. இதற்கு முன்பு 2021ஆம் ஆண்டு ராதாகிருஷ்ணனும் அவரது சகோதரர் கோபிகிஷனும் மும்பை மலபார் ஹில் பகுதியில் ஒரு பங்களா வாங்கினார்கள்.

அதன் மதிப்பு 1001 கோடி ரூபாய்.

ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் 60 ஆயிரம் சதுர அடியில் அந்த பங்களா இருக்கிறது.

ராதாகிருஷ்ணன் மனைவி ஸ்ரீகாந்த்தேவியும் தன் பங்குக்கு ஒரு பங்களா வாங்கியிருக்கிறார். அதன் மதிப்பு 80 கோடி ரூபாய்.

இந்த மூன்று வருடங்களில் மட்டுமே ராதாகிருஷ்ணன் குடும்பத்தினர் 2300 கோடி ரூபாய்க்கு வீடுகள் வாங்கியிருக்கிறார்கள்.

மும்பையில் நூற்றுக் கணக்கான கோடிகள் கொடுத்து வீடுகள் வாங்குவது மும்பை தொழிலதிபர்களின் ஃபேஷனாக இருக்கிறது.

2022ஆம் ஆண்டு மட்டும் மும்பையில் நூறு கோடி ரூபாய்க்கு மேல் விற்ற வீடுகள் 9.

50 கோடியிலிருந்து 100 கோடி ரூபாய்க்குள் விற்ற சொத்துக்கள் 27.

யார் சொன்னது இந்தியா ஏழை நாடு என்று?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...